சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 லட்டு + 2 பேர்.. "கிளைமேட்" மாறிடுச்சே.. திமுக + பாஜகவின் சீக்ரெட் அரசியல்.. தடுமாறிய எடப்பாடி

ஓபிஎஸ்ஸுடன் சேர்த்து திமுக, பாஜக தரப்பு குஷியில் உள்ளதாக கூறப்படுகிற

Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இன்றைய தினம் நீதிமன்ற உத்தரவு வந்துள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பை குஷியில் ஆழ்த்தி உள்ளது.. அதேசமயம், திமுக + பாஜக நிம்மதியில் உள்ளது.. என்ன காரணம்?

திட்டமிட்டபடியே எடப்பாடி அதிமுகவை கைப்பற்றிவிட்டார் என்றபோதிலும், ஓபிஎஸ் மூலம் அடுத்தடுத்த நாட்களில் குடைச்சல் வந்தால் என்ன செய்வது என்ற கலக்கமும் இருந்து வந்தது.

ஓபிஎஸ்ஸின் கோரிக்கையை தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டு விட்டால் சிக்கலாகும் என்பதையும் எடப்பாடி ஏற்கனவே அறியாமல் இல்லை..

 ஹையோ ஹையோ.. ஓபிஎஸ் இதற்கெல்லாம் ஹேப்பியாக முடியாது.. இந்த தீர்ப்பு நிரந்தரமில்லை- ஜெயக்குமார் பேட்டி ஹையோ ஹையோ.. ஓபிஎஸ் இதற்கெல்லாம் ஹேப்பியாக முடியாது.. இந்த தீர்ப்பு நிரந்தரமில்லை- ஜெயக்குமார் பேட்டி

கேஸ்கள்

கேஸ்கள்

அதேபோல, தன்னுடைய ஆதரவாளர்களுக்கு நெருக்கமான ஒப்பந்ததார்கள் வீடுகளில் தொடர்ந்து நடைபெறும் வருமான வரி சோதனைகள், குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிபிஐ கோரிய அனுமதி உள்ளிட்டவைகள் கூடுதல் தலைவலியை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் எடப்பாடி முன்கூட்டியே அறிந்துதான் வைத்துள்ளார்.. டெல்லி ஆதரவு கிடைக்காது என்று தெரிந்தும்கூட, 2 முறை முயற்சித்தார்.. எதிர்பார்த்ததுபோலவே 2 முறை அப்பாயிண்மென்ட்டை பாஜக மேலிடம் தரவில்லை.. அதற்கு பிறகு வேறு சில அதிரடிகளை கையில் எடுத்தாலும், எடப்பாடி விஷயத்தில் பாஜக & திமுக வேறு ஒரு கணக்கை போட்டு வந்துள்ளதாக தெரிகிறது.

 தாமரைகள்

தாமரைகள்

பாஜகவை பொறுத்தவரை கட்சிக்குள் எடப்பாடியின் மிகப்பெரிய ஆளுமையை விரும்பவில்லை.. ஏகப்பட்ட நிர்வாகிகள் சப்போர்ட்டை எடப்பாடி பெற்றுள்ளதை பாஜகவால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை என்று கூறப்பட்டது.. அதேபோல, கொங்குவில் இந்த 10 வருட காலமாகவே, எடப்பாடியின் செல்வாக்குதான் விரிவடைந்து உள்ளதையும் தடுக்க முடியவில்லை.. இது பாஜகவுக்கு முட்டுக்கட்டையாகவும் இருந்து வருகிறது.. தமிழ்நாட்டிலேயே ஓரளவு ஆதரவு பகுதிகள் என்றால் அது கொங்கு மண்டலம் என்பதால்தான், ஒவ்வொரு முறை தேர்தலின்போதும், கொங்கு பகுதிகள் வேண்டும் என்று பாஜக, அதிமுகவிடம் கோரிக்கை வைக்கும்.. இதை எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பார்.. இதுவும் பாஜகவுக்கு கடுப்பை தந்து வந்தது.

 கலர் + நிறம்

கலர் + நிறம்

இப்போது எம்பி தேர்தலை எதிர்நோக்கி பாஜக உள்ளதால், கொங்குவை எக்காரணம் கொண்டும், யாருக்கும் இந்த முறை விட்டுத்தரக்கூடாது என்பதிலும், பாஜகவின் பலத்தை அங்கு அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் பல கணக்குகளை போட்டுவருகிறது.. கொங்குவில் எடப்பாடி இன்னும் வளர்ந்தால் தங்களால் அரசியல் செய்ய முடியாது என்பதை உணர்ந்தே, எடப்பாடி விஷயத்தை பாஜக கடைசிவரை கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.. அதுமட்டுமல்ல, எப்போதுமே ஓபிஎஸ், தங்களுக்கு கீழ்ப்படிந்து நடப்பதால், மறைமுக ஆதரவு வலையையும் அவர் பக்கம் வீசி வருவதாகவும் சொல்கிறார்கள்.

 ரத்தத்தின் ரத்தங்கள்

ரத்தத்தின் ரத்தங்கள்

அதேபோல, திமுகவை பொறுத்தவரை, ஆட்சி அமைந்ததில் இருந்தே ஓபிஎஸ் மீது சாப்ட் கார்னரை வைத்துள்ளது.. அதற்கேற்றவாறு, ஓபிஎஸ்ஸும் திமுகவை ஓவராக பகைத்து கொள்ளவில்லை.. காட்டமான அறிக்கைகளைகூட விடவில்லை.. மாறாக, கருணாநிதியை புகழும் அளவுக்கு சென்றார்.. அவரது மகன் ஓபிஆர், முதல்வர் ஸ்டாலினை புகழும் அளவுக்கு சென்றார்.. அதிமுக அலுவலகம் சூறையாடியபோதுகூட, பாதுகாப்பு விஷயத்தில், தமிழக அரசு, ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாகவே நடந்து கொண்டதாக எடப்பாடி டீம் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியது.. இதையெல்லாம் மனதில் வைத்துதான், திமுகவுக்கு காவடி தூக்குகிறார் என்றுகூட விமர்சித்தது.

 பிளான் + திட்டம்

பிளான் + திட்டம்

இதை திமுக கண்டுகொள்ளவில்லை என்றாலும், சைலண்ட்டாக எடப்பாடி வீழ்ச்சியை எதிர்நோக்கியே இருந்தது.. எடப்பாடிக்கான செல்வாக்கும், ஆதரவும், தங்களுக்கு ஆபத்து என்பதையும் திமுக அரசு உணர்ந்திருந்தது.. அதனாலேயே, வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தியது.. சிபிஐ வரை விஜயபாஸ்கர் விஷயத்தை தோண்டி எடுத்தது.. கொடநாடு விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமியை டென்ஷனாக்கியது.. தனக்கு வேண்டியவர்கள் அத்தனை பேரிடமும், ரெய்டுகளை ஏவிவிட்டது.. ஆக மொத்தம் திமுக அரசு வந்ததில் இருந்தே எடப்பாடி பழனிசாமி நிம்மதியை தொலைத்தார் என்றே தெரிகிறது.

Recommended Video

    OPS வசமான அதிமுக
     ஓபிஎஸ் + திமுக

    ஓபிஎஸ் + திமுக

    இன்றைய தினம் ஓபிஎஸ்ஸூக்கு ஆதரவாக பொதுக்குழுவில் தீர்ப்பு வெளியாகி உள்ளது.. இந்த தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு எந்த அளவுக்கு குஷியை தந்து வருகிறதோ, அதுபோலவே திமுக - பாஜக இடையே நிம்மதியை தந்து வருகிறது.. இனி அப்பீலுக்கு செல்வார் எடப்பாடி பழனிசாமி.. இதுகுறித்த விசாரணைகள் இனி தொடர்ந்து நடக்கும்.. எப்படியும் எம்பி தேர்தல் வரும்வரை இந்த வழக்கு நீண்டு கொண்டே போகும், என்கிறார்கள்.. இதுவும் திமுக - பாஜகவுக்கு பிளஸ் பாயிண்ட்டாகவே இருக்கபோகிறது என்கிறார்கள்.. இந்த தீர்ப்பு 2 சாதகமான விஷயங்களை ஓபிஎஸ்ஸுக்கு பெற்று தந்துள்ள நிலையில், திமுக, பாஜக என 2 பேர் மறைமுக பயன்பெற்றதாக கருதப்படுகிறது. ஆக மொத்தம் ஓபிஎஸ் + திமுக + பாஜகவின் கனவு நனவாகி உள்ளது..!

    English summary
    Are DMK and BJP plans successful and What is edapadi palanisamy going to do next ஓபிஎஸ்ஸுடன் சேர்த்து திமுக, பாஜக தரப்பு குஷியில் உள்ளதாக கூறப்படுகிற
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X