அறிவு இருக்கலாம்.. ஆனால்.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை கடுமையாக விமர்சித்த நாராயணன் திருப்பதி!
சென்னை: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு அறிவு உள்ளதால் அகந்தை இருக்க வேண்டிய அவசியமில்லை என பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி சீறியுள்ளார்.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சீண்டியும், விமர்சித்தும் தனது முகநூல் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள நாராயணன் திருப்பதி இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவின் விவரம் பின்வருமாறு;

முகநூல் பதிவு
"அண்ணாமலை அவர்கள் நிதி நிலை அறிக்கையை முறையாக படிக்கவில்லை என்றும், பொதுமேடைகளில் விமர்சிக்கும் தகுதியில்லாதவர்களின் தவறான அறிக்கைகளுக்கு பதில் சொல்ல மாட்டேன் என்றும், பட்ஜெட்டுக்கு பின்னர் டில்லி சென்று மத்திய நிதியமைச்சர் மற்றும் நிதித்துறை செயலாளரை சந்தித்தேன், பல்வேறு வகைகளில் மத்திய அரசு, மாநில அரசுக்கு ரூபாய் 28,000 கோடி நிலுவை தொகை செலுத்த வேண்டும் என்ற ஒருமித்த கருத்து அந்த சந்திப்பில் எட்டப்பட்டது" என்றும் தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல்ராஜன் அவர்கள் நேற்று கூறியுள்ளார்.''

நிதியமைச்சருக்கு கேள்வி
''சில நாட்களுக்கு முன்பு வரை ரூபாய் 16,500 கோடி ஜி எஸ் டி நிலுவை தமிழகத்திற்கு பாக்கி உள்ளது என்று நிதியமைச்சர் கூறிக்கொண்டிருந்த நிலையில், நிதி நிலை அறிக்கையில் இழப்பீடு உள்ளிட்ட ஜி எஸ் டி நிலுவை அதிக அளவில் வந்துள்ளது என்றே திரு அண்ணாமலை அவர்கள் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தெளிவாக கூறினார். இதை முறையாக செவிமடுக்காதது நிதியமைச்சர் தான்.. தமிழில் தெளிவாக அண்ணாமலை அவர்கள் பேசியது புரியவில்லை என்றால் ஆங்கிலத்தில் பேச சொல்கிறாரா நிதியமைச்சர்? அல்லது தமிழகத்தில் பொது மேடைகளில் தமிழில் பேசுவது தகுதி குறைவு என்கிறாரா?''

சரமாரி கேள்வி
''ஐ ஏ எஸ் / ஐ பி எஸ் அதிகாரிகளுக்கு பொருளாதாரம் குறித்து பேச தகுதி இல்லை என்கிறாரா? அல்லது பொறியியல் பட்டதாரி என்பதால் அண்ணாமலைக்கு தகுதி இல்லை என்கிறாரா? முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றவர் என்பதால் தகுதி இல்லை என்கிறாரா? அல்லது தன்னை கேள்வி கேட்க, விமர்சிக்க தமிழகத்தில் தமிழகத்தில் யாருக்குமே தகுதி இல்லை என்ற இறுமாப்பா? கல்வியில் சிறந்த அண்ணாமலையையே கேள்வி கேட்க தகுதியில்லாதவர் என்றால், கேள்வி கேட்கும் இடத்தில் இருக்கும் நம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களையும், விமர்சிக்கும் இடத்தில் இருக்கும் என்னை போன்ற சாமான்யர்களையும் என்ன சொல்வாரோ தமிழக நிதியமைச்சர்?''

விவரம் வேண்டும்
''மேலும், 28,000 கோடி நிலுவை தொகை பல்வேறு துறைகளில் வரவேண்டியுள்ளது என ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது என்று கூறும் நிதியமைச்சர், ஒருமித்த கருத்து எட்டப்பட்டதற்கான 'ஆதாரத்தை' வெளியிட வேண்டும். மேலும், எந்தெந்த துறைகளிலிருந்து அந்த பணம் வரவேண்டியுள்ளது? எவ்வளவு நாட்களாக வரவேண்டியுள்ளது? என்ன காரணங்களினால் வராமல் உள்ளது? போன்ற விவரங்களை வெளியிட வேண்டும்.''

அகந்தை கூடாது
''அதை விடுத்து, கேள்வி கேட்பவர்களின் தகுதி குறித்து பேசுவது பி டி ஆர் தியாகராஜன் அவர்கள் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல. அதிகாரம் இருப்பதால் ஆணவம் இருக்க வேண்டியதில்லை. அறிவு உள்ளதால் அகந்தை இருக்க வேண்டிய அவசியமில்லை. படிப்பு உள்ளதால் பண்பு அகல வேண்டிய கட்டாயமில்லை. விமர்சிப்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும் கடமையையும், கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் தவறுபவர்களுக்கு தான் தகுதியில்லை என்பதை நிதியமைச்சர் உணர வேண்டும்.''
-
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Congress: விடாப்பிடியாக வாங்கிய காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை? லிஸ்ட் வெளியானது -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
“ரெஸ்ட்டா? எனக்கா?” 13வது முறையாக தேர்தலில் களமிறங்கும் துரைமுருகன்.. மீண்டும் காட்பாடியில் போட்டி! -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications