சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டேமேஜ்.. "3 பொண்ணையும் ஏமாத்தியாச்சு".. கமலை பர்சனலாக தாக்கி.. ராதாரவி ஓவர் பேச்சு.. மிரண்ட கோவை

கமல்ஹாசனை ராதாரவி கடுமையாக விமர்சித்து பேசினார்

Google Oneindia Tamil News

சென்னை: "தன்னை நம்பி வந்த 3 பொம்பளைங்களையுமே காப்பாத்த முடியாத கமல்ஹாசன், எப்படி இந்த நாட்டு மக்களை காப்பாத்த முடியும்?" என்று ராதாரவி கேள்வி எழுப்பி உள்ளார்.

அரசியல் களம் சூடாகி வருகிறது.. கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் களமிறங்கி உள்ளார்.. இவரை எதிர்த்து கமலும் போட்டியிடுகிறார்.. ஆளுக்கு ஒரு பக்கம் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இதில் வானதிக்கு ஆதரவாக நடிகரும், பேச்சாளருமான ராதாரவி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசிய பேச்சை கேட்டு கூடியிருந்தவர்கள் அதிர்ந்து போய்விட்டனர்.. வானதியை வைத்து கொண்டு, ராதாரவி பேசிய பேச்சை முதலில் பார்ப்போம்:

 தொகுதி

தொகுதி

"கமல்ஹாசன் இங்கே நிக்கறார்னு தெரியும்.. என்னைவிட கமலை பற்றி யாருக்கும் தெரியாது.. இங்கே அவர் நல்லவன் மாதிரி இருப்பார்.. சாய்பாபா காலனியில் வாடகை கட்டாமல் ஓடின கதை தெரியாதா? அங்கே போய் கேட்டு பாருங்க, கமல் லட்சணம் தெரியும்.. அன்னைக்கு ஆட்டோவில் ஏறினதை பார்த்தேன்.. வாழ்க்கையிலேயே ஆட்டோவில் ஏறினது இல்லை.. முதல்முறையா காசு கொடுத்ததே அந்த ஆட்டோக்காரருக்குதான்.. அந்த காசை கூட வேற பக்கம் பிடுங்கிருப்பாங்க.

 3 பெண்கள்

3 பெண்கள்

தன்னை நம்பி வந்த 3 பொம்பளைங்களையுமே காப்பாத்த முடியாத கமல்ஹாசன், எப்படி இந்த நாட்டு மக்களை காப்பாத்த முடியும்? இந்த பாஜக கூட்டணியை எடுத்து கொள்ளுங்கள், பாஜக தலைவர்களை எடுத்து கொள்ளுங்கள்., எல்லாருமே நேர்மையானவர்கள்.. கமலுக்கு ஓட்டு போட்டுடாதீங்க.. இவரும் திமுகவைதானே திட்டறார்ன்னு நினைச்சிட்டு நம்பி போட்டுடாதீங்க.. அவர் திமுகவின் கைகூலி.. வானதி இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்.. இன்னைக்கு 10 ஆயிரம் குழந்தைகளுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்.. இதெல்லாம் உங்களுக்கு தெரியும்தானே..

விமர்சனம்

விமர்சனம்

மறுபடியும் சொல்றேன் கமல்ஹாசன் நல்லவன் இல்லை, நாங்க எல்லாம் இங்கே வரமாட்டோம்ன்னு நினைச்சிட்டுதான் கோவையில் வந்து நிக்கிறது.. ஆனால் நாங்க வந்துடுவோம்.. இளைஞர்கள் யாரும் ஏமாந்துடாதீங்க.. தாய்மார்கள் தயவு செய்து ஏமாந்துடாதீங்க.. நான் ஏன் அவன், இவன்னு பேசறேன் தெரியுமா? நாங்க ஒரே வயசுதான்..

 மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

நாங்க சின்ன வயசுல இருந்து ஒன்னா பழகுனவங்கதான்.. திடீர்னு மம்மதா பானர்ஜியை பார்க்க போனார்.. எதுக்கு இவர்போய் அந்தம்மாவை பார்க்கணும்னு நினைச்சேன்.. கடைசியில அந்தம்மா மாதிரியே இவருக்கும் கால் ஒடிஞ்சி போச்சு .. காங்கிரஸ் பத்தியெல்லாம் நாம பேசவே கூடாது.. அது செத்து போன கட்சி.. அது வேஸ்ட்.. கோயம்புத்தூர்ல எல்லாம் படிச்சவங்க, அறிவாளிங்க, உழைக்கக்கூடியவங்க.. அதனால யோசிச்சு பாருங்க.. பிக்பாஸ்-ல் என்ன வேலை தெரியுமா? ஆணும், பொண்ணையும் லிங்க் பண்ற வேலைதான் அது... உன்னால முதல்வரா ஆகவே முடியாது..." என்று ராதாரவியின் பேச்சு தொடர்ந்து கொண்டே செல்கிறது.

 ராதாரவி

ராதாரவி

இங்கு நாம் ஒரு விஷயத்தை குறிப்பிட்டாக வேண்டும்... அதிமுக, திமுக, என ஒரு கட்சி விடாமல் தாவி தாவி அரசியல் செய்து வந்த ராதாரவி, இப்போதைக்கு ஐக்கியமாகி உள்ளது பாஜகவில்.. வழக்கமாக ராதாரவி பேச்சு என்றாலே அதில் காட்டம் அதிகமாக இருக்கும்.. யூ-டியூப்களில் ராதாரவியின் பேச்சுக்கு ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால், சினிமாவில் சீனியர், அரசியலிலும் சீனியர், அதிலும் நடிகவேள் மகன் ராதாராவி எல்லை மீறி பேசி வரும் பேச்சுக்களை கண்டு பொதுமக்கள் அதிர்ந்து வருகின்றனர்.

 விமர்சனம்

விமர்சனம்

வழக்கமாக தேர்தல் என்றால், ஒரு கட்சியினர் இன்னொரு கட்சியினரை விமர்சிப்பது இயல்புதான்.. ஆனால், தனிப்பட்ட வாழ்க்கை முறையை விமர்சிப்பது அநாகரீகம்.. அந்த அநாகரீகத்தின் உச்சத்தில்தான் ராதாரவி சென்றிருக்கிறார்.. மய்ய உறுப்பினர்கள் இதனால் ஆவேசம் ஆகி வந்தாலும், தமிழக மக்களுக்கே ஒருவித அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ஆபாசம்

ஆபாசம்

இப்படியெல்லாம் எல்லை மீறி ஆபாசமாகவும், தனிநபர் தாக்குதலையும் தொடுப்பது ராதாரவிக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம்.. இது நிச்சயம் பாஜகவுக்குதான் மேலும் கெட்ட பெயரை தரும் என்பதை நம்மால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.. தடித்த வார்த்தைகளும், தனிநபர் தாக்குதலும் எந்த காலத்திலும் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.. பழமையும் அறியாமையும் கலந்த மூடநம்பிக்கைகளை எதிர்த்த பெரியாரின் கொள்கைகளை, உலகுக்கு பறைசாற்றி, காலத்தையே வென்ற நடிகவேளின் மகனா இவர்? பாவம் எம்ஆர் ராதா..!

English summary
BJP Radharavi slams DMK and criticized MNM Kamalhasan in Coimbatore Campaign
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X