இனி "சர்ருன்னு" போகலாம்.. பெங்களூர்-சென்னைவாசிகளுக்கு "குட்நியூஸ்" சொன்ன அமைச்சர்.. பல வருட ஏக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெங்களூ-சென்னை 4 வழி விரைவுச்சாலை பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருவதாகவும், இன்னும் 2 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் லோக்சபாவில் மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

சென்னையிலிருந்து பெங்களூருக்கு மிக வேகமாக செல்லும் வகையில் அதிவிரைவு சாலை அமைக்கப்படும் என மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து சென்னை- பெங்களூரு அதிவிரைவு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு வேகமாக நடைபெற்று வருகின்றன.

விரைவுச்சாலை

விரைவுச்சாலை

சென்னையில் இருந்து பெங்களூரு்குக்கு மிக குறைவான நேரத்தில் செல்லும் வகையில் இந்த சாலை அமைப்பதற்கான முதல் கட்ட பணிகள் நடந்துவருகிறது. இதற்காக தமிழகத்தில் சாலை அமைக்கும் பணிகள் சென்னை அருகே இருங்காட்டுக்கோட்டை பகுதியில் தொடங்கி காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்கள் வழியாக பெங்களூரு சென்றடையும் வகையில் அமைக்கப்படுகிறது. இந்த நிலையில், நடைபெற்று கொண்டிருக்கும் லோக் சபாவில் பெங்களூரு-சென்னை அதிவிரைவு சாலை 2 ஆண்டுகளுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

நிதின் கட்காரி பேச்சு

நிதின் கட்காரி பேச்சு

பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை அடுத்த 2 ஆண்டுகளில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை-பெங்களூரு விரைவு சாலையின் 10 கட்ட பணிகளில் 6 கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் 106 கி.மீ தூரம் செல்லும் இந்த பாதையில் 3 கட்டங்களாக பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்த நெடுஞ்சாலையில் 12 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கும் பணியை ஒரு தனியார் காண்ட்ராக்டரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 262 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்பட உள்ள இந்த பசுமை வழி விரைவுச்சாலை கர்நாடகாவில் 70 கிலோமீட்டர் ஆந்திராவில் 85 கிலோமீட்டர் தமிழகத்தில் 100 கிலோமீட்டர் என மூன்று மாநிலங்களையும் இணைக்கிறது.

பயண நேரம் 3 மணியாக குறையும்

பயண நேரம் 3 மணியாக குறையும்

சென்னையில் இருந்து பெங்களூரு வரை 4 வழிச்சாலையாக அமைக்கப்படும் இந்த விரைவுச்சாலை திட்டம் நிறைவடையும் பட்சத்தில், சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்லும் பயண நேரம் வெறும் 3 மணி நேரமாக குறையும். இந்த திட்ட பணிக்காக ரூ 12,500 கோடி நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக விரைவுச் சாலை இயக்கப்படும். இந்த விரைவுச்சாலை அமைக்கும் பணியானது தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 எந்தவித தொந்தரவுமின்றி

எந்தவித தொந்தரவுமின்றி

இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்கள் அதிபட்சமாக 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் இருபுறமும் காடாக இருப்பதால் வனவிலங்குகள் குறுக்கே வரும் அபாயம் உள்ளது. எனவே இதனை தடுக்கும் வகையில் சாலையின் இருபுறத்திலும் உயரமான வேலி போன்ற அமைப்புகள் வைக்கப்படும். இதன் மூலம் வாகன ஓடிகள் எந்தவித தொந்தரவுமின்றி பயணத்தை மேற்கொள்ளலாம். இதேபோல் இந்த சாலையில் செல்லும் வாகனங்களால் உள்ளூர் போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் சாலை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+