பிக்பாஸ்:சங்கியா என கேலி பேசிய மங்கிக்கு கரிபூசிய ஜிபி முத்து.. ட்வீட்டில் கமலை தாக்கிய எஸ்வி சேகர்?
சென்னை: மகன் உடல்நலத்தை காரணம் கூறி பிக்பாஸ் வீட்டில் இருந்து ஜிபி முத்து வெளியேறி உள்ளார். இந்நிலையில் ஜிபி முத்து காவி துண்டு அணிந்திருப்பது போன்ற போட்டோவை பாஜகவின் எஸ்வி சேகர் ட்விட்டரில் பதிவிட்டு ‛‛நீ சங்கியா என கேலி பேசிய மங்கிக்கு முகத்தில் கரிபூசி நம் மனதில் உயர்ந்து நிற்கின்றார்'' என ஜிபி முத்துவை புகழ்ந்துள்ளார். மேலும் இந்த ட்வீட்டில் அவர் கமல்ஹாசனை தாக்கி பேசினாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் என மொத்தம் 20 பேர் பங்கெடுத்துள்ளனர்.
இதில் ஒருவர் தான் ஜிபி முத்து. டிக்டாக் மூலம் பிரபலமடைந்த இவருக்கு தமிழ்நாடு முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

முதல் போட்டியாளராக..
‛‛செத்தப்பயலே'' எனும் வார்த்தை மூலம் தமிழ்நாட்டின் பெரு நகரங்கள் முதல் சிறு கிராமங்கள் வரை அனைவருக்கும் பரீட்சயமான நபராக மாறிப்போனார். இந்நிலையில் தான் ஜிபி முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக நுழைந்தார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதாலே கடந்த ஐந்து சீசனை பார்க்காதவர்கள் கூட இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க தொடங்கினர்.

இணையதளங்களில் டிரெண்ட்
அதேபோல் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தனது இயல்பை மாற்றாமல் தனது இயல்பான பேச்சு மற்றும் செயல்பாட்டால் ஜிபிமுத்து அனைவரையும் கவர்ந்து வருகிறார். மேலும் அவரது பெயரில் சமூக வலைதளங்களில் புதிதாக அக்கவுண்ட்கள் துவங்கப்பட்டு அவர் சார்ந்த வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. இதுவும் இணையதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

ஆதாம்-ஏவாள் காமெடி
குறிப்பாக முதல் நாளில் கமல் கூறிய ஆதாம், ஏவாள் கதையை கேட்ட ஜிபி முத்து ஆதாமா? அது யாரு? என கமலிடம் திரும்ப கேள்வி எழுப்பி அவரையே விழிபிதுங்க வைத்த வீடியோவுக்கு இன்று வரை தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. மேலும் அவர் அவ்வப்போது கொடுக்கும் ரியாக்சன்கள், தூத்துக்குடி வட்டார வழக்கில் அவர் பேசும் வார்த்தைகளின் வீடியோக்கள் இணையதளங்களில் குவிந்து வந்தன.

குடும்ப நியாபகம்
இந்நிலையில் தான் சில நாட்களாக ஜிபி முத்து தனது குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பதை நினைத்து மனம் வருந்தி வருகிறார். மேலும் குடும்பத்தை பிரிந்து பிக்பாஸில் பங்கேற்ற முடியவில்லை. குழந்தைகளின் நியாபகமாகவே உள்ளது. அவர்களை பார்க்க வேண்டும் என ஜபி முத்து கூறி வருகிறார். இதனால் தீபாவளிக்கு அவரை காண குடும்பத்தினர் வரலாம் என்ற தகவல்கள் பரவின.

மகனை கூறி வெளியேறினார்
இதுதொடர்பாக ஜிபி முத்து நடிகர் கமல்ஹாசனிடம் கூறினார். எனக்கு என் பையனை பார்க்க வேண்டும். வீட்டு போகிறேன் என 5 நாட்களாக சொல்லிட்டே இருக்கிறேன். பையனுக்கு உடல்நலம் சரியில்லை. நான் பிக்பாசுக்கு வந்த பிறகு கூட முடிந்தவரை தான் இருப்பேன் என கூறிவிட்டு வந்தேன். என்னால் முடியவில்லை. என் பிள்ளை மீது தான் உயிராக இருக்கிறேன். எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க.. பணம், காசை விட என் பிள்ளைகள் தான் முக்கியம் என வளர்ந்துவிட்டேன் என கூறினார். இதையடுத்து ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

எஸ்வி சேகர் ட்விட்
இந்நிலையில் பாஜக கட்சியை சேர்ந்த எஸ்வி சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜிபி முத்துவை பெருமையாக கூறி பதிவு ஒன்று செய்துள்ளார். அதில் நெற்றியில் குங்குமம், சந்தனத்துடன், கழுத்தில் காவி துண்டு அணிந்துள்ள ஜிபி முத்துவின் படத்தை எஸ்வி சேகர் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த பதிவில், ‛‛ நீ சங்கியா என கேலி பேசப்பட்டவர், 100 நாள் வேலை வாய்ப்புத் திட்ட பணத்தைவிட தன் மகன் மேல் வைத்திருக்கும் பாசமே மேல் என நிரூபித்து, கேலி பேசிய மங்கிக்கு முகத்தில் கரிபூசி நம் மனதில் உயர்ந்து நிற்கின்றார்'' என குறிப்பிட்டுள்ளார்.

ட்வீட்டுக்கான காரணம் என்ன?
முன்னதாக சில நாட்களுக்கு முன்பு ஜிபி முத்துவுக்கு ரசிகர்கள் அனுப்பிய கடிதத்தை சக போட்டியாளரான அஜீம் படித்து காட்டினார். அதில், ‛‛தலைவரே பிக்பாஸ் வீட்டில் சிங்கியா? சொங்கியா? மங்கியா? என்று வினா எழுப்பப்பட்டு இருந்தது. இதனை கேட்டு ஜிபி முத்து பதிலளிக்காமல் நிற்க கமல்ஹாசனோ "இன்னொன்றை விட்டுவிட்டார்களே! எனக்கும் அதான் தோன்றியது" என்று கூற, இன்னொரு போட்டியாளரான அமுதவாணன், சங்கி மங்கி என்ற சொன்னார். இதனை குறிப்பிட்டு தான் எஸ்வி சேகர் தற்போது ட்வீட் செய்துள்ளார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications