திமுக ஃபார்முலாவை கையில் எடுக்கும் அண்ணாமலை! பாஜக லீகல் டீமை ஸ்ட்ராங் ஆக்க தனிக்கவனம்!
சென்னை: தமிழக பாஜகவில் லீகல் டீமை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ள அண்ணாமலை அது தொடர்பான பணிகளில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.
திமுகவில் உள்ள சார்பு அணிகளில் இளைஞரணி, மகளிரணி, மாணவரணி வரிசையில் வழக்கறிஞர் அணியும் பிரதான இடத்தில் இருக்கிறது. கட்சிக்கு வழக்கறிஞர் அணி என்பது இன்றியமையாத ஒன்று என உணர்ந்த கருணாநிதி, அந்த அணியை சேர்ந்த திறமைசாலிகளுக்கு உரிய கவுரவம் வழங்கி வந்தார்.

இப்போது மு.க.ஸ்டாலினும் அதேபோல் வழக்கறிஞர் அணியை சேர்ந்த பிரமுகர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறார். திமுகவில் சண்முகசுந்தரம், ஆர்.எஸ்.பாரதி, வில்சன், என்.ஆர். இளங்கோ, பரந்தாமன், சரவணன், உள்ளிட்ட இன்னும் பல வழக்கறிஞர்கள் எள் என்றால் எண்ணெய்யாக நிற்கக் கூடியவர்கள்.
ஸ்டாலினின் எண்ண ஓட்டத்திற்கேற்ப செயல்பட்டு, கட்சி ரீதியாக முன்னெடுக்கும் ஒவ்வொரு வழக்கிலும் அர்ப்பணிப்பு உணர்வோடு அதற்கான தயாரிப்புகளில் ஈடுபடக்கூடியவர்கள். இதற்கு உதாரணமாக தற்போது நடைபெற்று வரும் செந்தில்பாலாஜி வழக்கை கூட எடுத்துக் கொள்ளலாம். எந்தளவுக்கு திமுக லீகல் டீம் நொடிப்பொழுதையும் வீணடிக்காமல் சுறுசுறுப்பாக பணியாற்றியது என்பது தெரிந்திருக்கும்.
இந்நிலையில் திமுக ஃபார்முலாவில் தமிழக பாஜகவில் வழக்கறிஞர் அணியை வலிமையாக கட்டமைக்கும் முயற்சிகளை அண்ணாமலை தொடங்கியிருக்கிறார். கட்சி நிர்வாகிகள் மீது காவல்துறையினர் கை வைக்க முடியாத வண்ணம் செயலாற்றக் கூடிய வழக்கறிஞர் டீமை கட்டமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
சமூக வலைதளப்பக்கங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டதற்காக தமிழக பாஜகவினர் பலர் கடந்த 3 நாட்களாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை ஜாமினில் எடுப்பதற்கான பணிகளை வழக்கறிஞர் டீம் மூலம் முன்னெடுத்திருக்கிறார் அண்ணாமலை.
-
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்!












Click it and Unblock the Notifications