சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அம்பேத்கர் கனவை நிறைவேற்றும் மோடி; பெரியார் சாலையை மாற்ற எதிர்ப்பு... திராவிட டோனில் வானதி சீனிவாசன்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் தந்தை பெரியார் சாலையை தமிழக அரசு மாற்றி இருந்தால் அது கண்டனத்துக்குரியது; அப்படி மாற்றி இருந்தால் அதனை மாற்றுவதற்கு வலியுறுத்துவோம் என பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அண்ணல் அம்பேத்கரின் 130-வது பிறந்தநாளையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது முழு திரு உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன், தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அம்பேத்கர் கனவும் மோடியும்

அம்பேத்கர் கனவும் மோடியும்

அப்போது செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறியதாவது: அம்பேத்கரின் கனவை, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் முன்னேற்றத்திற்காக மோடி அரசால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மோடி அரசின் பல திட்டங்களை பெற்று ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற்றமடைந்து வருவகின்றனர். அந்த வகையில் அம்பேத்கரின் கனவை மோடி அரசு நிறைவேற்றி வருகிறது.

பெரியார் சாலை பெயர் மாற்றம்

பெரியார் சாலை பெயர் மாற்றம்

சென்னையில் பெரியார் சாலை பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தால் அது கண்டனத்திற்குரியது. அதனை மாற்ற வலியுறுத்துவோம். நீட் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே செயல்படுத்தப்பட்டு வருகிறது.

டபுள் டிஜிட்டில் சட்டசபை

டபுள் டிஜிட்டில் சட்டசபை

கோவை மேற்கு தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எங்கள் தலைவர் எல்.முருகன் கூறியது போல இரட்டை இலக்கத்தில் பாஜக உறுப்பினர்கள் சட்டசபை செல்வது உறுதி. இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.

மயிலை தண்ணீர் பந்தல்

மயிலை தண்ணீர் பந்தல்

மயிலை தண்ணீர் பந்தல்இதையடுத்து சென்னை மைலாப்பூர் லஸ் கார்னர் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் வானதி சீனிவாசன். அங்கு அம்பேத்கர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திவிட்டு தண்ணீர் பந்தலை அவர் தொடங்கி வைத்தார்.

English summary
Senior BJP :Leader Vanathi Srinivasan has opposed the renaming of EVR Periyar Salai in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X