சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உதயநிதி பிறந்தநாளுக்கு போஸ்டர் ஒட்ட பள்ளி மாணவர்களுக்கு நிர்பந்தம்.. பாஜக நாராயணன் குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

சென்னை: உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி அவரது போஸ்டரை ஒட்ட அரசு பள்ளி மாணவர்கள் நிர்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக பாஜக மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பாஜகவின் மூத்த தலைவரும் கட்சியின் மாநில துணைத் தலைவருமான நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தொடர் ட்வீட்களில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் பல இடங்களில் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன.

அனுமதியின்றி சுவரொட்டிகள் ஓட்டுவதே குற்றம் எனும் நிலையில், அந்த பகுதி தி மு கவினர், அரசு பள்ளி மாணவர்களை சுவரொட்டிகளை ஓட்டுவதற்கு கட்டாயப்படுத்தினர். என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

டிச.,5ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று முதல் 3 நாள் தமிழ்நாட்டில் மழை.. வானிலை அப்டேட் டிச.,5ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று முதல் 3 நாள் தமிழ்நாட்டில் மழை.. வானிலை அப்டேட்

இளைய சமுதாயம்

இளைய சமுதாயம்

இளைய சமுதாயத்தை, அடுத்த தலைமுறையை சீரழிக்கும் இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும், அன்றைய தினம் நடந்த கூட்டத்தில் மாணவ, மாணவியரை பொது மேடையில் ஏற வைத்து உதயநிதி குறித்து 'புகழ்மாலை' பாட செய்திருப்பது அராஜகத்தை உச்சகட்டம். ஏற்கனேவே, தமிழக அரசு பள்ளி மாணவர்களிடையே போதை, மது, சூதாட்டம் போன்ற பல்வேறு தீய பழக்கங்கள் மலிந்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த தெரியாமல், முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது கல்வித்துறை, தமிழக அரசும். ஏழை அரசு பள்ளி மாணவர்களுக்காக உருகுவது போல் நடிக்கும் தி மு க அரசு, அம் மாணவர்களை கொத்தடிமைகளை போல் நடத்தியிருப்பது கொடூரமான செயல் அதிர்ச்சியளிக்கிறது.

தலைவர்கள் உருவாக வேண்டும்

தலைவர்கள் உருவாக வேண்டும்

தலைவர்கள் உருவாக வேண்டுமே தவிர, உருவாக்க முயற்சிக்கக் கூடாது. தலைவர்களை மக்கள் மத்தியில் திணிக்க முற்படுவது கொடுங்கோலர்களின் கொடூர எண்ணமாகத் தான் கருதப்படும். நான் அனைவருக்குமான முதல்வர் என கூறும் முதல்வர் ஸ்டாலின் இந்த குற்றத்தை செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவார் என நம்புகிறேன். இவ்வாறு நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முதல்வருக்கு நினைவில்லையா

முதல்வருக்கு நினைவில்லையா

முதல்வர் ஸ்டாலின் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் கடந்த முறை 40 தொகுதிகளில் ஒரு தொகுதியை இழந்துவிட்டோம். இந்த முறை 40 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து நாம் போட்டியிடுவோம் என கூறியிருந்தார். முதல்வரின் இந்த பேச்சை குறிப்பிட்டு நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது தனித்து நிற்க துணிவில்லையா, வலுவில்லையா அல்லது 2014 ஆம் ஆண்டு 40 தொகுதிகளிலும் கோற்றது நினைவில்லையா என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆன்லைன் விவகாரம்

ஆன்லைன் விவகாரம்

மேலும் ஆன்லைன் ரம்மி விவகாரத்திலும் பிரதமரின் பாதுகாப்பு விஷயத்திலும் அரசியல் செய்வது பாஜகவா இல்லை திமுகவா என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். குடிநீரை பாணி என்று தமிழில்தான் எழுதியுள்ளார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். இதற்கு நாராயணன் திருப்பதி கூறியிருப்பதாவது ஆங்கிலேய அடிமைகளின் சதியை புரிந்து கொள்ள ஒரே சான்று. மஹர் என்றால் ஆங்கிலத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் என்று பொருள். சம்ஸ்க்ருதத்தில் மஹர் என்றால் 'மேன்மையானவர்கள்' என்று பொருள். மேன்மையானவர்களை ஒடுக்கப்பட்டவர்களாக்கியது ஆங்கில மொழி. இவ்வாறு பல ட்வீட்களில் தனது கருத்துகளை நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

English summary
Tamilnadu BJP Deputy President Narayanan Thirupathy condemns Tamilnadu Government to ask school students to paste poster for Udhayanidhi Stalin's birthday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X