ஆர்எஸ்எஸ்க்கும் காந்தி படுகொலைக்கும் தொடர்பு இல்லை.. கோவை சம்பவம் குறித்து புகார் - அர்ஜுன் சம்பத்
சென்னை : ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் காந்தி படுகொலைக்கும் தொடர்பு இல்லை என்பது ஊரறிந்த உண்மை எனவும், கோவையில் ஆர்எஸ்எஸ் குறித்தும் இந்து உணர்வாளர்கள் குறித்தும் வெறுப்பு பிரச்சாரம் செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என இந்து மக்கள் நிறுவனர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
மகாத்மா காந்தியின் 75 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் மகாத்மா காந்தியடிகளுக்கு பொதுமக்கள் அரசியல் கட்சியினர் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்திய மக்களின் மாபெரும் தலைவராக விளங்கிய மகாத்மா காந்தி அவர்களை ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த கோட்சே சுட்டுக் கொன்ற நாள் எனவும், மதவெறிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட உறுதி ஏற்போம் என்ற தலைப்பின் அடிப்படையில் கோவையில் சிபிஎம் கட்சி ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவையில் உறுதிமொழி
நிகழ்ச்சியின் உறுதிமொழி எடுத்துக் கொண்டிருந்த சிபிஎம் மற்றும் விசிக மற்றும் இடதுசாரி அமைப்புகள் உறுதிமொழியேற்பில் கோட்சே பெயரையும் இந்து மதவெறி என்ற வார்த்தையும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு காவல் துறை எதிர்ப்பு தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. காவல்துறையினரின் இந்த செயலுக்கு சிபிஎம், தபெதிக, வி.சி உள்ளிட்ட இடதுசாரி அமைப்பினர் காவல் துறையினருடன் வாக்குவாதம் செய்தனர்.

அர்ஜுன் சம்பத் அறிக்கை
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பின்னர் போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து மீண்டும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் காந்தி படுகொலைக்கும் தொடர்பு இல்லை என்பது ஊரறிந்த உண்மை எனவும், கோவையில் ஆர்எஸ்எஸ் குறித்தும் இந்து உணர்வாளர்கள் குறித்தும் வெறுப்பு பிரச்சாரம் செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என இந்து மக்கள் நிறுவனர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.

கோவை நிகழ்ச்சி
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவையில் காந்தி நினைவு தின உறுதிமொழியேற்பில் கோட்சே பெயரையும் இந்து மதவெறி என்ற வார்த்தையும் பயன்படுத்த காவல் துறை எதிர்ப்புக் குறித்து சிபிஎம், தபெதிக, வி.சி உள்ளிட்ட இடதுசாரி அமைப்பினர் காவல் துறையினருடன் வாக்குவாதம் செய்துள்ளனர்.
Recommended Video

ஆர்எஸ்எஸ்க்கு தொடர்பில்லை
ஆர். எஸ். எஸ் அமைப்பிற்கும் காந்தி படுகொலைக்கும் தொடர்பு இல்லை என்பது ஊரறிந்த உண்மை. ராகுல் இப்படி அவதூறு பிரச்சாரம் செய்த காரணத்தினால் நீதி மன்றத்தில் மன்னிப்பு கோரினார். இன்று கோவையில் ஆர். எஸ். எஸ். குறித்தும் இந்துஉணர்வாளர்கள் குறித்தும் வெறுப்பு பிரச்சாரம் செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும். இது குறித்து கோரிக்கை புகார் மனு சமர்ப்பிக்கப்படுகிறது" என அந்த அறிக்கையில் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications