நடுக்கடலில் இலங்கை கடற்படை அட்டகாசம்! தமிழக மீனவர்கள் கைதுக்கு அன்புமணி கண்டனம்! அரசுக்கும் கோரிக்கை
சென்னை: கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேரை, இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்ததற்கு, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கைதான மீனவர்களை விடுவிக்க மத்திய - மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி, இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது.
மேலும், தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையினர், மீனவர்களின் விசைப் படகுகளை பறிமுதல் செய்வதோடு, மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த தொடர் சம்பவங்களை தடுத்து நிறுத்துமாறு மத்திய - மாநில அரசுகளுக்கு மீனவ சங்கங்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனினும் இதுபோன்ற கைது நடவடிக்கைகள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமே உள்ளது.

8 தமிழக மீனவர்கள் கைது
அந்த வகையில், நாகை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்துள்ளனர். இந்த தொடர் கைது நடவடிக்கைகள், தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சிங்களக் கடற்படைக்கு கண்டனம்
இந்நிலையில், ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேரை, இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்ததற்கு, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வங்கக் கடலில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேரை, அவர்களின் படகுகளுடன் சிங்களக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சிங்களப் படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

மீண்டும் கைது நடவடிக்கை
ஏற்கனவே கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு அடுத்த இரு நாட்களில் மீண்டும் மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது. கடந்த 7-ஆம் தேதி, கைது செய்யப்பட்ட 12 மீனவர்கள் சில நாட்களுக்கு முன் விடுதலையான நிலையில், அடுத்த கைது அரங்கேறியிருக்கிறது

நிரந்தர தீர்வு வேண்டும்
வங்கக் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள், தொடர்ந்து கைது செய்யப்படுவதால் மீனவர்கள் அச்சத்திற்கு ஆளாகியிருக்கின்றனர். மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிங்களப் படையினரால் கைது செய்யப்பட்ட 8 மீனவர்களையும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 100 படகுகளையும் விடுவிப்பதற்கு மத்திய - மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications