இனிமே ரவுண்டானா கிடையாது! புதிய தோற்றம் பெற்ற அண்ணா சாலை சந்திப்பு.. ஏன் இந்த மாற்றம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையின் முக்கியமான சாலைகள் விரிவான தெருக்களாக மாற்றம் செய்யப்படும் என சமீபத்தில் மாநகராட்சி தெரிவித்திருந்த நிலையில், தற்போது எட்டு நீரூற்றுகள், பசுமையுடன் கூடிய நீள்வட்ட ரவுண்டாணாக்களை அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலை தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக அடுத்த 4 மாதங்களில் அண்ணா சாலையின் பெரியார் சிலை சந்திப்பு புதிய தோற்றம் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை

சென்னை

சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை நெருக்கடிக்கு ஏற்ப நகரத்தின் உட்கட்டமைப்புகளை அரசு அவ்வப்போது சீரமைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது மாநகரின் 5 பிரதான பகுதிகளில் தி.நகரில் அமைக்கப்பட்டுள்ளதைப் போன்று பெரிய தெருக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை இந்தியாவின் மிக பழமையான நகரங்களில் ஒன்று. வேறெங்கும் இல்லாத அளவில் இது தனிச்சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

சாலைகள்

சாலைகள்

இப்படியான நகரத்தில் வேலை, வாழ்வாதாரத்தை தேடி அவ்வப்போது மக்கள் தொடர்ந்து படையெடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு மட்டும் இந்நகரத்தின் மக்கள் தொகை 1.1 கோடி. இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கேற்றாற்போல் நகரத்தை கட்டமைப்பது, சீரமைப்பது அவசியமானதாக இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு அரசு சில மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த பெரு நகரத்தின் முக்கியமான 5 பகுதிகளை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

100 கோடி ரூபாய்

100 கோடி ரூபாய்

அதாவது இந்த பகுதியில் உள்ள தெருக்களை தி.நகரில் உள்ள பெரிய தெருக்களை போன்று மாற்றியமைக்க ரூ.100 கோடியில் 'மெகா ஸ்ட்ரீட்ஸ்' திட்டத்தை அமல்படுத்த மாநகராட்சி முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை அருகே உள்ள பெரியார் சிலை சந்திப்பை நீரூற்றுகள், பசுமையுடன் கூடிய நீள்வட்ட ரவுண்டாணாவாக மாற்றும் பணியை நெடுஞ்சாலை தொடங்கியுள்ளது. இந்த சந்திப்பில் மட்டும் சுமார் 3 லட்சம் வாகனங்கள் தினமும் வந்து செல்கின்றன.

நெரிசல்

நெரிசல்

இப்படியான நெரிசலான பகுதியில் ரூ.1.5 கோடி மதிப்பில் அழகுபடுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்திலிருந்து பார்க்கும்போது அழகுபடுத்தும் பணியாக நமக்கு தோன்றினாலும், இதன் நோக்கம் போக்குவரத்தை சீர்படுத்துவதுதான். அதிக வேகம் மற்றும் தவறான திசையில் பயணிப்பது ஆகியவை இங்கு சாலை விபத்துக்களுக்கு முதன்மைக் காரணம் என ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. இந்த ஆய்வின் முடிவில்தான் இந்த பணியின நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டுள்ளது.

 ரவுண்டானா

ரவுண்டானா

புதிய திட்டத்தின்படி ரவுண்டானா பெரியார் சிலையை சுற்றி இருக்கும். சிலைக்கு செல்வதற்கு சிறிய பாதை உருவாக்கப்படும். இதுபோன்றே 6 இடங்களில் அழகுபடுத்தும் பணிகள் தொடங்கப்படும் என்று இத்திட்டத்தில் பணியாற்றும் பொறியாளர் சி.ரவி தெரிவித்துள்ளார். இது வாகன ஓட்டிகள் சரியான திசையில் பயணிப்பதற்கும், சிக்னல் ஜம்ப் செய்யாமல் இருப்பதற்கும் பயன்படும் என்றும் கூறினார். மேலும், ஓமந்தூரார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அருகே டேபிள்டாப் ஸ்பீட் பிரேக்கர் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

10 வழிப்பாதை

10 வழிப்பாதை

அதேபோல தற்போது இந்த சாலை 10 வழிப்பாதை அளவுக்கு விரிவாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் வரைமுறையற்று வாகனத்தை இயக்குகின்றனர். இது பாதசாரிகளுக்கும், சாலையை கடப்பவர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே இந்த பணியின் மூலம் சாலையின் அளவு (0.6 மீட்டர்) குறைக்கப்படுகிறது. இதனால் சாலை சமன் படுத்தப்படுகிறது. என்றும் ரவி கூறியுள்ளார்.நகரத்தின் இதர கட்டமைப்புகளை போல அல்லாமல், இது திட்டமிடப்பட்ட 4 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்றும் நெடுஞ்சாலைத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+