சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கேம் சேஞ்ச்".. அதிமுகவுக்கு 137 இடங்கள்.. திமுகவோ "ஜஸ்ட் 97" மட்டுமே.. சொல்வது நியூஸ் ஜெ

137 இடங்களை பிடித்து மீண்டும் அதிமுகவே ஆட்சி பிடிக்கும் என்று ஒரு கணிப்பு கூறுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: திமுகதான் அடுத்து ஆட்சி அமைக்கும் என்பது எக்ஸிட்போல்கள் மூலம் நிரூபணமாகி உள்ள நிலையில், அதிமுக 137 இடங்களை பிடித்து, மீண்டும் ஆட்சி அமைக்க போகிறது என்று ஒரு கருத்து கணிப்பு கூறுகிறது.. இதை சொல்லியிருப்பது நியூஸ் ஜெ.

கடந்த காலங்களில் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மறைவுக்கு பிறகு நடக்கும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் என்பதால், மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தேர்தலாக இது அமைந்துள்ளது..

எனவேதான், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில், நேற்று பல்வேறு நிறுவனங்கள் நடத்திய எக்ஸிட் போல்களில் திமுகவுக்கே பெரும்பான்மை என்று கூறப்பட்டுள்ளன..

 'முகவர்களுக்கான கட்டுப்பாடுகள் சாத்தியமில்லை...' - தேர்தல் ஆணையத்திடம் திமுக கடிதம் 'முகவர்களுக்கான கட்டுப்பாடுகள் சாத்தியமில்லை...' - தேர்தல் ஆணையத்திடம் திமுக கடிதம்

அதிமுக

அதிமுக

மொத்தத்தில், திமுக கூட்டணி 170 முதல் 190 வரையிலான தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும், அதிமுக கூட்டணி 60 முதல் 70 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அமமுகவுக்கு 4 முதல் 6 தொகுதிகளில் வெற்றி பெறக்கூடும் என்றும், அதே சமயம், பிற கட்சிகள் எதுவும் வெற்றி பெற வாய்ப்பில்லை என்றும் கூறியிருந்தது. தேர்தலுக்கு முந்தைய கணிப்புகளும் இப்படித்தான் தெரிவித்திருந்த நிலையில், இந்த எக்ஸிட் போல்கள் அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறது.

 அமைச்சர்கள்

அமைச்சர்கள்

இந்த முறை அதிமுக வெற்றி பெறுவதே சந்தேகம் என்றுதான் முன்பிருந்தே அரசியல் நோக்கர்களும் சொல்லி வருகிறார்கள்.. பெரும்பாலான அமைச்சர்களும் கிட்டத்தட்ட அந்த மனநிலைக்கே சென்று விட்டனர்.. வெளிப்படையாக யாரும் காட்டிக்கொள்ளவில்லையே தவிர, எல்லாருக்குமே ஒருவித கலக்கம் இருந்தது.. இந்நிலையில், நியூஸ் ஜெ. சேனலில் ஒரு கணிப்பு வெளியாகி உள்ளது.. மண்டல வாரியாக பிரித்து கணித்து, அதிமுகதான் வெற்றி என்று அறுதியிட்டு சொல்லி உள்ளனர்.

 மத்திய மண்டலம்

மத்திய மண்டலம்

மத்திய மண்டலத்தில் உள்ள 48 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 25 இடங்களை கைப்பற்றும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை மண்டலத்தில் உள்ள மொத்தம் 46 தொகுதிகளில் 20 தொகுதிகளில் அதிமுகதான் வெற்றி பெறும் என்றும், வடக்கு மண்டலத்தில் உள்ள மொத்தம் 43 தொகுதிகளில் 30 இடங்களை அதிமுக கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கணிப்பு

கணிப்பு

அதேபோல, தென்மண்டலங்களில் உள்ள 47 தொகுதிகளில் 23 தொகுதிகளையும், மேற்கு மண்டலத்தில் உள்ள 50 தொகுதிகளில் 39 தொகுதிகளை அதிமுகவும் வெல்லக்கூடும் என்று அந்த கணிப்பு கூறுகிறது. டோட்டலாக, 234 தொகுதிகளில் 137 தொகுதிகளில் அதிமுகவே ஜெயிக்கும், அந்த வகையில் மீண்டும் அதிமுகவே ஆட்சி கட்டிலில் அமரும் என்றும் அந்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அதிமுகவுக்கு 45 சதவீத வாக்குகளை அள்ளும் என்கிறார்கள்..

 நியூஸ் ஜெ.

நியூஸ் ஜெ.

ஆனால் திமுகவோ வெறும் 97 மட்டும்தானாம்.. பிற கட்சிகள் அதுகூட கிடையாதாம். ஒரு இடத்தில்கூட ஒரு கட்சியும் ஜெயிக்காது என்று அந்த கணிப்பில் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. எல்லாப் பேரும் திமுக பக்கமே வெளிச்சத்தை திருப்பி வரும் நிலையில் நியூஸ் ஜெ. மட்டும் அதிமுக பக்கம் திருப்பி விட்டு தொண்டர்களை சற்று ஆறுதல்படுத்தியுள்ளது.

English summary
ADMK will win in 137 Constitution, DMK only 97, Exit Polls
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X