பாஜக நிர்வாகிகள் நியமனம், நீக்கம்.. மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் விளக்கம்
சென்னை : கட்சியில் நிர்வாகிகளை நியமிப்பது, நீக்குவது தொடர்பாக பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எப்படி பாரதிய ஜனதா கட்சியில் இருந்து ஒருவரை நீக்க வேண்டும் என்பது பற்றியும், எப்படி ஒருவரை கட்சியில் நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கி உள்ளார்.
பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வலிமையாக வளர்ந்து வரும் நேரத்தில் கட்சியின் கட்டமைப்புகை வலிமைப்படுத்துவதோடு, கார்யகர்த்தாக்கள் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்படாவிடில் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிகாட்டும் முறையை தங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

மாவட்ட பொறுப்பாளர்
தங்களது மாவட்டத்தில் மாவட்ட மற்றும் மண்டல் பொறுப்பில் உள்ள எந்தவொரு நிர்வாகிகளையும் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் பெருங்கோட்ட பொறுப்பாளரிடம் அனுமதி பெற்று மாவட்ட மையக்குழுவினைகூட்டி விவாதிக்கப்பட வேண்டும்.

ஒப்புதல்
மாவட்ட மையக்குழுவின் ஒப்புதலோடு (கோட்ட அமைப்பு செயலாளர் மாவட்ட பிரபாரி, மாவட்ட தலைவர் பெருங்கோட்ட பொறுப்பாளரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

நடவடிக்கை
பெருங்கோட்ட பொறுப்பாளர்கள் மாநிய தலைமைக்கு அனுப்பி மாநில தலைமையின் ஒப்புதல் பெற்று தேவை ஏற்படும் பட்சத்தில் அவர்கள் மீதுநடவடிக்கை எடுக்கவோ, மாற்றம் செய்யவோ அனுமதிக்கப்படும். புதிய நியமனங்களும் இதே வழிமுறையை பின்பற்ற வேண்டும்.

கேசவ விநாயகம்
இந்த வழிமுறையை பின்பற்றாமல் மாவட்ட மற்றும் மண்டல பொறுப்பில் உள்ள எந்தவொரு நிர்வாகியையும் நீக்கப்பட்டால், அல்லது நியமிக்கப்பட்டால் அதிகாரபூர்வமற்றதாக கருதப்படும் என்பதனை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு கேசவ விநாயகன் கூறினார்

தணிகைவேல் நீக்கம்
இதனிடையே நேற்று இரவு பாஜகவின் மாநில வர்த்தகர் அணி துணைத் தலைவர் எஸ் தணிகைவேல் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications