தமிழகத்தில் பிரளயம்? திமுக, அதிமுகவை உடைத்து பாஜக ஆட்சி? கேபி ராமலிங்கம் பகிரங்க வாக்குமூலம்!
சென்னை: தமிழ்நாட்டில் திமுக, அதிமுக எம்.எல்.ஏக்களை கூண்டோடு கட்சி தாவ வைத்து பாஜக ஆட்சி அமைக்கலாம் என அக்கட்சியின் தமிழ்நாடு துணைத் தலைவர் கேபி ராமலிங்கம் பகிரங்கமாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதர மாநிலங்களைப் போல தமிழ்நாட்டில் ஆளும் திமுக ஆட்சியைக் கவிழ்த்து ஆபரேஷன் தாமரை மூலம் பாஜக ஆட்சி அமைப்பதற்கான துளி கூட சாத்தியமான சூழ்நிலை எதுவுமே இல்லை. ஆனால் திமுக, அண்ணா திமுகவை மிரட்டும் வகையில் தற்போது தமிழ்நாடு பாஜகவின் மாநில துணைத் தலைவர் கேபி ராமலிங்கம் ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். 2024 தேர்தலுக்கு பின் திமுகவின் 2 பங்கு எம்.எல்.ஏக்கள், அதிமுகவின் 5-ல் 4 பங்கு எம்.எல்.ஏக்களை கொண்டு பாஜக ஆட்சி அமைக்கும் என்பதுதான் கேபி ராமலிங்கத்தின் பேட்டி.

ஆபரேஷன் தாமரை: பாஜகவைப் பொறுத்தவரையில் எந்த வகையிலாவது ஒரு மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதுதான். அதற்காகவே ஆபரேஷன் தாமரையை பல மாநிலங்களில் செயல்படுத்தி இருக்கிறது. உதாரணமாக மகாராஷ்டிராவில் சிவசேனாவை இரண்டாக உடைத்தது; தேசியவாத காங்கிரஸை இரண்டாக உடைத்தது. இந்த உடைக்கப்பட்ட அணிகளுடன் இணைந்து புதிய ஆட்சியையும் அமைத்தது. கர்நாடகாவிலும் கூட முன்னர் காங்கிரஸ்- ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டு ஆட்சியை கைப்பற்றியது. மத்திய பிரதேசத்திலும் இதே பார்முலாவைத்தான் கையில் எடுத்தது. ஆனால் இந்த மாநிலங்களில் எல்லாம் பாஜக கணிசமான எம்.எல்.ஏக்களை கையில் வைத்திருந்தது. தமிழ்நாட்டு நிலைமை அப்படியானதும் அல்ல.
தமிழக நிலவரம் என்ன?: பாஜகவின் தமிழ்நாட்டில் ஆட்சி எனும் கனவுக்கு ஏதேனும் ஒரு வகையிலாவது வாய்ப்பான சூழல் இருக்கிறதா? என்பதை கள நிலவரங்களே வெளிப்படையாக சொல்லும். தமிழ்நாட்டில் மொத்தம் 234 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவை 118 எம்.எல்.ஏக்கள். தமிழ்நாடு சட்டசபையில் கட்சிகளின் பலம்: திமுக 133; காங்கிரஸ் 18; சிபிஐ-2, விசிக- 4; சிபிஎம் -2 (மொத்தம் 159); அதிமுக -66; பாமக- 5; பாஜக -4 (மொத்தம் 75).
பாஜகவுக்கு 4 எம்.எல்.ஏக்கள்: தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அண்ணா திமுகவே, பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு நிற்கிறது. பாஜகவுக்கு வெறும் 4 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர். ஆட்சியை பிடிக்க பாஜகவுக்கு இன்னும் 110 எம்.எல்.ஏக்கள் தேவை.
பெரும்பான்மை பெறவே முடியாது: திமுக, அண்ணா திமுக எம்.எல்.ஏக்களை சரிபாதியாக பிளவுபடுத்தினால் கூட பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாது என்பதுதான் கள யதார்த்தம். ஒருவேளை அண்ணா திமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவிர எஞ்சிய 65 எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டால் கூட பாஜகவால் ஆட்சி அமைக்க தேவையான 114 எம்.எல்.ஏக்களைப் பெறவே முடியாது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக ஆகியவை பாஜகவுடன் இணைந்து ஆட்சியில் பங்கேற்க சாத்தியமே இல்லை. காங்கிரஸை உடைத்தால் அதிகபட்சம் 9 எம்.எல்.ஏக்கள்தான் கிடைக்கும்.
பாஜக ஆட்சி சாத்தியமே இல்லை: இப்படி எத்தனை பகீரத முயற்சிகளை பாஜக மேற்கொண்டாலும் கூட அதாவது தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தரையிலேயே முட்டி மோதினாலும் தற்போதைய தமிழ்நாட்டின் களநிலவரத்தில் பாஜக ஆட்சி அமைக்கவே சாத்தியமே இல்லை என்பது மிகவும் வெளிப்படையான யதார்த்தம். இந்த யாதார்த்தங்களை மீறித்தான் கேபி ராமலிங்கம் பேட்டி அளிக்கின்றனர் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
-
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications