சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கருணாநிதி கும்பகோணத்துக்கு ஓடினாரே.. அந்த "கழுதை".. காலி சேர் பார்த்துபேச நான் பாஜககாரனா: லியோனி நச்

கருணாநிதியை புகழ்ந்து திண்டுக்கல் லியோனி பேசிய வீடியோ ஷேர் ஆகி வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவையும், பாஜகவையும், கிண்டலடித்து லியோனி பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக ஷேர் ஆகி வருகிறது.

பட்டிமன்ற பேச்சாளராக அறிமுகமாகி, பிறகு பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் திண்டுக்கல் ஐ.லியோனி... இப்போது தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராகவும் உள்ளார்..

இவரது பேச்சுக்கள் இணையத்தில் வைரலாகி வருவது வழக்கம்.. அதேசமயம் இவர் சர்ச்சையாக பேசுவதாக கூறி, பாஜகவினர் கொந்தளிப்பதும் வழக்கம்.

லியோனி, பிடிஆர்..புண்படுத்திட்டே இருங்காங்க! கொந்தளித்த பாஜக சீனியர்! இவ்வளவு கடன் வாங்கியிருக்காரா? லியோனி, பிடிஆர்..புண்படுத்திட்டே இருங்காங்க! கொந்தளித்த பாஜக சீனியர்! இவ்வளவு கடன் வாங்கியிருக்காரா?

 சீண்டல்

சீண்டல்

இப்படித்தான், திருமாவளவனின் 60வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடந்த விழாவில், லியோனியும் பங்கேற்றார். அப்போது அவர் பேசிய பேச்சில் பெரும்பாலும், பாஜகவை சீண்டி பேசியிருந்ததாக கூறி, ஹிந்து அமைப்புகள், பாஜகவினர் போலீசில் லியோனி மீது புகார் தந்து அவரை கைது செய்ய வேண்டம் என்று வலியுறுத்தினர்.. நேற்றுகூட ஒரு திமுக விழாவில் லியோனி பேசியுள்ளார்.. அப்போது பாஜக மற்றும் எடப்பாடி பழனிசாமியை கிண்டலடித்து பேசியிருந்தார்.

ஸ்பீக்கர்கள்

ஸ்பீக்கர்கள்

அதன் சுருக்கம்தான் இது: "நான் பொதுவாக எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் எவ்வளவு நேரம் பேசுவது என்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களிடம் கேட்பேன்.. அப்படித்தான் ஒரு கிராமத்தில், நான் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்று கேட்டேன்.. அதற்கு அந்த ஊர் தலைவர், "நீங்க எவ்வளவு நேரம் வேணும்னாலும் பேசுங்க லியோனி.. நாங்க 10 நிமிஷத்துக்கு மேல இங்க உட்கார்ந்திருக்க மாட்டோம் என்றார்.. அதுக்கு எதுக்காக என்னை திண்டுக்கல்லில் இருந்து கூட்டிட்டு வந்தீங்க என்று கேட்டேன்.. அதற்கு அவர், "ஊர் முழுக்க ஸ்பீக்கர் கட்டி இருக்கோம்.. அதனால், நீங்க இங்கே மேடையில் நின்னு பேசிட்டு வீட்டுக்கு போங்க.. நாங்க எல்லாரும் வீட்டில் படுத்துக்கொண்டே உங்க பேச்சை கேட்கிறோம்" என்றார்..

 காலி நாற்காலி

காலி நாற்காலி

ஆளில்லாமல் வெறும் காலி நாற்காலியை பார்த்து பேசறதுக்கு நான் என்ன பாஜககாரனா? எடப்பாடி பழனிசாமியா? நம்ம முதல்வர் ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு சென்றிருந்தார்.. கிளம்பி செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் என்ன சொல்லிவிட்டு போனார்? நான் காவடி எடுப்பதற்காக டெல்லி செல்லவில்லை.. என் தமிழக மக்களின் உரிமையை பெற்று வருவதற்காக செல்கிறேன் என்றாரே.. இப்படி ஒரு துணிச்சல் எடப்பாடி பழனிசாமிக்கு இருந்ததா? எடப்பாடியும்தான் டெல்லிக்கு போயிருந்தார்.. பார்த்தீங்க இல்லை?

 கன்ட்ரோலில்லா கழுதை

கன்ட்ரோலில்லா கழுதை

முல்லா ஒரு கதை சொல்வார்.. 2 பேரும் ஒரு கழுதையில் ஏறி, வாடா பக்கத்து ஊருக்கு போய்ட்டு வரலாம் என்று கிளம்பினார்களாம்.. அந்த பாஜக என்ற கழுதையோ, கன்ட்ரோல் இல்லாத கழுதை.. அதுபாட்டுக்கு ஓடுது.. எங்கெங்கோ ஓடுது.. கழுதை பின்னாடி உட்கார்ந்துட்டு இருந்த ஒருவர், தொப்பென்று கீழே விழுந்துவிட்டார்.. என்னை விட்டுவிட்டு போய்ட்டீங்களே என்று அவர் கதறுகிறார்.. இன்னொருவரோ, அந்த பாஜக கழுதை மேல ஏறி டெல்லிக்கே போய்ட்டார்.. "நான் கழுதையில வந்திருக்கேன், நம்ம கழுதைதான்" என்று சொல்கிறார்.. அதற்கு டெல்லியில், "2 பேரும் சேர்ந்து ஒரே குதிரையில் வாங்க, அப்பதான் நான் உங்களிடம் பேசுவேன் என்று சொல்லிவிட்டார்கள்.. இன்னைக்கு அந்த கட்சிக்கு வந்த நிலைமையை பாருங்க.

 கருணாநிதி

கருணாநிதி

திமுகவை வேண்டாம் என்று சொல்லும் இந்துக்கள் யாராவது இங்கு உண்டா? இப்படித்தான், 1967-க்கு முன்பு திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பிரச்சாரம் செய்தார்கள்.. திமுக ஆட்சிக்கு வந்தால், இந்து கோயில்கள் அடைக்கப்பட்டுவிடும், கோயில்கள் மூடப்பட்டுவிடும், வழிபாடு பூஜை நடக்காது, திமுகவினர் இந்து மத வழிபாட்டை தடை செய்வார்கள் என்று திமுக பற்றி பிரச்சாரம் செய்தார்கள்..

 மகாமகம் + கும்பகோணம்

மகாமகம் + கும்பகோணம்

ஆனால் என்ன ஆனது? அண்ணா தலைமையில் ஆட்சி அமைகிறது. பொதுப்பணி துறை அமைச்சராகிறார் கலைஞர் கருணாநிதி.. அந்த ஆண்டு, கும்பகோணம் மகாமகம் திருவிழாவில், ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளார்கள் என்ற தகவல் கிடைக்கிறது.. உடனே பொதுப்பணி துறை அமைச்சராக இருந்த கருணாநிதி, கும்பகோணத்துக்கு ஓடினார்.. ஒன்றரை லட்சம் பக்தர்கள் நிம்மதியாக சாமி கும்பிடுவதற்கு அனைத்து வசதிகளையும் செய்து தந்தார்..

 கரி பூசிய கலைஞர்

கரி பூசிய கலைஞர்

திமுக ஆட்சி காலத்தில் எத்தனையோ தங்க தேர்கள் தமிழகதில் உருவாக்கப்பட்டன.. குடமுழுக்கு விழாக்கள் ஏராளமாக நடைபெற்றன.. எத்தனையோ கோயில்கள் புதுப்பிக்கப்பட்டன.. ஆட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்களே மிரண்டு போனார்கள்.. நாம ஒன்று சொன்னால், வேறு ஒன்று நடக்கிறதே என்று குழம்பி விட்டனர்.. அவர்களின் முகத்திலும் கரியை பூசினார் கருணாநிதி.. இப்போதும் அதுதான் நடக்க போகிறது" என்று பல விஷயங்களை லியோனி பேசிக் கொண்டே போனார்.

English summary
BJP News: Have you seen the AIADMK party situation asks Dindigul Leoni, and praised Karunanidhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X