செம ஹீட் செய்தி...அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் சென்னையில் வெப்பம் அதிகரிக்குமாம்
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் சென்னையில் இன்னும் இரண்டு நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: அக்னி நட்சத்திரம் என்றாலே பலரும் அலறுவார்கள். இந்த ஆண்டு அக்னி நட்சத்திர காலம் வந்த சுவடு தெரியாமல் முடிந்து விட்டது. இன்னும் சில நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நடப்பாண்டு கோடை காலத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பு கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே வெயில் வாட்டி வதைத்தது.
அக்னி நட்சத்திரத்துக்கு முன்பே தமிழகத்தின் பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. இதன் காரணமாக அக்னி வெயிலின் உச்சம் இந்த ஆண்டு அதிகமாக இருக்கும் என்ற அச்சம் பொதுமக்களிடையே காணப்பட்டது.

காப்பாற்றிய மழை
அக்னி நட்சத்திரம் தொடங்கிய கடந்த 4-ந்தேதி முதலே வெயில் வாட்டியது. எனினும் ஒரு வாரத்திலேயே சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் கனமழையும் பெய்தது. அசானி புயல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் ஆகிய காரணங்களால் தமிழகத்தின் பல பகுதிகளில் அக்னி நட்சத்திர கால கட்டத்தில் அவ்வப்போது மழை பெய்தது.

தணிந்த வெப்பம்
பல மாவட்டங்களில் பெய்த மழையால் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் கால கட்டத்தில் முதல் 2 வாரங்களுக்கு வெப்பம் தணிந்தே காணப்பட்டது. படிப்படியாக பல ஊர்களில் வெப்பத்தின் தாக்கம் காணப்பட்டது. குறிப்பாக கடந்த சில நாட்களாகவே தலைநகர் சென்னையில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தது. புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

வெப்பச்சலனம்
விருதுநகர், மதுரை, நீலகிரி, கோவையில் கொட்டித்தீர்த்த கனமழையால் வனப்பகுதிகளில் பசுமை திரும்பியுள்ளது. இந்த மாதம் கோடையில் வெயிலை பார்க்க முடியவில்லை என்பது நீலகிரி மாவட்ட மக்களின் கவலையாக இருந்தது. அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வரும் நேரத்தில் லேசாக வெயில் தலை காட்டியது. ஆனாலும் வெப்பச்சலனத்தால் மேற்கு மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

வெப்பத்தின் தாக்கம் கூடும்
25 நாட்கள் நீடித்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது சென்னை மீனம்பாக்கத்தில் நேற்று காலை 102.38 டிகிரி பாரன்ஹீட் அளவும், நுங்கம்பாக்கத்தில் 100.94 பாரன்ஹீட் அளவிற்கு வெப்பம் பதிவாகி இருக்கிறது. அக்னி முடிந்தாலும் வெப்பத்தின் தாக்கம் இன்னும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications