அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவு... முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் அஞ்சலி - சேகர்பாபு கண்ணீர்
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். சேகர்பாபு மதுசூதனன் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மதுசூதனன் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
Recommended Video
அதிமுக முன்னாள் அமைச்சரும், அவைத் தலைவருமான மதுசூதனன் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் உடல்நலம் தேறி வீடு திரும்பினார். இந்த நிலையில் மீண்டும் அவர் உடல்நிலை மோசமானதால் சமீபத்தில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று மாலை உயிரிழந்தார். மதுசூதனனின் மறைவை ஒட்டி அதிமுக மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுசூதனன் மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அஞ்சாநெஞ்சன் என்று கம்பீரமாக அழைக்கப்பட்டவர் மதுசூதனன். திமுகவில் இருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்ட போது போராட்டம் நடத்தி சிறை சென்றவர். கட்சிக்காக பலமுறை போராட்டம் நடத்தியுள்ளார் 48 முறை சிறை சென்றுள்ளார். 2007ஆம் ஆண்டு முதல் அதிமுகவின் அவைத்தலைவராக பதவி வகித்து வருகிறார். 70 ஆண்டுகாலம் எம்ஜிஆர், ஜெயலலிதா, அதிமுகவின் புகழ் பாடி உண்மையாக தொண்டராக இருந்தவர் மதுசூதனன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உற்றார் உறவினர்களுக்கு இந்த துயரத்தை தாங்கிக் கொள்ளும் சக்தியை தர வேண்டும். அன்னாரது ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பார ஒன்றரை கோடி தொண்டர்களின் சார்பில் பிராத்தனை செய்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

மதுசூதனன் உடலுக்கு அஞ்சலி
மதுசூதனன் உடல் இன்று அதிகாலை 3 மணியளவில் தனியார் மருத்துவமனையிலிருந்து சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள இல்லத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் அங்கு வைக்கப்பட்டுள்ளது.
அதிமுகவினர் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதிமுக மாவட்ட செயலாளர்கள், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மதுசூதனன் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் இன்று காலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தண்டையார் பேட்டைக்கு சென்று மதுசூதனன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், சேகர்பாபு ஆகியோரும் சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது அங்கிருந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரிடம் துக்கம் விசாரித்தார்.
பல ஆண்டு காலம் அதிமுகவில் மதுசூதனனுடன் பயணித்த அமைச்சர் சேகர்பாபு குடும்பத்துடன் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். மதுசூதனன் உடல் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் அஞ்சலிக்குப் பின்னர் இன்று மாலை மூலக்கொத்தளத்தில் உள்ள மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.

யார் இந்த மதுசூதனன்
எம்ஜிஆர் சினிமாவில் நடிக்கத் தொடங்கி பிரபலமான காலத்திலேயே 1950களில் சென்னையில் ரசிகர் மன்றம் தொடங்கி அதற்கு தலைவராக செயல்பட்டு வந்தார் மதுசூதனன். 1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கியபோது நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் ராமாவரம் தோட்டத்திற்கும் சத்யா ஸ்டுடியோவிற்கு தினம் தோறும் சென்று சந்தித்தார் மதுசூதனன். திமுகவில் இருந்து விலகிய எம்ஜிஆர் கட்சி தொடங்கியதாக அறிவித்த நேரத்தில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக சென்ற போது அங்கு பொதுப்பணித் துறை அதிகாரிகளால் வைக்கப்பட்டிருந்த ஏணி அகற்றப்பட்டிருந்து. சற்றும் யோசிக்காத மதுசூதனன் தனது ஆதரவாளர்களை வைத்து மனித பிரமிடை ஏற்படுத்தி அதில் ஏறி எம்.ஜி.ஆரை ஏற்றினார். பிரமிப்பு அகலாத எம்ஜிஆர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.
தனது அதிரடியான செயல்களால் எம்ஜிஆரின் கவனத்தை ஈர்த்த மதுசூதனன் அதிமுகவில் பல முக்கிய பொறுப்புகளில் வகித்துள்ளார், 1980ஆம் ஆண்டு அதிமுகவின் உட்கட்சி தேர்தல் நடைபெற்றது அப்போது அதிமுகவிற்கு அமைப்பு ரீதியாக சென்னை ஒரு மாவட்டமாக இருந்தது, சென்னை மாவட்ட செயலாளர் பதவிக்கு மதுசூதனனும் மற்றும் ஜேப்பியார் கல்வி நிறுவனத்தின் நிறுவனர் மறைந்த ஜேபிஆரும் போட்டியிட்டனர். அதில் மதுசூதனன் தோல்வி அடைந்தாலும் எம்ஜிஆர் உடனடியாக அவருக்கு அனைத்துலக எம்ஜிஆர் மன்றத்தில் சென்னை மாவட்ட செயலாளர் பொறுப்பை வழங்கினார்.
தொண்டர்களின் நம்பிக்கை பெற்றவராக இருந்துள்ளார் மதுசூதனன். அதிமுக தொண்டர்களுக்கு சென்னையில் எங்கே பிரச்சினை என்றாலும் உடனடியாக தலையிட்டு தொண்டர்களின் பக்கம் நிற்பார். இவருக்கு அஞ்சாநெஞ்சன் என்ற அடைமொழி வைத்து அழைத்து வந்தனர். 1982 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் மேல்சபை உறுப்பினராகவும் பதவி வகித்த மதுசூதனன் கட்சியில் படிப்படியாக உயர்ந்தார். வடசென்னை மாவட்ட செயலாளர், கட்சியின் அமைப்புச் செயலாளர், அவைத்தலைவர் என உயர்ந்தார். எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஜானகி- ஜெயலலிதா என இரு அணிகளாக பிரிந்தது. ஜெயலலிதாவின் பக்கம் நின்றார் மதுசூதனன்.
1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக அமைச்சராகவும் ஆனார்,மது சூதனனுக்கு கைத்தறி துறை இலாகா வழங்கப்பட்டது.
கடந்த 2017ம் ஆண்டு, அதிமுக இரண்டாக பிரிந்த போது, ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக மதுசூதனன் இருந்தார். இரு அணிகள் இணைந்தபோது, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்பதில் மதுசூதனன் முக்கிய பங்குவகித்தார். அதிமுக சின்னத்தை அவைத்தலைவரான மதுசூதனனிடமே தேர்தல் ஆணையம் வழங்கியது. ஓபிஎஸ், இபிஎஸ் ஒன்றிணைந்த பின்னர் மீண்டும் அதிமுகவின் அவைத்தலைவரானார். சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவின் அவைத் தலைவர் பொறுப்பில் இருந்து வந்தார் மதுசூதனன் காலமானது அதிமுகவினரையும் வடசென்னை மக்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications