சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"விட்றாதீங்க" அவங்கள.. சீமான் போட்ட சீக்ரெட் உத்தரவு.. 10 ஆயிரமா?.. இதெல்லாம் நடக்குமா? அனலில் களம்

நாம் தமிழர் கட்சி சீமான், தன்னுடைய நிர்வாகிகளுக்கு புது உத்தரவை பிறப்பித்துள்ளாராம்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவைவிட முந்திக்கொண்டு, களத்தில் இறங்கி உள்ளது சீமானின் நாம் தமிழர் கட்சி.. அந்தவகையில் புது வியூகங்களை அமைத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் மையம் கொண்டு வருகிறது.

கடந்த 2021 தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி 11 ஆயிரத்து 629 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தையும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார் 10 ஆயிரத்து 5 வாக்குகள் பெற்று 4-வது இடத்தையும் பெற்றனர்.

இதுவரை தனித்து தேர்தல்களை சந்தித்து வரும் நாம் தமிழர் கட்சி பல தொகுதிகளில் காங்கிரசின் தோல்விக்கு காரணமாக இருந்துள்ளதை மறுக்க முடியாது. கடந்த முறை, இதே ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தை பிடித்திருந்தது நாம் தமிழர் கட்சி..

ஆதரவாளர்களை அணி திரட்டும் டாக்டர் சரவணன்! மதுரையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைப்பு விழா! ஆதரவாளர்களை அணி திரட்டும் டாக்டர் சரவணன்! மதுரையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைப்பு விழா!

டாப் 3

டாப் 3

பாஜகவை போலவே, காங்கிரஸையும் பொதுவான அரசியல் எதிரியாக கருதி வருகிறது நாம் தமிழர் கட்சி.. "பாஜக - காங்கிரஸ் இவங்க 2 பேரும் ஒன்றுதான்" என்று அடிக்கடி சொல்லி கொண்டே இருப்பவர் சீமான்.. அதனால்தான், மற்ற தொகுதிகளைவிட, காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் மட்டும், எப்போதுமே கூடுதலாக கவனம் செலுத்தி, பிரச்சாரங்களிலும் ஈடுபடும் நாம் தமிழர் கட்சி. அந்தவகையில், ஒவ்வொரு தேர்தலிலும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸின் வாக்குகளையும் பிரிப்பதிலும் முக்கிய பங்காற்றி வருகிறது நாம் தமிழர் கட்சி.. நடக்க போகும் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடாத சூழலில், நாம் தமிழர் கட்சி 2வது அல்லது 3வது இடத்தை கூட தக்கவைக்கலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்..

பெரிய சான்ஸ்

பெரிய சான்ஸ்

போதாக்குறைக்கு காங்கிரஸே நேரடியாக களத்தில் இறங்கி உள்ளதால், இந்த சான்ஸை மிஸ் செய்யக்கூடாது என்று நினைக்கிறாராம் சீமான்.. அதனால்தானோ என்னவோ இந்த முறை 12 நாட்களுக்கு மேல் ஈரோடு கிழக்கு தொகுதியில் தங்கி பிரச்சாரம் மேற்கொள்ள போவதாக சொல்லி உள்ளார் சீமான்.. கடந்த முறை தேர்தலின்போது, ஒருநாள் மட்டுமே தொகுதியில் தங்கி வேலை பார்த்த நிலையில், இந்த முறை 12 நாட்கள் தங்கி, தெருத்தெருவாக சென்று மக்களை சந்தித்து வாக்கு கேட்க போவதாக சொல்லி உள்ளார். இது பிரதான கட்சிகளின் கவனத்தையும் திசை திருப்பி வருகிறது.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

இப்போது புது உத்தரவை ஒன்றை கட்சி நிர்வாகிகளுக்கு பிறப்பித்துள்ளாராம் சீமான்.. மேனகா என்ற பெண் வேட்பாளரை சீமான் இங்கு களமிறக்கி உள்ளார்.. இவர் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்.. கடந்த தேர்தலின்போது, ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, 10 ஆயிரம் ஓட்டுகள் வாக்குகளை பெற்றிருந்தது. ஆனால் இந்த முறை காங்கிரசுக்கு தன்னுடைய ஆதரவை கமல் தந்துள்ளார். இதைதான் சாதகமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று சீமான் நினைக்கிறாராம்.. மய்யம் பெற்ற 10 ஆயிரம் ஓட்டுகளையும் எப்படியாவது நாம் தமிழர் கட்சி பக்கம் கொண்டுவந்துவிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு சீமான் உத்தரவு போட்டுள்ளதாகவும் செய்திகள் பரபரக்கின்றன.

ஜஸ்ட் பாஸ்

ஜஸ்ட் பாஸ்

சீமான் பெறப்போகும் ஒவ்வொரு ஓட்டும், எம்பி தேர்தல் சமயத்தில் பேருதவியாக என்று கருதப்படுகிறது.. கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக 1 சதவீத வாக்கு வங்கியில் தோல்வியை சந்தித்து.. ஜஸ்ட் பாஸ் எடுத்த அதிமுக ஆட்சியை பிடித்திருந்தது.. இதற்கு காரணம் நாம் தமிழர் ஓட்டுக்கள் என்று தான் அப்போதே பரவலாக பேசப்பட்டது.. அதேபோல, கடந்த 2021 தேர்தலிலும் 3வது கட்சியாக உருவெடுத்தது.. இதற்கு காரணம், திமுக - அதிமுக கட்சிகளின் வாக்குகளை தங்கள் பக்கம் நாம் தமிழர் கட்சி பெருமளவு மாற்றியதுதான் என்றார்கள்.. அந்த அளவுக்கு ஒவ்வொரு தேர்தலும் சீமான் பெற்ற வாக்கு சதவீதமானது பேசப்பட்டு வருகிறது.

தூண்டில் வலை

தூண்டில் வலை

இந்த முறையும், இடைத்தேர்தலில் அதே போல எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. திமுக கூட்டணி வலுவாக களத்தில் இருந்தாலும், திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை அறுவடை செய்ய எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், அமமுக, நாம் தமிழர் கட்சி போன்றவை தனித்தனியாக தயாராகி வருகின்றன என்றாலும், திமுக அதிருப்தி வாக்குகளை யார் பெற போகிறார்கள் என்பதே தற்போது உற்றுநோக்கப்பட்டு வரும் அம்சமாகும்.. கருணாநிதி பேனா சிலை விஷயத்தை சீமான் கையில் எடுத்துள்ள நிலையில், மநீம வாக்குகளுக்கும் வலைவீசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Are these positive things for Naam Tamizhar Party Seeman and Who will get the DMK disaffected votes
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X