தமிழர்களின் வேலைவாய்ப்பை பறிப்பதா?.. இது நியாயமல்ல.. மத்திய அரசுக்கு எதிராக பொங்கிய அன்புமணி!
சென்னை: அகில இந்திய வானொலி, பொதிகை தொலைக்காட்சி பகுதி நேர நிருபர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:- சென்னை வானொலி மற்றும் பொதிகை தொலைக்காட்சி செய்திப்பிரிவுக்கு 6 மாவட்டங்களில் 8 பல் ஊடக செய்தியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அச்சம் நியாயமானது
இதை அடிப்படையாக வைத்து பல்வேறு ஐயங்களும், அச்சங்களும் எழுந்துள்ளன!சென்னை வானொலி, தொலைக்காட்சிக்கு 38 மாவட்டங்களிலும் பகுதி நேர செய்தியாளர்கள் உள்ளனர். பல் ஊடக செய்தியாளர்கள் நியமனத்தால் தாங்கள் படிப்படியாக பணி நீக்கப்படுவோம் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். அவர்களின் அச்சம் நியாயமானது ஆகும்! குதிநேர செய்தியாளர்கள் என்ற பெயரில் அவர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முழு நேரமும் பணியாற்றி வருகின்றனர்.

இந்தி மொழியறிவு கட்டாயம் என அறிவிப்பு
வாழ்க்கையின் பெரும் பகுதியை இந்தப் பணியில் கழித்து விட்ட அவர்களை பணி நிலைப்பு செய்வதற்கு பதிலாக பணி நீக்கம் செய்ய நினைப்பது எந்த வகையிலும் நியாயமல்ல! பல் ஊடக செய்தியாளர்கள் சென்னை செய்திப்பிரிவுக்கு தான் செய்திகளைத் தர வேண்டும். அதற்கு இந்தி தேவையில்லை. ஆனால், இந்தி மொழியறிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு கிடையாதா?
இது தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை மறுக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது! பல் ஊடக செய்தியாளர்களை நியமிப்பதில் தவறு இல்லை. ஆனால், அப்பணிக்கு இந்தி கட்டாயம் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும். அதே நேரத்தில் பகுதி நேர செய்தியாளர்களை நீக்கக்கூடாது. அவர்களை படிப்படியாக பணி நிலைப்பு செய்ய வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

மத்திய அரசுக்கு தமிழக எம்.பி கடிதம்
அகில இந்திய வானொலி, பொதிகை தொலைக்காட்சி தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசின் தன்னிச்சைக்கு ஏற்கனவே கடும் கண்டனம் எழுந்தது. மதுரை எம்.பி சு.வெங்கடேசன் இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதமும் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாப்ள சிவசங்கர் தான்.. ஆனால் சட்டை செந்தில் பாலாஜியோடது! திமுகவின் போலி கூப்பன்! அன்புமணி அட்டாக்! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு












Click it and Unblock the Notifications