என் புள்ளைங்க தான் முக்கியம்! மனங்களை அள்ளிய ஜிபி முத்து! இப்போ எவ்வளவு வருமானம் வருது தெரியுமா?
சென்னை : மரக்கடையில் ஆரம்பித்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் உலகெங்கும் உள்ள தமிழர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்துள்ள ஜிபி முத்து தற்போது கடை திறப்பு விழா, சினிமா, ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நல்ல முறையில் வாழ்க்கையில் முன்னேறி வருவதாகவும், அவரது வருமானம் லட்சக்கணக்காக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜிபி முத்து.. தற்போது இந்த பெயரை தமிழ்நாட்டில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. பழைய மர சாமான்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த ஜிபி முத்து இன்று ஒவ்வொரு வீட்டில் செல்ல பிள்ளையாக மாறி இருக்கிறார் என்றால் அதனை யாரும் மறுக்க முடியாது.

ஜிபி முத்து
80ஸ் கிட்ஸ்கள் தொடங்கி 2கே கிட்ஸ்கள் வரை அனைவருக்கும் பரிச்சயமான ஜிபி முத்து விடிய விடிய டிக் டாக் போட்டு இணையவாசிகளிடையே திடீர் பிரபலமானார். பாட்டு பாடி மிமிக்கிரி செய்து உயிரைக் கொடுத்து டிக் டாக்கில் பலரும் வீடியோக்களை போட்டுக் கொண்டிருக்க, எந்த மெனக்கடலும் இல்லாமல் சைனாக்காரர்களே பொறாமைப்படும் அளவுக்கு செல்வாக்காக வளர்ந்தார் ஜிபி முத்து.

டிக் டாக் வீடியோ
டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு பிரதமர் மோடிக்கு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மெசேஜ் கொடுத்தது இந்திய அளவில் அவரை ட்ரெண்டிங் ஆக்கியது. வருவாய் இல்லாத டிக் டாக்கிலேயே ஒரு நாளைக்கு 70, 80 வீடியோ பதிவிட்ட அவர் யூட்யூபை விட்டு வைப்பாரா? காலையில் எழுவது தொடங்கி, இரவு தூங்கச் செல்வது வரை பதிவிட்டு யூட்யூப்பில் வெற்றிக்கொடி நாட்டினர். தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பேஸ்புக் என தனது கடையை விரித்த அவர் லட்சக்கணக்கான சப்ஸ்கிரைப்பர்களின் துணையோடு பிரபலமாக உருவெடுத்து இருக்கிறார்.

பிக் பாஸ் சீசன் 6
உடன்குடி கிராமத்தில் பிறந்த அவர் இன்று 'ஆடி' காரில் வளம் வருகிறார்.பாடவும் தெரியாது, ஆடவும் தெரியாது, சுட்டுப் போட்டாலும் நடிக்கத் தெரியாது. ஆனால் அவரது வீடியோக்கள் லட்ச கணக்கை தாண்டுகிறது என்றால் அவரது வெள்ளந்தி மனது தான் காரணம் என்கின்றனர் அவருக்கு தெரிந்தவர்கள். கேலி பேசியவர்கள் முன்னால் இன்று கெத்தாக காரில் வலம் வருபவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார்.

ரொம்ப பிசி
தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லை எனவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறுகிறேன் என பரிதாபமாக பேசியபோது பலரும் கண்கள் கலங்கியே போனது. ஆனாலும் புகழ் வெளிச்சம் அவரை அணைத்துக் கொள்ள தயங்கவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த கையோடு சன்னி லியோனுக்கு பால்கோவா ஊட்டி பலரது வயிற்று எரிச்சலை கொட்டிக் கொண்டாலும், சினிமா, ப்ரோமோசன் நிகழ்ச்சிகள், கடை திறப்பு விழா என பிசியாகவே இருக்கிறார்.

வருமானம் எவ்வளவு
தற்போதைய சூழ்நிலையில் யூடியூபில் மட்டும் அவரது வருமானம் மாதம் 3 முதல் 5 லட்சம் ரூபாய் வரை இருக்கிறது. அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு ஊதியமாக மூன்று லட்சம் ரூபாய் வரை அவர் பெற்றதாக கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் கடை திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கலந்து கொள்வதற்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை ஜிபி முத்துவுக்கு வருமானமாக கிடைக்கிறது. மேலும் தற்போது சினிமா வாய்ப்புகளும் ஜிபி முத்துவிற்கு வர தொடங்கியுள்ள நிலையில், மொத்த வருமானம் இன்னும் சில நாட்களில் லட்சங்களில் இருந்து கோடியை தொடும் அவர் வருவாய் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். நல்ல மனசுக்காரர் நன்றாக இருந்தால் சரி தான் என்கின்றனர் அவரது ரசிகர்கள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications