அரசு பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ., பிடெக் படிக்க விண்ணப்பிக்கலாம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ., பிடெக் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை: பகுதி நேர பி.இ., படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. சேலம், மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ., படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த படிப்புகளில் சேர விரும்புவோர் இன்று முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவும், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் நிறுவனத்தில் பணிபுரிந்து இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கு தகுதி வாய்ந்த பட்டயப்படிப்பு முடித்து, பணிபுரியும் விண்ணப்பதாரர்களுக்கு பகுதி நேர பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம், பர்கூர் அரசு பொறியியல் கல்லூரிகள், காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் இன்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம்.
பகுதி நேர பொறியியல் படிப்பில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் www.ptbe-tnea.com என்ற இணையதளம் மூலம் இன்று முதல் ஆகஸ்ட் 3ந்தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள் பி.இ. படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவத்தை ஆன்லைன் வாயிலாக பதிவு செய்வதற்கு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையத்தில் செய்து கொள்ளலாம்.
மேலும், இந்த கல்வியாண்டிற்கான பகுதிநேர இளநிலை பொறியியல் பட்டப் படிப்பு கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக மட்டுமே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படிப்புகளில் சேர விரும்புவோர் இன்று முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவும், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் நிறுவனத்தில் பணிபுரிந்து இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications