தமிழ்நாடு விவகாரம்.. "தமிழ்நாடு முன்னேற்ற கழகம்" திமுக பெயரை மாற்றத் தயாரா? வானதி சீனிவாசன் கேள்வி!
சென்னை: திமுகவின் சித்தாந்தத்தை பேசுமாறு ஆளுநரை நிர்பந்திப்பதும் கடும் கண்டனத்திற்குரியது என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். அதேபோல் தமிழ்நாடு என்பதே சரியென்றால், 'திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற பெயரை 'தமிழ்நாடு முன்னேற்றக் கழகம்' என்ற மாற்றத் தயாரா? என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடப்பு ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றிய போது, சமூக நீதி, திராவிட மாடல், தமிழ்நாடு, அம்பேத்கர், அண்ணா, பெரியார், கருணாநிதி உள்ளிட்ட வார்த்தைகளை உச்சரிக்க மறுத்து கடந்து சென்றார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் காரணமாக, ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முதல்முறையாக சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்துள்ளார். இதற்கு தமிழக அரசே காரணம் என்று பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

வானதி சீனிவாசன் அறிக்கை
இது குறித்துபாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில், தமிழக சட்டப்பேரவையில் மரபுப்படி ஆளுநர் உரையாற்றியுள்ளார். ஆளுநர் உரைக்கு பொதுவாக எதிரக்கட்சிகள் தான் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஆனால், ஆளுநருக்கு ஆளும் கட்சியான திமுகவே எதிர்ப்பு தெரிவித்து கேவலமான நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். முன்கூட்டியே திட்டமிட்டு, கூட்டணிக் கட்சிகளை ஏவி விட்டு, ஆளுநரை அவமதித்துள்ளனர். இது கடும் கண்டனத்திற்குரியது.

நியமன பதவி
ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சாசனம் அவருக்கு அளித்த கடமைகளின்படியே செயல்பட்டு வருகிறார். ஆளுநர் பதவி என்பது நியமன பதவியாக இருக்கலாம். ஆனால் இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசின் பிரதிநிதி. ஆளுநர் பதவியை பாஜக அரசு புதிதாக உருவாக்கவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய பதவி. எனவே, ஆளுநரை அவமதிப்பது சட்டமேதை, மக்கள் தலைவர் அம்பேத்கரை அவமதிப்பதற்குச் சமம்.

மாநில சுயாட்சி என்ன ஆனது?
ஆளுநர் பதவி என்பது தேவையில்லாத பதவி என்று திமுக-வினர் விமர்சிக்கின்றனர். முந்தைய காலங்களில் ஆட்சியில் இருந்தப்போது ஆளுநர் பதவியை நீக்கியிருக்கலாமே? ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சென்னா ரெட்டி, சுர்ஜித்சிங் பர்னாலா போன்ற ஆளுநர்களை பயன்படுத்தி, மாநில அரசுக்கு திமுக கடும் நெருக்கடி கொடுத்தது. அப்போதெல்லாம், மாநில சுயாட்சி மாநில உரிமையெல்லாம் என்ன ஆனது?

தமிழ்நாடு, தமிழகம்
திமுகவின் சித்தாந்தத்தை பேசுமாறு ஆளுநரை நிர்பந்திப்பதும் கடும் கண்டனத்திற்குரியது. ஆளுநரை திமுகவினர் அசிங்கப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து, தமிழ்நாடு - தமிழகம் சர்ச்சை குறித்து பேசுகையில், கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி . 'தமிழ்நாடு' என்று சொல்ல வேண்டாம் என்றோ, 'தமிழ்நாடு என்பதற்கு எதிராகவோ பேசவில்லை. தமிழகம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என்றுதான் சொன்னார்.

தமிழகம்
''தமிழகம்' என்பது பொருத்தமாக இருக்கிறது என்பதால் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக-வினரும், தமிழகம் என்பதைப் பயன்படுத்தி வந்தனர். தலைநிமிர்ந்த தமிழகம், மனம் குளிருது தினந்தினம் என்று, திமுக அரசு விளம்பரம் செய்து வருகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திலும் இந்த வாசகத்தை திமுகவினர் வைத்திருந்தனர். முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் இந்த வாசகத்தை, தனது சமூக ஊடக பக்கங்களில் முகப்பு படமாக வைத்திருந்தார்.

தமிழ்நாடு
'தமிழ்நாடு' என்றுதான் சொல்ல வேண்டும் என்று திமுக கூறுகிறது. அப்படியெனில், 'திராவிட மாடல்' என்பதற்குப் பதிலாக 'தமிழ்நாடு மாடல்' என்று சொல்லலாமே. தங்கள் கட்சியின் பெயரை ஏன், 'திராவிட முன்னேற்றக் கழகம்' என்று வைத்துள்ளனர். 'தமிழ்நாடு முன்னேற்றக் கழகம்' என வைத்திருக்கலாமே. ஆந்திராவில், 'தெலுங்கு தேசம்' என்றுதானே கட்சி உள்ளது.

வானதி சீனிவாசன் கேள்வி
"திராவிட தேச' என்று அவர்கள் பெயர் வைக்கவில்லையே. தி.மு.கவுக்கு ஏன் இந்த இரட்டை வேடம்? ''தமிழ்நாடு' என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், திமுக வினருக்கும் விருப்பமானது என்றால், 'தமிழ்நாடு முன்னேற்றக் கழகம்' என்று பெயரை மாற்ற தயாரா? 'திராவிட மாடல்' என்பதை 'தமிழ்நாடு மாடல்' என்று சொல்ல தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications