ட்ரெண்டிங்கில் சச்சின் பைலட்..தேர்தல் தோல்விக்குப் பிறகு மாற்றம் வருமா?- காங்கிரஸில் என்ன நடக்கிறது?
சென்னை: நடந்து முடிந்துள்ள ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்ததுபோல் இல்லை. காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவராக சச்சின் பைலட் நியமிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் எழத்தொடங்கியுள்ளன.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநிலங்களுக்கு தேர்தல் நடந்தது. அந்த வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டு வருகிறது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தேர்தல் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியைத் தவிர வேறு எந்த கட்சிக்கும் கசப்பான அனுபவமாகவே இருக்கிறது.

காங்கிரஸ்
இந்த 5 மாநில தேர்தலில், எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கவில்லை. மாறாக, பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைப் பறிகொடுத்திருக்கிறது. மற்ற மாநிலத்தில் போட்டி கொடுக்கும் அளவுக்குக் கூட காங்கிரஸ் கட்சி இல்லை என்பது தான் உண்மை. காங்கிரஸின் இந்த நிலமை கண்ட, அதன் தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். மக்களின் இந்த முடிவை ஏற்றுக்கொள்வதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

தேர்தல் முடிவுகள்
நடந்துமுடிந்துள்ள இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி பஞ்சாபில் 117 தொகுதியில் 18 இடத்தில் முன்னிலையில் இருக்கிறது. கோவாவில் 11 இடத்திலும், மணிப்பூரில் 6 இடத்திலும், உத்தரகாண்டில் 18 இடத்திலும், உத்தரப்பிரதேசத்தில் 2 இடத்திலும் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது. கோவா மற்றும் மணிப்பூரில் காங்கிரஸ் கட்சி போட்டி கொடுத்து தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பிருக்கும் என நினைத்தது. ஆனால் அங்கும் காங்கிரஸ் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

என்ன காரணம்
யுத்தியோடு

தலைமை
காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சோனியா காந்திக்கு உடல்நிலை சரியில்லாததால், 2017ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றார். புதுரத்தம் பாய்ந்ததாக காங்கிரஸ் கொண்டாடியது. அது அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் ராகுல்காந்தி.

சச்சின் பைலட்
இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு சரியான தலைமை இல்லாததால் தான் இந்த தோல்வி கிடைத்திருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியைத் தேடித்தந்த சச்சின் பைலட்டை காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமினம் செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சச்சின் பைலட் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். 'மூழ்கப் போகும் கப்பலை இந்த பைலட் தான் காப்பாற்றுவார்' என்றெல்லாம் ட்வீட் செய்துவருகிறார்கள் நெட்டிசன்கள்.

சச்சின் ஏன்?
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அசோக் கெல்டா முதல்வராக இருந்து வருகிறார். தேர்தல் நேரத்தில் சச்சின் பைலட் செய்தபணிகள், பிரச்சாரம் ஆகியவற்றால், தேர்தலில் வென்றால் சச்சின் பைலட் முதல்வராவார் என்று பேசப்பட்டது. அதற்கு ஏற்றார்போல் சச்சின் பைலட்டை முதல்வராக்குவதாக ராகுல் காந்தியும் தெரிவித்திருந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகின. ஆனால், கடைசிநேரத்தில் ஏற்பட்ட குழப்பம், உள்கட்சி மோதல் ஆகியவற்றால், மூத்த தலைவர் அசோக் கெலாட் முதல்வராகினார்.

அதிருப்தி
இதனால், சச்சின் பைலட் இப்போது வரை அதிருப்தியில் இருக்கிறார். மத்தியப்பிரதேசத்தில் உட்கட்சிப் பூசலால் ஆட்சியை இழந்தது காங்கிரஸ். அதேபோல் ராஜஸ்தானிலும் நடக்கக்கூடாது என சச்சின் பைலட்டை அழைத்துப் பேசினார் ராகுல் காந்தி. இருப்பினும், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையிலான கோஷ்டி பூசல், உரசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

உழைப்பு
ராஜஸ்தானில் தன்னுடைய கடினமான உழைப்பால்தான் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்குவந்துள்ளதால், கட்சியைவிட்டு விலகமாட்டேன் எனவும் சச்சின் பைலட் தெரிவி்த்திருந்தார். சச்சின் பைலட் ராஜஸ்தான் காங்கிரஸ் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதேபோல் கட்சியை அவரிடம் கொடுத்தால், அடுத்தடுத்த வெற்றியைக் கொண்டுவருவார் என அவரது ஆதரவாளர்கள் ஐந்து மாநில தோல்விக்குப் பிறகு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications