ஈபிஎஸ் தரப்பின் செயலால் பாஜக அப்செட்.. தேவையில்லாம சீண்ட வேண்டாம்.. கொதித்த ‘தாமரை’ நிர்வாகிகள்!
சென்னை : அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மோதல் நிகழ்ந்து வரும் நிலையில், ஈபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏ ஒருவர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை சீண்டினார். இது தமிழக பாஜக நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் நடந்து வரும் மோதலைத் தொடர்ந்து, டெல்லி பாஜக தலைமையின் ஆதரவைப் பெறுவதில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இடையே பெரும் போட்டியே நடந்து வருகிறது.
டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்திக்க முயன்ற எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் முயற்சிகள் தோல்வையடைந்தன. பிரதமர் மோடி சென்னை வந்தபோதும், தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேச நேரம் ஒதுக்கப்படவில்லை.

அதிமுகவில் ஈபிஎஸ்
அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் ஓரளவுக்கு வெற்றி பெற்று விட்டார் எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸ் தரப்பை கட்சியை விட்டு நீக்கி, அனைத்து பதவிகளுக்கும் தனது ஆதரவாளர்களை நியமித்துள்ளார். கட்சி தலைமை அலுவலகத்தின் சாவியும் எடப்பாடி பழனிசாமிக்கே கிடைத்துள்ள்ளது. தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு பல்வேறு முறையீடுகளைச் செய்துள்ளது தான் இப்போதைக்கு ஈபிஎஸ் முன்நிற்கும் சவால். அதையும் முறியடித்து விட்டால் முழுமையாக கட்சி ஈபிஎஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.

பாஜக - அதிமுக
கட்சியில் பெரும்பான்மை ஆதரவு தனக்கு இருந்தாலும் கூட, ஓபிஎஸ்ஸுக்கு பாஜக தலைமை ஆதரவு கொடுத்தால் தனக்கு சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்தே இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கடந்த சில நாட்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்கள் மீது நடந்த தொடர் ரெய்டுகள் கூட அப்படியான விளைவால் வந்தவைதான் என்று கூறப்படுகிறது. அதையொட்டியே டெல்லிக்குச் சென்று பிரதமர் மோடியைச் சந்திக்க முயற்சி மேற்கொண்டார் ஈபிஎஸ். ஆனால், பிரதமரோ, உள்துறை அமித்ஷாவோ ஈபிஎஸ்ஸுக்கு நேரம் ஒதுக்கவில்லை.

அவாய்டு செய்த பாஜக
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சென்னை வந்தார். சென்னை வந்திருந்த பிரதமர் மோடியிடம் தனித்தனியாக சந்தித்துப் பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் நேரம் கேட்டிருந்தனர். ஆனால் பிரதமரோ இருவருக்கும் தனியான சந்திப்புக்கு நேரம் ஒதுக்கவில்லை. வரவேற்பு கொடுக்க எடப்பாடி பழனிசாமிக்கும், வழியனுப்பி வைக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸை விமான நிலையத்தில் பார்த்துப் பேசினாலும், தனியாக நேரம் ஒதுக்கிச் சந்திக்கவில்லை. ஓபிஎஸ்ஸிடமாவது 10 நிமிடங்கள் பேசினார், எடப்பாடி பழனிசாமியும் அவ்வளவு நேரம் கூட பேசவில்லை.

முக்கிய காரணம்
எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி சந்திக்க மறுத்ததற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், தமிழக பாஜகவின் மெசேஜும் ஒரு முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுகிறது. அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களாக இருக்கும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் தொடர்ந்து பாஜகவை சீண்டி வந்தனர். அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வந்தனர். கூட்டணி கட்சி என்றாலும், பாஜகவின் வளர்ச்சிக்கு எதிராக ஈபிஎஸ் தரப்பினர் பேசியது பாஜக நிர்வாகிகளை அப்செட்டாக்கியது. அது பிரதமர் மோடி காதுக்குப் போனதும், ஈபிஎஸ்ஸுக்கு டைம் கிடைக்காததற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

அதிமுக எம்.எல்.ஏ
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான அதிமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி தொகுதி எம்.எல்.ஏவுமான அருண்மொழித்தேவன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சீண்டியுள்ளார். ஆதினங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக நிற்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, என்.எல்.சி.யில் தமிழக இளைஞர்கள் புறக்கணிக்கப்படும் விவகாரத்தில் ஏன் தலையிட வில்லை எனk கேள்வி எழுப்பியுள்ளார் அருண்மொழித்தேவன்.

என்ன விவகாரம்?
சமீபத்தில் என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் பொறியாளர் நியமன பட்டியல் வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் தமிழர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை. தமிழர்கள் ஒருவர் கூட தேர்வு செய்யப்படாதது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து என்எல்சி இந்தியா நிறுவனத்தை கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர். அதேபோல, அதிமுக புவனகிரி எம்.எல்.ஏ அருண்மொழித்தேவனும் அறிக்கை விட்டபோதுதான், அதில் பாஜகவின் அண்ணாமலையையும் சாடியுள்ளார்.
Recommended Video

பரபரப்பு
பிரதமர் மோடி சென்னை வந்துவிட்டு, எடப்பாடி பழனிசாமியை தனியாகச் சந்திக்காமல் சென்ற நிலையில், ஈபிஎஸ் ஆதரவாளரான எம்.எல்.ஏ, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை சீண்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு பாஜகவை அட்டாக் செய்து வருவதாக ஏற்கனவே பேச்சுகள் உள்ளதால், இந்த விவகாரத்தில் ஈபிஎஸ் மீது தமிழக பாஜக நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தேவையில்லாமல் எங்களை சீண்டினால் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் தான் என்றும் பாஜகவினர் கூறி வருகின்றனர்.
-
அதெல்லாம் முடியாதுங்க.. பாஜகவிடம் ஷோல்டரை ஏற்றிய எடப்பாடி.. லிஸ்டை பாருங்க.. அடிச்சு ஆடுறாரே! -
இதுவரை 4 முறை டெல்லிக்கு பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி! அதிமுக பாணியையே மாற்றிய பாஜக! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள்












Click it and Unblock the Notifications