• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

எகிறி அடித்த அமித்ஷா.. அதிமுக எட்டடி பாய்ந்தால்.. பாஜக 16 அடி பாயுதே.. வேற லெவல் ஸ்டிராட்டஜி.. செம!

|

சென்னை: தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயுமே.. அதுமாதிரிதான் இருக்கிறதாம் அதிமுக - பாஜக உறவை கண்டால்..! அதிமுக ஒன்று நினைத்து செய்தால், அதை விட அதிகமாக பாய்ந்து வேற ஒரு லெவலில் நின்று யோசிக்கிறாராம் அமித்ஷா..!

தேர்தல் களை கட்டி வருகிறது.. தேர்தல் தேதியும் அறிவிக்க போகிறார்கள்.. இந்த தேதி அறிவித்துவிட்டால் அவ்வளவுதான், அதற்கு பிறகு அதிமுக அரசு தன் செயல்பாடுகளின் வேகத்தை குறைத்து கொள்ள வேண்டியதுதான்.. காபந்து அரசு வந்துவிடும்.

இந்த சூழலில்தான் யார் யார் எந்த கட்சியில் இருக்க போகிறார்கள், தாவ போகிறார்கள், வலை வீச போகிறார்கள் என்பதெல்லாம் தெரியவரும்.

கடைசி நேர ட்விஸ்ட்.. பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் கூடும் சட்டப்பேரவை.. ஏதேனும் புதிய அறிவிப்பு வருமா? கடைசி நேர ட்விஸ்ட்.. பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் கூடும் சட்டப்பேரவை.. ஏதேனும் புதிய அறிவிப்பு வருமா?

 தேர்தல்

தேர்தல்

இதனிடையே சசிகலா தரப்பும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.. அநேகமாக 3வது அணி அமைத்து போட்டியிட வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.. அப்படி போட்டியிட்டால் தென்மாவட்டங்களில் வாக்குகள் விழக்கூடும்.. அதிலும் சாதிய ஓட்டுக்கள் பெருவாரியாக கை கொடுக்கும்.. அதேசமயம், இது அதிமுகவுக்கு சறுக்கலை தரக்கூடும்.. இந்த ஒரு பாயிண்ட்டை சுட்டிக் காட்டிதான், 2 மாதங்களுக்கு முன்பு டிடிவி தினகரன் பாஜக தலைமையிடம் பேசியதாக தெரிகிறது.

 பாஜக

பாஜக

ஒருவேளை அதிமுக - அமமுக இணைந்தால் தென்மண்டல வாக்குகளையும் சேர்த்து பெறக்கூடுமே என்று பாஜகவும் ஒரு கணக்கு போட்டது.. கடைசியில் அந்த கணக்கு அப்படியே நின்றுவிட்டது.. இதற்கு காரணம், முதல்வர் எடப்பாடியார் டெல்லி சென்றபோது நடந்த அந்த விவகாரம்தானாம்.

அமித்ஷா

அமித்ஷா

அமமுகவுடன் இணைந்து தேர்தலை சந்தியுங்கள் என்று அமித்ஷா தரப்பில் சொல்லப்பட்டதாம்.. அதற்கு முதல்வர், அமமுக நிர்வாகிகளில் முக்கியமானவர்கள் எல்லாம் அதிமுக பக்கம் வந்துவிட்டார்கள்.. அதுபோக, சசிகலா வருகையை கட்சிக்குள்ளும் யாரும் விரும்பவில்லை.. அதனால் எந்த வழியிலும், நம்முடைய வெற்றி வாய்ப்பு தென் மாவட்டங்களில் பாதிக்காது.. தென் மாவட்டங்களில் மட்டும் நாம் 78 தொகுதிகளில் ஜெயித்து விடுவோம் என்றாராம்.

 கொங்கு மண்டலம் கொங்கு மண்டலம்

கொங்கு மண்டலம் கொங்கு மண்டலம்

இதைக்கேட்ட அமித்ஷாவோ பூரித்து போய், அப்படின்னா, அதிமுக சார்பில் நீங்க அங்கே நிறைய இடத்துல போட்டியிடுங்க.. எங்க பாஜகவுக்கு கொங்கு மண்டலத்துல அதிகமான சீட் தாங்க" என்றாராம். முதல்வர் டெல்லி போய் வந்து இத்தனை நாட்கள் ஆன பிறகு இந்த தகவல் எல்லாம் கசிந்து வந்து கொண்டிருக்கிறது.. அதேசமயம், கொங்கு மண்டலத்தின் பிரதான இடங்களை அதிமுகவிடம் நெருக்கி கேட்டு வருகிறது பாஜக.. கொங்குவைதான் அதிமுக அதிகம் நம்பி கொண்டிருக்கிறது.. அதே கொங்குவில் பாஜகவும் துண்டு போட்டு வருவதால், யாருக்கு என்ன சீட் என்று இனிமேல்தான் தெரியும்.

 
 
 
English summary
Amit Shahs Strategy with ADMK in TN Assembly Election 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X