இதுக்குதான் இந்தி படிக்கணும்.. அதிமுக கூட்டணி பற்றி அமித்ஷா சொன்னாரே என்ற கேள்விக்கு சீறிய அண்ணாமலை
சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனிார் நிகழ்ச்சியில் பேசினார். இதுபற்றிய கேள்விக்கு இன்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்தார். அப்போது, ‛‛இதுக்குதாங்க இந்தி படிக்கணும்.. அமித்ஷா கூறிய கருத்தை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்தி படித்திருக்க வேண்டும்..'' எனக்கூறி அவர் கொடுத்த விளக்கம் அதிமுக-பாஜக கூட்டணியில் மீண்டும் குழப்பத்துக்கான புயலை கிளப்பி உள்ளது.
தமிழ்நாட்டில் மாநில கட்சிகளான திமுக, அதிமுக தான் மாற்றி மாற்றி ஆட்சி அமைத்து வருகின்றன. காங்கிரஸ் கட்சி திமுகவுடன் பயணிக்கும் நிலையில் அதிமுகவுடன் பாஜக கைகோர்த்துள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்கு பிறகு அதிமுக-பாஜக கூட்டணியில் அவ்வப்போது குழப்பம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாக கூறப்பட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை. கட்சியை வளர்த்து பாஜக தனித்து போட்டியிட வேண்டும். அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை என பேசியதாக தகவல்கள் வெளியானது. இதற்கு அதிமுகவினர் கருத்து கூற கூட்டணிக்குள் மீண்டும் குழப்பம் உருவானது.

கவனம் ஈர்த்த அமித்ஷா பதில்
இந்நிலையில் தான் டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது செய்தியாளர்கள் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினர். தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று அமித்ஷா தெரிவித்தார். அதன்பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் அதிமுக, பாஜக கூட்டணி தொடர்கிறது என்றார். இதன்மூலம் அதிமுக-பாஜக இடையேயான கூட்டணி பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது.

அண்ணாமலை பேட்டி
இந்நிலையில் தான் சென்னையில் இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்தார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அண்ணாமலையிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு: பத்திரிகையாளர் ஒருவர், ‛‛அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதாக அமித்ஷா கூறியுள்ளாரே?'' என கேள்வி கேட்கப்பட்டது.

இதுக்கு தான் இந்தி படிக்க வேண்டும்
இதற்கு அண்ணாமலை பதிலளித்து பேசுகையில், ‛‛இதற்கு தான் இந்தி படிக்க வேண்டும். அமித்ஷா கூறிய கருத்தை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்தி படித்திருக்க வேண்டும். இந்தியை முழுமையாக புரிந்து கொள்ளும் திறன் கொண்டிருக்க வேண்டும். நான் பத்திரிகை நண்பர்களை குறையாக கூறவில்லை. அமித்ஷாவிடம் கேட்கப்பட்ட கேள்வி மற்றும் அவர் கொடுத்த பதிலை நீங்கள் கேட்டால் உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

கூட்டணி முடிவெடுப்பது யார்?
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி மாநில தலைவராக நான் மேலிட தலைவர்களிடம் எடுத்து கூறுவேன். கூட்டணி குறித்து தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்ற குழு ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கும். தமிழ்நாட்டில் பாஜக வளர வேண்டும். பாஜகவை வளர்க்க வேண்டும் என்பதற்காக தான் நான் மாநில தலைவராக இருக்கிறேன். அதனால் அமித்ஷாவின் பதிலை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் அந்த வீடியோவை பார்த்தால் தெளிவாக தெரியும்.

கட்சி வளர்ச்சி முக்கியம்
நான் அமித்ஷாவிடம் 2 மணிநேரம் தனியாக பேசி வந்துள்ளேன். பல கருத்துகளை தெரிவித்துள்ளேன். அதனை பத்திரிகையாளர்களிடம் பேசுவது சரியாக இருக்காது. தமிழ்நாட்டு தொண்டர்கள், தலைவர்கள் விருப்பம் எப்படி? 2024, 2026 தேர்தல் எப்படி எதிர்கொள்வது? , தமிழ்நாடு அரசியல் மாறி வருவது பற்றியும் பல கருத்துகளை பேசியுள்ளோம். நான் எங்கேயும் அதிமுக எங்களுடன் கூட்டணியில் இல்லை என்ற கருத்தை கூறவில்லை. இன்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுடன் அதிமுக முக்கிய கட்சியாக உள்ளது. எந்த கட்சி மீதும் பாஜகவுக்கு கோபம் இல்லை. மாநில தலைவராக கிளீன் பாலிடிக்ஸ்ஸை முன்நிறுத்தி உள்ளேன். அதனை முன்னெடுப்பேன். இதில் கட்சியின் வளர்ச்சி என்பது மிகவும் முக்கியம்.

அமித்ஷா கூறியதன் அர்த்தம் என்ன?
அமித்ஷாவை பொறுத்தமட்டில் தமிழ்நாட்டில் கூட்டணியில் பாஜக உள்ளதா? என்ற கேள்விக்கு ‛இருக்கிறது' என்று தான் அமித்ஷா கூறினார். ஆனால் அமித்ஷா கூட்டணியை உறுதி செய்துவிட்டதாக செய்தி வெளியிடுகின்றனர். நான் சொல்வதை தான் அமித்ஷாவும் கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதம் உள்ளது. எத்தனை சீட் கொடுப்பார்கள்?, எந்தெந்த சீட் கொடுப்பார்கள்? என்பதை பார்க்க வேண்டும். நமக்கும் அவர்களுக்கான கொள்கைகள், எந்தெந்த இடங்கள் வழங்கப்படுகிறது? என்பன போன்ற விஷயங்கள் உள்ளன. இதனால் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இப்போதே முடிவெடுக்க முடியாது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கும்போது இப்போதே முன்னுரையும், முடிவுரையும் எழுதமுடியாது. இருப்பினும் கட்சி மேலிட உத்தரவுக்கு கட்டுப்படுவோம்'' என்றார்.
-
வானதி சீனிவாசன் ஐசியூவில் அனுமதி.. 3-4 நாட்கள் தொடர் சிகிச்சை தேவையாம்.. என்ன பிரச்சனை? -
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
ஜோசப் விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாக, கணவராக இருக்கணும்.. மீண்டும் தாக்கி பேசிய நயினார் -
முதலில் தமிழன், அப்புறம் தான் இந்து! மேலூர் பாஜகவை அதிரவிட்ட வார்த்தை.. பின்னணியில் விகே பாண்டியன்? -
கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்.. திமுக யாரிடம் செல்லும் என்றே தெரியாது.. அண்ணாமலை பரபர பேச்சு -
எடப்பாடி பெயரை கூட.. மோடி சொல்லாதது இதற்குத்தானா? பாஜகவின் ‘மாஸ்டர் பிளான்’ ஸ்கெட்ச்.. போச்சு -
துரந்தர் 2.. தமிழ்நாட்டில் தடை செய்ய கோரி வழக்கு தள்ளுபடி ஏன்.. ஐகோர்ட் தீர்ப்பு என்ன -
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலர் உமாநாத் மீது நடவடிக்கை கோரி வழக்கு.. ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
போய் டவுசரை போட்டு வேலையை பார்க்க சொல்லுங்க.. அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
ஜனநாயகன் படத்தை வெளியிட்ட விஷக்கிருமிகள்.. அடித்து சொன்ன அண்ணாமலை.. சிபிஐ வராங்களாமே












Click it and Unblock the Notifications