புதுசு கண்ணா! புதுசு! APP செயலிகளை முன்வைத்து பிரசாரம் செய்யும் அதிமுக வேட்பாளர்கள்
சென்னை: ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களை தாண்டி APP செயலிகளை முன்வைத்து அதிமுக வேட்பாளர்கள் பிரசாரம் செய்வதை பார்க்க முடிகிறது.
சமூக வலைதளங்கள் பொதுவாக பொழுதுபோக்குகள், வெற்று அரட்டைகளுக்கான ஒரு களமாக இருந்தது. ஆனால் இந்த சமூக வலைதளங்கள் சமூக மாற்றங்களுக்கான ஆயுதமாகவும் உருமாறியது.

சமூக வலைதளம்
உலகை திரும்பிப் பார்க்க வைத்த தமிழர்களின் ஜல்லிக்கட்டு புரட்சியானது சமூக வலைதளங்களின் பேருதவியுடன் சாத்தியமாக்கப்பட்டது என்பது நம் கண் முன்னே நிகழ்ந்த அண்மைய வரலாறு. இப்போது தேர்தல் காலம்.

தேர்தல் களத்தில்...
சமூக வலைதளங்கள்தான் இப்போது பிரசார பீரங்கிகளாக இயங்கி கொண்டிருக்கின்றன. இங்கே நடக்காத களேபரங்களே இல்லை. அத்தனை ரணகளமாகிக் கிடக்கின்றன சமூக வலைதளங்கள்.

ஆப்ஸ்களை முன்வைத்து பிரசாரம்
இப்போது தேர்தல் பிரசாரம் செய்யும் அதிமுக வேட்பாளர் பலரும் உங்கள் குறைகளை தீர்க்க முதன் முதலில் ஆப் செயலியை உருவாக்கினேன்.. அதன் மூலம் தீர்வு காணப்பட்ட குறைகள் இவை என பட்டியல் போட்டு பிரசாரம் செய்வதை பார்க்க முடிகிறது.

இளைஞர்கள் டார்கெட்
இளைஞர்கள் வாக்குகளை குறிவைத்து இத்தகைய பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுக்கின்றனர் அதிமுக எம்.எல்.ஏக்கள். அத்துடன் தங்களது ஐ.டி.விங் நிர்வாகிகள் மூலம் எப்படியெல்லாம் மக்கள் குறைகள் கேட்கப்பட்டு அவை தீர்க்கப்பட்டன என்பதையும் விலாவாரியாக பட்டியலிடுகின்றனர் அதிமுக எம்.எல்.ஏக்கள். இதுவும் புதுசா இருக்கே!