பேரறிஞர் அண்ணா விருது பெறும் நாஞ்சில் சம்பத் - சுகி சிவத்திற்கு மறைமலை அடிகள் விருது அறிவிப்பு
2021ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை: 2021ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பேரறிஞர் விருது நாஞ்சில் சம்பத்திற்கு வழக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மறைமலை அடிகள் விருது ஆன்மீகப்பேச்சாளர் சுகி சிவத்திற்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது. இந்த ஆண்டு விருது பெறும் அறிஞர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றி பெருமை சேர்த்தவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பேரறிஞர் அண்ணா விருது நாஞ்சில் சம்பத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சொல்லின் செல்வர் விருதுக்கு சூர்யா சேவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிங்கார வேலர் விருது கவிஞர் மதுக்கூர் ராமலிங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்துக்கு தமிழ்த்தாய் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை கண்ணனுக்கு இளங்கோவடிகள் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதி பாஸ்கருக்கு கம்பர் விருதும், மகாகவி பாரதியார் விருது பாரதி கிருஷ்ணகுமாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாவேந்தர் பாரதிதாசன் விருது புலவர் செந்தலை கவுதமனுக்கும், வள்ளலார் விருது முனைவர் இரா. சஞ்சீவிராயருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவநேயப்பாவாணர் விருது முனைவர் கு. அரசேந்திரனுக்கும், உமறுப்புலவர் விருது நா. மம்மதுவிற்கும் அறிக்கப்பட்டுள்ளது. முனைவர் ம. இராசேந்திரனுக்கு கி.ஆ.பெ. விருது அறிவிக்கபபட்டள்ளது.
ஏ.எஸ். பன்னீர்செல்வத்திற்கு ஜி.யு.போப் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மறைமலையடிகள் விருது ஆன்மீக பேச்சாளர் சுகி. சிவம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்திதாசப் பண்டிதர் விருது ஞான. அலாய்சியஸ்க்கும், சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது உயிர்மை திங்களிதழுக்கு வழங்கப்படுகிறது. இந்தாண்டு முதல் விருதுத்தொகை ரூ.1 லட்சத்திலிருந்து 2 லட்சமாக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications