”உண்மைய சொன்னேன்” பஞ்ச் வைத்து பேசிய ஓபிஎஸ்.. “சின்னம்மா” மீது மதிப்பும் மரியாதையும் உண்டு என பளிச்!
சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்திடம் உண்மையான தகவல்களை கூறியதாகவும், சின்னம்மா மீது தனக்கு தனிப்பட்ட முறையில் மதிப்பும் மரியாதையும் உண்டு என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்த நிலையில் மரணம் குறித்து விசாரிக்க முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

ஆறுமுகசாமி ஆணையம்
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் நேற்றும் இன்றும் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். சுமார் 9 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் எழுப்பப்பட்டது. பெரும்பாலான கேள்விகளுக்கு தனக்கு தெரியாது என நேற்று ஓபிஎஸ் விளக்கம் அளித்த நிலையில் இன்று சசிகலா குறித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ஓ .பன்னீர்செல்வம் பேட்டி
இன்று மாலை விசாரணை முடிவடைந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ .பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் ஏன் ஆஜராகவில்லை எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் ஏழு முறை சம்மன் அனுப்பியதில் தனக்கு ஆறு முறை கடிதம் வந்ததாகவும், இரண்டு முறை சொந்த காரணத்தாலும் ஒருமுறை பட்ஜெட் என்பதால் விசாரணைக்கு ஆஜராகவில்லை எனவும் , எட்டு முறை சம்மன் என்பது தவறான கருத்து என்றார்.

விசாரணை குறித்து விளக்கம்
மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எக்மோ கருவியை அகற்றுவதற்கு முன்புதான் அவரை பார்க்க அனுமதித்தார்கள் எனவும், அதற்கு முன்பு இருந்த 74 நாட்களும் தன்னை பார்க்க அனுமதிக்கவில்லை என்பதில், எந்த முரண்பாடும் இல்லை என தெரிவித்தார். மேலும் தனக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறவில்லை எனவும் மக்களுக்கு சந்தேகம் இருப்பதாகத்தான் தெரிவித்ததாக கூறிய ஓபிஎஸ் ,அந்த சந்தேகத்தை போக்குவதற்கும் சின்னம்மா மீது சந்தேகம் வர வாய்ப்பு இருக்கிறது, அப்படி சந்தேகத்தை போக்கினால் தான் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நீக்கப்படும் என்ற வகையில் பேசியதாக குறிப்பிட்டார்.

சின்னம்மா என பேச்சு
மேலும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை முழு திருப்தியாக இருந்தது என்றும் ஆணையத்தில் உண்மையான தகவல்களை தான் கூறியதாகவும் தனிப்பட்ட முறையில் சின்னம்மா அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு என்று தெரிவித்தார். சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஓ பன்னீர்செல்வம் சசிகலாவை சின்னம்மா என்று குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications