சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆடி போனா ஆவணி.. ஆளை மயக்கும் ஆவடி.. தமிழகத்தின் 5வது பெரிய மாநகராட்சி!

Google Oneindia Tamil News

Recommended Video

    Avadi becomes Corporation | 3 நகராட்சிகளை இணைத்து பிறந்தது ஆவடி மாநகராட்சி- வீடியோ

    சென்னை சென்னைக்கு தோ.. பக்கத்தில் இருக்கும் சின்ன ஊர்தான் ஆவடி.. இன்று அது தனிக் குடும்பமாகப் போகிறது. அதாவது தனி மாநகராட்சியாகிறது.

    தமிழகத்தின் குட்டி மாநகராட்சிகளில் இந்த ஆவடியும் இணைகிறது. சென்னையின் செல்லக் குழந்தைகளில் ஒன்றுதான் இந்த ஆவடி. அந்த அளவுக்கு சென்னையின் ஒரு அங்கமாக இணைந்திருந்த ஆவடியை இன்று தனி மாநகராட்சியாக்கி சொந்தக் காலில் நிற்க வைத்துள்ளது தமிழக அரசு.

    ஆவடி என்றதுமே டேங்க்தான் நினைவுக்கு வரும். இந்திய ராணுவத்திற்கு டாங்குகளை தயாரித்து வழங்கும் ஆலை இங்குதான் உள்ளது. இந்திய பாதுகாப்புத்துறையில் மிக முக்கியமாமான இடம் இந்த ஆவடிக்கு உண்டு. ஆவடிக்கென்று பல விசேஷங்கள் உள்ளன.

    3 நகராட்சிகள் 11 ஊராட்சிகளை இணைத்து.. பிறந்தது ஆவடி மாநகராட்சி3 நகராட்சிகள் 11 ஊராட்சிகளை இணைத்து.. பிறந்தது ஆவடி மாநகராட்சி

    ஆவடி டாங்க்

    ஆவடி டாங்க்

    ஏன் அதன் பெயரே ஒரு விசேஷம்தான் என்று சொல்வார்கள். அதாவது ஆவடி என்றால் Armoured Vehicles and Ammunition Depot of India என்பதன் சுருக்கம்தான் ஆவடி என்பார்கள். ஆனால் அது உண்மை அல்ல. காரணம் 60களில்தான் ஆவடி டாங்க் பேக்டரி இங்கு வந்தது. ஆனால் அதற்கு முன்பே இருந்த நகர்ப் பகுதிதான் ஆவடி.

    அம்பத்தூர்

    அம்பத்தூர்

    ஒரு காலத்தில் இது ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்தது. பின்னர் இது திருவள்ளூர் மாவட்டத்தில் இணைந்தது. சென்னை புறகர்ப் பகுதிகளில் தாம்பரத்தை விட அதி வேகமாக வளர்ந்த பகுதிதான் ஆவடி. காரணம், ஆவடியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நிரம்பி வழியும் தொழில் நிறுவனங்கள். ஆவடியின் ஒரு பக்கம் அம்பத்தூர் உள்ளது.

    ரயில்வே தொழிற்சாலை

    ரயில்வே தொழிற்சாலை

    இந்திய ராணுவ பாதுகாப்பு துறைக்கு சொந்தமான ஆவடி டேங்க் பேக்டரி, படைத்துறையின் உடை தொழிற்சாலை, இந்திய விமான படை, போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், மத்திய வாகன கிடங்கு, இன்ஜின் பேக்டரி, மத்திய உணவு கழகம், தமிழ்நாடு சிறப்பு காவல் படைகள், ரெயில்வே தொழிற்சாலை ஆகியவைகளும் உள்ளன.

    வருவாய்

    வருவாய்

    பாதுகாப்பு துறை நிறுவனங்கள் உள்ள ஆவடியில் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்தவர்கள் வசிக்கின்றனர். இதனால் ஆவடி நகராட்சி தமிழ்நாட்டில் மட்டும் இன்றி இந்தியாவிலேயே முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த நகராட்சியில் ஆண்டு ஒன்றுக்கு ரூ.30கோடி வருவாய் கிடைக்கிறது. இந்த நகராட்சிக்கு பிறகு உருவான பல உள்ளாட்சிகளில் பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. குறிப்பாக, ஆவடியை சுற்றியுள்ள ஊராட்சிகளில் கோடிக்கணக்கில் வருவாய் வருகிறது.

    உட்கட்டமைப்பு

    உட்கட்டமைப்பு

    புதிதாக அறிவிக்கப்பட்ட ஆவடி மாநகராட்சியில், தற்போதைய நகராட்சியில் உள்ள 48வார்டுகள் கொண்ட பகுதிகள் மட்டும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால், உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை விரைந்து முடித்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை தொடர்ந்து ஆவடி நகர மக்கள் நீண்ட கால கனவு நிறைவேறி உள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    தனிப்பெரும்பான்மை

    தனிப்பெரும்பான்மை

    ஆவடி 2011ம் ஆண்டு தனி சட்டசபைத் தொகுதியானது. அப்போது முதல் இது அதிமுக வசமே இருந்து வருகிறது. முதல் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அப்துல் ரஹீம். தற்போது உறுப்பினராக இருப்பவர் மாபோய் பாண்டியராஜன். இவர் அமைச்சராகவும் இருக்கிறார். அந்த வகையில் ஆவடிக்கு தனிப் பெருமையை தேடிக் கொடுத்துள்ளார் பாண்டியராஜன். இது ஒரு வகையில் அதிமுகவுக்கும் கூட சாதகமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

    புதிதாய்ப் பிறந்த குட்டிக் குழந்தை ஆவடியை வாழ்த்துவோம்.. தாயை மிஞ்சிய சேயாக திகழ்வதற்கு!

    English summary
    Avadi becomes 15th Corporation in Tamilnadu and this is the pleasure of the Avadi people
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X