மதுவந்தி வீட்டுக்கு சீல்.. பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.1 கோடி வாங்கி திரும்ப செலுத்தவில்லை என புகார்
மதுவந்தி வீட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்
சென்னை: பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.1 கோடியே 21 லட்சம் வாங்கி திரும்ப செலுத்த மறுத்துவிட்ட காரணத்தினால், பாஜக பிரமுகர் மதுவந்தி வீட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
Recommended Video
பிரபல நடிகர் ஒய்ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி.. இவர் பாஜகவின் செயற்குழு உறுப்பினராக உள்ளார்.. சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2-வது குறுக்கு தெருவில் ஆசியானா என்ற அப்பார்ட்மென்ட் உள்ளது..
இந்த அபார்ட்மென்ட்டிற்குள் உள்ள சொந்த வீட்டில் கடந்த சில வருடங்களாகவே மதுவந்தி வசித்து வருகிறார்.. இந்த வீட்டை வாங்குவதற்காக கடந்த 2016-ல் இந்துஜா லைலண்ட் என்ற பைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளார்...

தவணைகள்
ஆனால், வீட்டை வாங்கிய பிறகு, அடுத்தடுத்து சில தவணைகள் மட்டுமே வட்டி கட்டி வந்துள்ளார்.. அதற்கு பிறகு வட்டி கட்டவில்லை.. தவணை பணமும் கட்டாமல் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.. உரிய வட்டி பணத்தை கட்டுமாறு, பைனான்ஸ் நிறுவன அதிகாரிகள் பல மாதங்களாகவே மதுவந்தியிடம் எடுத்து சொல்லி வந்துள்ளனர்.. ஆனால், மதுவந்தி பணம் எதுவும் கட்டாமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.

நோட்டீஸ்
இதனையடுத்து வங்கி அதிகாரிகள் வட்டிப்பணத்துடன் அசலையும் சேர்த்து ரூ1,21,30,867 பணம் கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.. ஆனால், பைனான்ஸ் நிறுவனத்திடம் இந்த நோட்டீசுக்கும் உரிய பதில் சொல்லாமல் மதுவந்தி இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது.. இந்த நிலையில் இந்துஜா லைலண்ட் பைனான்ஸ் நிறுவனமானது, சென்னை அல்லிகுளம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது...

கோர்ட் உத்தரவு
வழக்கை விசாரித்த நீதிமன்றமும் மதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைத்து வீட்டை இந்துஜா லைலண்ட் பைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டது... இதையடுத்து, ஜப்தி நடவடிக்கைக்குச் சென்றவர்கள் மதுவந்தியின் வீட்டிலிருந்து பொருட்களை வெளியில் எடுத்து வைத்ததுடன் ஜப்திக்குள்ளான விபரத்தை நோட்டீஸாகவும் ஒட்டி சென்றுள்ளார்களாம். வழக்கறிஞர் கமிஷனர் வினோத் குமார் முன்னிலையில் மதுவந்தியின் வீடு போலீசார் பாதுகாப்போடு சீல் வைக்கப்பட்டது..மேலும் அந்த வீட்டு சாவியும், இந்துஜா லைலண்ட் பைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மோசடி
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. ஏற்கனவே இப்படித்தான் தனியார் பள்ளியில் சீட்டு வாங்கி தருவதாக 5 லட்ச ரூபாய் மோசடி செய்த புகார் நிலுவையில் உள்ளது.. அதன் மீதான விசாரணையும் நடந்து வருகிறது.. அதற்குள் இன்னொரு புகார் கிளம்பி உள்ளது.. ஒரு கோடிக்கு ரூபாய்க்கும் மேல் பணத்தை பெற்று திருப்பி கட்டாத காரணத்தினால் அவரது வீட்டை அதிகாரிகள் சீல் வைத்து சென்ற சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது... ஆனால் இதுகுறித்து மதுவந்தியிடம் சிலர் போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, தன்னுடைய வீட்டை அதிகாரிகள் சீல் வைக்கவில்லை என்றும், இது தவறான தகவல், அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை என்றாராம்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications