சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

’தண்ணி’ வேண்டாம்.. ‘தண்ணீர்’ வேண்டும்! பெண்கள், விவசாயிகளை கவர.. பாமக அன்புமணி போடும் மாஸ் ப்ளான்!

Google Oneindia Tamil News

சென்னை : ஒருபுறம் பெண்களை கவரும் வகையில் மது ஒழிப்பு, ஆன்லைன் ரம்மி ஒழிப்பு போன்ற விவகாரங்களில் தீவிரம் காட்டி வகையில், மறுப்புறம் விவசாயிகளை கவரும் வகையில் தாமிரபரணி காப்போம், வைகை காப்போம், காவேரி காப்போம், பாலாறு காப்போம் என ஆறுகளை காப்பதற்கான சுற்றுப் பயணங்களையும் மேற்கொண்டு வருகிறார்.

தருமபுரி காவேரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் மூன்று நாள் நடைபயணம் பிரச்சாரத்தை பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஒகேனக்கலில் தொடங்கினார்.

பிரச்சாரம் தொடங்கியதில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியினரும், பொது மக்களும் உற்சாக வரவேற்பை அளித்துள்ள நிலையில், வ்வொரு இடமாக நடந்து சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் அன்புமணி ஈடுபட்டார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

6 மாதத்தில் 70 கொலைகள்! காவிரி டெல்டாவில் ஓடும் “ரத்த ஆறு”.. அன்புமணி வெளியிட்ட அதிர வைக்கும் டேட்டா 6 மாதத்தில் 70 கொலைகள்! காவிரி டெல்டாவில் ஓடும் “ரத்த ஆறு”.. அன்புமணி வெளியிட்ட அதிர வைக்கும் டேட்டா

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

இந்நிலையில் பெண்களை கவரும் வகையில் மது ஒழிப்பு, ஆன்லைன் ரம்மி ஒழிப்பு போன்ற விவகாரங்களில் தீவிரம் காட்டி வகையில், மறுபுறம் விவசாயிகளை கவரும் வகையில் தாமிரபரணி காப்போம், வைகை காப்போம், காவேரி காப்போம், பாலாறு காப்போம் என ஆறுகளை காப்பதற்கான சுற்றுப் பயணங்களையும் மேற்கொண்டு வருகிறார். கடந்த நில நாட்களுக்கு முன்னர் தாமிரபரணி உபரி நீர் குறித்த ஆர்ப்பாட்டம் ஓரளவு அன்புமணிக்கு ஆதரவு ஓரளவு கொடுத்துள்ளது. ஏற்கனவே கொசஸ்தலை ஆற்றின் நடுவே தடுப்பணை கட்டும் ஆந்திர அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தார்.

அடுத்த திட்டம்

அடுத்த திட்டம்

குறிப்பால காவிரி ஆற்றில் இருந்து மேட்டூர் உபரி நீர் திட்டத்தின் வாயிலாக சேலம் நாமக்கல் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் மேட்டூர் உபநீர் திட்டத்தினை செயல்படுத்த வேண்டும் எனவும் சுற்று பயணங்கள் மேற்கொண்டு இருந்தார். அத்திக்கடவு அவினாசி திட்டத்தினை செயல்படுத்த வேண்டும் எனவும் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட பாமக தலைவரான அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் தருமபுரி காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி மூன்று நாட்கள் நடைப்பயணத்தை நிறைவு செய்திருந்தார்.

தண்ணீர் தேவை

தண்ணீர் தேவை

அதற்கு முன்னதாக கொள்ளிட முகத்துவாரத்தில் கடல் நீர் உட்பகுவதை தடுக்க தடுப்பணை கட்ட வேண்டும் அதன் மூலம் மக்களின் குடிநீர் பஞ்சம் தீர்க்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தினார். தற்பொழுது தர்மபுரி நடைபயணம் கொடுத்த உற்சாகத்தில், வருகின்ற 30ஆம் தேதி ஆந்திரா அரசு தடுப்பணை கட்டுவதை எதிர்த்து திருத்தணி பள்ளிப்பட்டில் ஆர்ப்பாட்டமும், அதனைத் தொடர்ந்து சேலம் பனமரத்துப்பட்டி ஏரியில் மேட்டூர் உபரி நீர் திட்டத்தின் வாயிலாக ஏரியை நிரப்ப வேண்டும் என ஆர்ப்பாட்டமும் நடைபெற இருக்கிறது.

மக்களவை தேர்தல்

மக்களவை தேர்தல்

அதற்கு அடுத்தபடியாக செப்டம்பர் 4ஆம் தேதி நெய்வேலி என்எல்சியால் கடலூர் மாவட்டத்தின் நிலத்தடி நீரானது முழுவதுமாக குறைந்து அந்த மாவட்டமே பாலைவனமாக மாறிக் கொண்டிருப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டமும் நடத்த இருக்கிறார். பருவநிலை மாற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் அன்புமணி ராமதாஸ், நீர்நிலைகளை காப்பதிலும் நீர் பாசன திட்டங்களை உருவாக்குவதிலும் அதிக ஆர்வம் ஆர்வம் காட்டி வருகிறார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் கோதாவரி காவேரி இணைப்பு என்பதை முக்கிய அம்சமாக வைத்திருந்த நிலையில், தற்போது மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தருமபுரி பயணம், சேலம், திருவள்ளூரை கையிலெடுத்திருக்கிறார் அன்புமணி என்கின்றனர் பாமகவினர்.

English summary
Anbumani Ramadoss is also conducting tours to protect the Tamiraparani Kappom rivers to attract the farmers by showing seriousness in issues like abolition of alcohol and online rummy in order to attract women.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X