சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதெல்லாம் எங்க தொகுதி... பிரசாரத்தில் தன்னிச்சையாக குதித்த பாஜக.. அதிர்ச்சியில் அதிமுக

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தொகுதிகள் எவை எவை? என தீர்மானிக்கப்படாத நிலையில் பல இடங்களில் வேட்பாளர்களையே பாஜக களமிறக்கி இருப்பது அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அதிமுக கூட்டணியில் 60 இடங்களில் தொடங்கி 40-ல் வந்து நின்றது பாஜக. ஆனால் இவ்வளவு தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்கவே முடியாது என்கிற திட்டவட்டமான நிலையை அதிமுக தெரிவித்து வந்தது.

இதையடுத்து அதிமுக அணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டது. அதேநேரத்தில் எந்தெந்த தொகுதிகள் என்பது இன்னமும் உறுதியாகவில்லை. இந்த தொகுதி உடன்பாடு குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் எல். முருகன், மகிழ்ச்சியும் இல்லை.. கவலையும் இல்லை என கூறினார்.

தொகுதிகள் ஆக்கிரமிப்பு

தொகுதிகள் ஆக்கிரமிப்பு

ஆனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு முன்னரே பாஜகவே தாமாகவே சில தொகுதிகளை கைப்பற்றிக் கொண்டது. அந்த தொகுதிகளில் வேட்பாளர்களையும் நிறுத்தி பிரசாரத்தையும் பாஜக தன்னிச்சையாக தொடங்கிவிட்டது.

குமரிக்கு மல்லுக்கட்டு

குமரிக்கு மல்லுக்கட்டு

பாஜகவின் பிரபலங்களான நடிகைகள் குஷ்பு, கவுதமி, மாஜி எம்.பி. சசிகலா புஷ்பா, நயினார் நாகேந்திரன் என பலருக்கும் இந்த தொகுதிதான் என பாஜகவே சில இடங்களைக் கைப்பற்றிக் கொண்டுவிட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அத்தனை சட்டசபை தொகுதிகளும் தங்களுக்குதான் என அடம்பிடிக்கிறதாம் பாஜக.

பாஜகவின் அடம்

பாஜகவின் அடம்

அத்துடன் இல்லாமல் அதிமுக வெல்லும் வாய்ப்புள்ள கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சில முக்கிய தொகுதிகளுக்கும் பாஜக மல்லுக்கட்டுகிறதாம். குறிப்பாக தென்மாவட்ட கோவில் நகரங்களை குறிவைத்து அதிமுகவிடம் பிடிவாதம் காட்டுகிறதாம் பாஜக.

அதிர்ச்சியில் அதிமுக

அதிர்ச்சியில் அதிமுக

பாஜகவின் இந்த தன்னிசையான போக்கை அதிமுக தரப்பு இம்மியளவுக்கு கூட விரும்பவில்லை. இப்படி ஒரு அடாவடித்தனமான கட்சியாக, கூட்டணியாக ஒருபோதும் எந்த கட்சியும் நடந்து கொண்டதே இல்லை என்பது அதிமுக மூத்த தலைவர்களின் கருத்து. தேர்தல் களத்திலேயே இப்படி என்றால் ஜெயித்துவிட்டார்கள் எனில் என்ன என்ன செய்வார்களோ? என்கிற ஆதங்கமும் அவர்களிடம் வெளிப்படுகிறது.

English summary
Sources said that AIADMK senior leaders very upset over the BJP's attitude on the Seat Sharing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X