ஸ்வீட் எடு கொண்டாடு! பழைய ’பன்னீர்செல்வமாய்’ ஓபிஎஸ்! சசிகலாவுக்கு போட்ட ஸ்கெட்சில் சிக்கிய இபிஎஸ்!
சென்னை : ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி இருக்கும் நிலையில், அதிமுகவில் இருந்து சசிகலாவை வெளியேற்றுவதற்காக எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் உடன் இணைந்து விதித்த புதிய விதிகளே தற்போது அவருக்கு எதிராக திரும்பி இருக்கிறது என்கின்றனர் சசிகலா தரப்பு ஆதரவாளர்கள்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தற்போது வரை எரிமலையாக வெடித்துக் கொண்டு இருக்கும் நிலையில் தற்போது வந்திருக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்பு அதில் நீரை ஊற்றுவது போல அமைந்திருக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமி ஒற்றைத் தலைமையாக உருவாக்கும் வகையில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொது குழு செல்லாது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்கிற வகையில் அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே தொடரும் என நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டிருக்கிறது.

அதிமுகவில் எடப்பாடி
இதன் காரணமாக அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சியில் இருந்தாலும் அடுத்த கட்டமாக மேல்முறையீடு உள்ளிட்ட விவகாரங்களில் தீவிரமாக ஈடுபடுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன அதே நேரத்தில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு பலத்த உற்சாகத்தில் இருக்கிறது. பொதுக்குழு மீண்டும் கூட்டப்பட்டாலும் அதில் எடப்பாடி பழனிச்சாமி தான் பொதுச்செயலாளராக வரவேண்டும் என அவரது ஆதரவாளர்கள் பிரச்சனை செய்வார்கள் என்பது தெரிந்திருக்கிறது.

ஓபிஎஸ் மும்முரம்
தற்போதைக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை எப்படியாவது தனக்கான வெற்றியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என மும்முரமாக திட்டமிட்டு இருக்கிறார். அதே நேரத்தில் சசிகலாவுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமியும் ஓ பன்னீர் செல்வமும் வகுத்த விதிகள் தான் தற்போது ஓபிஎஸ்-க்கு சாதகமாகவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாதகமாகவும் அமைந்திருக்கிறது.

பல்வேறு விதி
எம்ஜிஆர் அதிமுக தொடங்கிய போது பல்வேறு விதிகளை வகுத்திருந்தார். தற்போது வரை அவை தான் பின்பற்றப்பட்டு வரும் நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவில் இருந்து சசிகலாவை வெளியேற்றும் போது ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. அப்போது அதிமுக பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தான் கூட்ட வேண்டும் ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டால் பொதுக்குழுவை கூட்டலாம் என விதிகள் வகுக்கப்பட்டது.
Recommended Video

சசிகலா
இதில் இரண்டாவது விதி ஓபிஎஸ்-க்கு எதிராக இருந்தாலும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஐந்து ஆண்டுகள் வரை பதவிக்காலம் இருக்கும் நிலையில் ஓராண்டுக்கு முன்னதாகவே இந்த சிக்கல் எழுந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழலில் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக பொதுக்குழுவை கூட்ட நோட்டீஸ் வழங்கவும் தனது ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் பொது குழுவை கூட்ட வேண்டும் என்னவோ பன்னீர்செல்வத்தை வலியுறுத்துவார் எனக் கூறப்படுகிறது. எது எப்படி எனினும் அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி வகுத்த திட்டங்கள் புதிய விதிகள் தற்போது அவருக்கு எதிராகவே திரும்பி இருக்கிறது என்கின்றனர் சசிகலா தரப்பு ஆதரவாளர்கள்.
-
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா? -
சிவி சண்முகத்துக்கு அடுத்த அடி. 5 அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவு.. யார் இவர்கள்? லிஸ்ட் -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்! -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்! -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
தவெகவில் இணையப் போகிறீர்களா?.. 25 எம்.எல்.ஏக்களில் இப்போது 17 பேர் தான்.. டென்ஷனாகிய சி.வி.சண்முகம் -
எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாராம்..பொய்க்கால் குதிரை அரசு! விஜய்யை வெளுத்த எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications