தேர்தல் நடவடிக்கையாக.. ஒரே நாளில் 228 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்.. டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் சென்னையில் பணிபுரியும் 228 காவல் ஆய்வாளர்களைப் பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஐந்து மாநில தேர்தல்களுடன் இணைந்து மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த முறை திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சி எனப் பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்துக் கட்சியினரும் தங்கள் தேர்தல் பிரசாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியாகப் பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு பணியிட மாற்றமும் வழங்கப்பட்டு வருகிறது.
தேர்தல் நெருங்கும் நிலையில், சென்னையில் ஒரே நாளில் 228 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். முதல்கட்டமாக 112 காவல் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து, 116 ஆய்வாளர்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதுதவிர போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் 49 பேரையும் இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலங்களில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் பணியிட மாற்ற உத்தரவுதான் இது என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக மற்ற ஊர்களிலிருந்து சென்னைக்கும் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications