"சோக்கர்ஸ்" கனவை தகர்த்த நெதர்லாந்து.. மழையால் மோசம் போனதா தென்னாப்பிரிக்கா?
சென்னை: டி20 உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணியுடன் தோல்வியடைந்து மீண்டும் சோக்கர்ஸ் பட்டத்திற்கு தென்னாப்பிரிக்கா அணி சொந்தமாகியுள்ளது. இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் சிறிய அணிகள் என்று யாரும் இல்லை என்பதை நெதர்லாந்து அணி ரசிகர்களுக்கும் உணர்த்தியுள்ளது.
நடப்பு ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் பல வகைகளில் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்து வருகிறது. சிறிய அணிகளாக பார்க்கப்பட்ட நமிபியா, நெதர்லாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து உள்ளிட்ட அணிகள் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.
ஐசிசி தொடரில் சிறிய அணிகள் பங்கேற்பதால் ஏற்படும் சுவாரஸ்யத்தை ரசிகர்கள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் உலகக்கோப்பை தொடர் அமைந்துள்ளது. குறிப்பாக இங்கிலாந்து அணியை அயர்லாந்தும், பாகிஸ்தான் அணியை ஜிம்பாப்வே-யும் வீழ்த்தியது இரண்டு குரூப்பில் உள்ள அணிகளிடையே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

நெதர்லாந்து - தென்னாப்பிரிக்கா மோதல்
இந்த நிலையில் தான் தென்னாப்பிரிக்கா அணியின் அரையிறுதி கனவை கடைசி நேரத்தில் நெதர்லாந்து அணி கலைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலையில் கண்டிக்காக நெதர்லாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா வெற்றிபெறும் என்று வர்ணனையாளர்களே முன் முடிவுடன் பணிகளை தொடங்கியபோது, 'இங்கு அந்த சீனெல்லாம் இல்லை' என்று பதிலடி கொடுக்கும் வகையில் நெதர்லாந்து அணியின் செயல்பாடுகள் அமைந்தது.

ரசிகர்கள் ஆதர்ச அணி
உலகம் முழுவதும் தென்னாப்பிரிக்கா அணிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அதற்கு தென்னாப்பிரிக்கா வீரர்களும், அவர்களின் கள செயல்பாடுமே காரணம். அதோடு மழையாலும், டிஎல்எஸ் முறையாலும் அதிகம் பாதிக்கப்பட்ட அணி என்ற பெயராலும் ரசிகர்கள் எப்போதும் தென்னாப்பிரிக்கா மீது அன்பை பொழிந்து வந்தனர்.

டிஎல்எஸ் பாதிப்பு
1992 உலகக்கோப்பைத் தொடரில் 1 பந்துக்கு 22 ரன்கள் என்ற காட்சியை இன்றுவரை எந்த கிரிக்கெட் ரசிகனும் மறந்திருக்க முடியாது. அதுபோல் ஒவ்வொரு ஐசிசி தொடர்களிலும் தென்னாப்பிரிக்கா அணிக்கு மட்டுமே மழையால் ஏதாவது ஒரு பிரச்சினை வந்துகொண்டே இருக்கும். அவர்களும் கண்ணுக்கு தெரியாத எதிராளியான மழையோடு போட்டிப்போட்டு வந்தனர்.

மழையால் நேர்ந்த சோகம்
இவ்வளவு ஏன், நடப்பு டி20 உலகக்கோப்பையில் கூட தென்னாப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டது. ஆனாலும் மனம் தளராமல் போராடிய தென்னாப்பிரிக்கா அணி, இந்திய அணியை வீழ்த்தி கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை உருவாக்கிக் கொண்டது என்ற பார்க்கப்பட்டது.

கனவை தகர்த்த நெதர்லாந்து
இதனால் குரூப் பி பிரிவில் இருந்து இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று ரசிகர்கள் முன் முடிவுக்கு வந்தனர். ஆனால் டாஸ் வென்று நெதர்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்த தென்னாப்பிரிக்கா, 158 ரன்களை எடுக்கவிட்டது ஆச்சரியத்தை கொடுத்தது. இதன்பின்னர் மைதானத்தின் ஒரு பக்கம் தூரத்தை கணக்கில் கொண்டு அதற்கேற்ப திட்டத்தை செயல்படுத்திய நெதர்லாந்து அணி தென்னாப்பிரிக்காவின் கனவை தகர்த்துள்ளது.

சோக்கர்ஸ்
வலிமை வாய்ந்த இந்திய அணியையே அசால்ட்டாக எதிர்கொண்ட தென்னாப்பிரிக்கா அணி, நெதர்லாந்து அணியிடம் தோல்வியை சந்தித்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. இதன்மூலம் அண்மைக் காலமாக இந்திய அணியிடம் இருந்த சோக்கர்ஸ் பட்டம், மீண்டும் தென்னாப்பிரிக்கா வசம் சென்றுள்ளது. மற்ற உலகக்கோப்பை தொடர்களில் மழையால் தென்னாப்பிரிக்கா அணி தோல்வியை சந்தித்தாலும், நடப்பு உலகக்கோப்பை தொடரில் அந்த அணி வெளியேறியதற்கு மழை காரணமல்ல என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

சிறிய அணிகளா?
டி20 கிரிக்கெட் போட்டிகளில் சிறிய அணிகள் என்று எந்த அணியும் இல்லை என்பதை டி20 உலகக்கோப்பை நிரூபித்துள்ளது. ஏனென்றால் உலகம் முழுக்க டி20 லீக்களும், அதற்கேற்ப திறமையையும் கிரிக்கெட் வீரர்கள் வளர்த்துக் கொண்டு வருகின்றனர். அதற்கு ஆஃப்கானிஸ்தான் அணியின் வளர்ச்சியே கண்கூடாக இருக்கிறது. அந்த அணியின் ஒவ்வொரு வீரரும் லீக் போட்டிகளில் பங்கேற்றதன் விளைவால், அனைத்து அணிகளுக்கும் சர்வதேச அளவில் சவால் அளித்து வருகின்றனர். என்ன சொன்னாலும் நடப்பு டி20 உலகக்கோப்பையை ஜிம்பாப்வே, அயர்லாந்து, நெதர்லாந்து, ஆஃப்கானிஸ்தான் அணிகள் மேலும் சுவாரஸ்யத்தை கொடுத்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications