அப்படி போடு! ஸ்டாலின் எடுத்த மெகா முடிவு.. தேசிய அளவில் கவனம் பெரும் மூவ்.. குஷியில் ராகுல் & கதர்ஸ்
சென்னை: காங்கிரஸ் கட்சி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரையில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வாரா என்ற கேள்வி நிலவி வந்தது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின்தான் ராகுல் காந்தியுடன் இந்த நிகழ்வை தொடங்கி வைக்க உள்ளார் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சியில் தற்போது கடுமையான உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. நேரு குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன.
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கும் உட்கட்சித் தேர்தல் வரும் அக்.17ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் மற்றும் சோனியா காந்திக்கு நெருக்கமான அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சியின் தலைவராகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு இடையில் காங்கிரஸ் மூத்த தலைவர் எம்பி ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொள்ள இருக்கிறார்.

யாத்திரை
காங்கிரஸ் கட்சியை மீட்டு எடுக்கும் வகையிலும், பாஜகவிற்கு எதிரான சக்திகளை ஒன்று திரட்டும் வகையிலும் இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது. செப்டம்பர் 7ம் தேதி காங்கிரஸ் சார்பாக கன்னியாகுமரியில் நாடு முழுக்க யாத்திரை நடத்தப்பட உள்ளது. இதை ராகுல் காந்திதான் தொடங்கி வைக்கிறார். காங்கிரஸ் நடத்த போகும் மிகப்பெரிய யாத்திரையாக இது பார்க்கப்படுகிறது. இதை காங்கிரஸ் கட்சி இரண்டாவது உப்பு சத்தியாகிரக போராட்டமாக பார்க்கிறது.

போராட்டம்
காங்கிரஸ் மட்டுமின்றி காங்கிரஸ் சாராத பல அறிவுஜீவிகள், இடதுசாரிகள், எழுத்தாளர்கள் இந்த பேரணியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். நாடு முழுக்க இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது. ஆனால் இதில் மற்ற எதிர்க்கட்சிகள் கலந்து கொள்வது சந்தேகம்தான். . 3750 கிலோமீட்டருக்கு இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது. 150 நாட்கள் காங்கிரஸ் சார்பாக இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது. தினமும் 20- 30 கிலோ மீட்டர் தூரம் ராகுல் காந்தி இதற்காக நடைபயணம் செல்ல உள்ளார்.

எங்கு பயணம்
சென்னைக்கு வரும் ராகுல் காந்தி.. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தி பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி செல்ல இருக்கிறார். கன்னியாகுமரியில் இருந்து கேரளா.. அங்கிருந்து கர்நாடகா, ஆந்திர பிரதேசம் தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை அடக்கி கடைசியில் ஜம்மு காஷ்மீரில் பயணத்தை முடிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள்
இந்த பயணத்தில் மற்ற எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ள வாய்ப்பு குறைவாக உள்ள நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. காந்தி மண்டபத்தில் தொடங்கும் இந்த பயணத்தை முதல்வர் ஸ்டாலின் ராகுல் காந்தியுடன் தொடங்கி வைக்க உள்ளார் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தமிழ்நாடு தலைவர் கே. எஸ் அழகிரி இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தேசிய அளவில் கவனம்
ஸ்டாலின் தற்போது தேசிய அளவில் அரசியல் தலைவராக உருவெடுக்க வேண்டும் என்று விரும்புகிறார். தேசிய அளவில் திமுகவை கொண்டு செல்ல வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறார். இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் இந்த பயணத்தில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார். முன்னதாக காங்கிரஸ் - திமுக இடையே மோதல் உள்ளது. பேரறிவாளன் விடுதலை காரணமாகவும், மோடியுடன் நெருக்கத்தை காட்டியதால் இரண்டு தரப்பிற்கும் இடையில் மனஸ்தாபம் உள்ளது என்று செய்தி வந்தது. இதனால் ஸ்டாலின் இந்த பயணத்தில் ராகுலுடன் துவக்க விழா மேடையில் தோன்றுவாரா என்ற கேள்வி எழுந்தது.

உறுதி
இதையடுத்து சமீபத்தில்தான், திமுக கூட்டணி கொள்கை கூட்டணி. எங்கள் கொள்கை அறிவாலயத்தில் எப்படி இருக்கிறதோ அப்படித்தான் ஆட்சியிலும் இருக்கும். நாங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். பாஜகவுடன் சிறிய சமரசத்தை கூட நாங்கள் செய்து கொள்ள மாட்டோம், என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார் . இந்த நிலையில்தான் ஸ்டாலின் இந்த நிகழ்வில் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது. காங்கிரசின் இந்த யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்கும் முதல் மாற்று கட்சி காங்கிரஸ்தான். இந்த நிகழ்விற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் மிக தீவிரமாக ஏற்பாடுகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
டெலிவரி வேலை மூலம் தினசரி வருமானம், வாராந்திர இன்சென்டிவுடன் 30,000 வரை சம்பாதியுங்கள்
-
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Congress: விடாப்பிடியாக வாங்கிய காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை? லிஸ்ட் வெளியானது -
குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
காங்., விற்று திண்கின்றனர்! இனி யாராலும் காக்க முடியாது.. திமுக தொகுதி பங்கீட்டால் ஜோதிமணி அட்டாக் -
மதுரை வடக்கு.. பிடிவாதம் காட்டிய மாணிக்கம் தாகூர்.. கண்டுகொள்ளாத திமுக! விருதுநகர் தொகுதியும் போச்சா -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட் -
காங்கிரஸ் கை வசம் வந்த ஈரோடு கிழக்கு! ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தி சமன்னா போட்டியா? -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications