சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலினுக்கு பெருகும் சிக்கல்.. முதல் "குறியே" அவர்தானாமே.. டெல்லி மேலிடத்தின் சைலண்ட் மூவ்கள்

கொங்கு மண்டல பாஜக அடுத்தடுத்த வியூகங்களை வகுத்து வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: உட்கட்சி பூசலால், நாளுக்கு நாள் அதிமுக பலவீனமாகி கொண்டே வரும் நிலையில் பாஜக தலைதூக்கி வருகிறது.. அத்துடன் திமுகவுக்கும் செக் வைக்கும் வியூகங்களை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சசிகலாவின் வருகையால் அதிமுக விழிபிதுங்கி வருகிறது.. கட்சியை கைப்பற்றுவதற்காக தனித்தனி முயற்சிகளில் கட்சி மேலிடம் ஈடுபட்டு வருகிறது.

ஆனால், பாஜகவோ எதைபுற்றியும் கவலைப்படாமல் டாப் கியர் போட்டு மேலே வர துவங்கி உள்ளது.. இப்போதைக்கு கையில் 4 சீட் இருந்தாலும், அடுத்தடுத்த தேர்தல்களில் இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தும் செயல்பாடுகளை விரிவுபடுத்தி உள்ளது.

கும்ப ராசியில் பயணிக்கும் குருபகவானால் குரு பலம் யாருக்கு - கல்யாண யோகம் கை கூடுமா? கும்ப ராசியில் பயணிக்கும் குருபகவானால் குரு பலம் யாருக்கு - கல்யாண யோகம் கை கூடுமா?

கொங்கு

கொங்கு

குறிப்பாக, கொங்குவில் பலத்தை பெருக்க திமுக முயன்றுவரும் நிலையில், அதே கொங்கு அதிமுகவில் இருந்து முதல் எதிர்ப்புக்குரல் வெடித்து கிளம்பி உள்ளது.. இந்த கட்சிகளுக்கு நடுவில்தான் பாஜக நுழைந்துள்ளது.. அதிமுகவை மறைமுகமாக டம்மி செய்து கொண்டே , திமுகவுக்கு செக் வைக்கும் போக்காகவே அது கருதப்படுகிறது. பாஜகவின் தற்போதைய பிளான்தான் என்ன? திமுகவுக்கு எந்த மாதிரியான விளைவை அது ஏற்படுத்த போகிறது? இதனால் அதிமுகவில் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பது குறித்து நாம் சில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம். அவர்கள் வியூகத்தின் அடிப்படையில் நம்மிடம் சொன்னதாவது:

 ஆன்மீக பயணம்

ஆன்மீக பயணம்

"டெல்லி பாஜக தலைவர்கள் சிலர் விரைவில் தமிழகத்துக்கு வர உள்ளதாக தெரிகிறது.. இப்போதைக்கு தேர்தல், பிரச்சாரங்கள் என எதுவும் இல்லாததால், ஆன்மீக பயணங்கள் என்ற பெயரில் சிலர் தமிழகத்துக்கு வர உள்ளனர்.. இந்துக்களிள் ஓட்டுக்களை கவரவும், அதன்மூலம் தங்களை இந்து ஆதரவாளர்களாக காட்டிக் கொள்ளவும் இது ஓரளவு அவர்களுக்கு உதவலாம்..

தீர்மானம்

தீர்மானம்

மற்றொரு புறம் திமுகவுக்கு நேரடியாகவே குறி வைக்க முனைப்பு காட்டி வருகிறது.. திருப்பூரில் நடந்த பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் இது அப்பட்டமாகவே வெளிப்பட்டது.. மக்கள் விரோத திமுக அரசின் அணுகுமுறைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் இந்த கூட்டத்தில் தீர்மானமே நிறைவேற்றி கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. வழக்கமாக, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை பிரதான எதிர்க்கட்சிகள்தான் சொல்லும்.. அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி சொல்லி கொண்டிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

ஆனால், அதையும் ஓவர்டேக் செய்கிறது இந்த தீர்மானம்.. பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்தும், தமிழக அரசு ஏன் குறைக்கவில்லை, வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.8,000 மட்டுமே நிவாரணம், நீட் தேர்வு ரத்து விவகாரம், கோயில்களில் தங்கத்தை உருக்குவது என்ற அறிவிப்பு போன்றவைகளை பிரதானப்படுத்தியே பாஜக திமுகவுக்கு எதிராக காய் நகர்த்தலை இனி தொடங்கும் என தெரிகிறது. ஆளும் கட்சியை விமர்சிப்பதால், தாங்களும் திமுகவுக்கு இணையானவர்கள் காட்டிக கொள்ளும் மனோபாவம்தான் இவை.

கேள்வி

கேள்வி

சரிக்கு சரி கேள்வி கேட்பதால், அக்கட்சிக்கு இணையாக தாங்களும் உயர்ந்துள்ளோம் என்பதை மக்கள் மனதில் புரிய வைக்கும் போக்காகும்.. அதேசமயம் கொங்குவிலும் தங்கள் பலத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்றும் கவனம் செலுத்தி வருகிறது.. சமீபத்தில் நடந்த திமுக மாநாடு, கொங்கு பாஜகவை லேசாக கலங்க வைத்துள்ளது.. எல்.முருகன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் போன்றோர் கொங்குவில் அக்ககட்சி பலமாகவே கருதப்படுகிறது..

ஸ்டாலின்

ஸ்டாலின்

இந்த முறை திமுக ஒரு இடத்தில்கூட அங்கு வெற்றி பெறாத நிலையில், மீண்டும் திமுக அங்கு தலைதூக்காமல் செய்யவே அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.. அதன் முதல்குறிதான் செந்தில் பாலாஜி.. இவர்தான் இப்போதைக்கு கோவை மாவட்ட பொறுப்பாளராக உள்ளார்.. முதல்வர் ஸ்டாலினின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக திகழ்ந்து வருகிறார்.. செந்தில்பாலாஜியின் செயல்பாடுகள் நாளடைவில் திமுகவுக்கான ஆதரவை கொங்குவில் எளிதாக பெற்று தந்துவிடும் என்பதை பாஜக உணராமல் இல்லை..

மோசடி

மோசடி


அதனால்தான், செந்தில் பாலாஜி மீதான ஏற்கனவே உள்ள மோசடி துரிதப்படுத்த பாஜக யோசித்து வருகிறதாம்.. இது சம்பந்தமாக ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது... ஆனால் அது எந்தவித நகர்வும் இன்றி முடங்கி கிடப்பதால், அதைதான் தூசி தட்டி எடுக்க டெல்லி மேலிடம் யோசித்து வருகிறதாம். மறுபடியும் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பி விசாரணையை தீவிரப்படுத்த அதிகாரிகள் தரப்பும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.. செந்தில்பாலாஜியை என்ற மெகா புள்ளியை முடக்கிவிட்டால், கொங்கு திமுகவும் சேர்ந்து முடங்கிவிடும், இந்த முறையும் மேலே எழ வாய்ப்பிருக்காது என்றே பாஜக கணக்கு போடுவதாக தெரிகிறது.

 ஊழல் புகார்கள்

ஊழல் புகார்கள்

ஏற்கனவே செந்தில்பாலாஜி மீது ஊழல் புகார் சொல்லி உள்ளார் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை.. இன்று அவர் டெல்லி சென்றுள்ள நிலையில், எதற்காக சென்றிருக்கிறார் என்ற கேள்வியும் தற்போது தொத்தி நிற்கிறது... இதையெல்லாம் திமுக எப்படி எதிர்கொள்ள போகிறது என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்புதான்.. அதேசமயம், அதிமுக நிலைமையோ இன்னும் பரிதாபமாக உள்ளது..

Recommended Video

    Chennai-ஐ போல கோவைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் - முதல்வர் ஸ்டாலின்
     வானதி சீனிவாசன்

    வானதி சீனிவாசன்

    ஏற்கனவே திமுக மாநாட்டு மேடையில் வானதி சீனிவாசனை மேடைக்கு முதல்வர் அழைத்து உட்கார வைத்தது, அதிமுகவின் காதில் புகையை வரவழைத்த நிலையில், இப்போது கொங்குவின் செங்கோட்டையனே முதல் எதிர்ப்புக்குரலை வெளிப்படுத்தி உள்ளார்.. செங்கோட்டையனை எப்படி அதிமுக சமாளிக்க போகிறது? திமுகவின் விஸ்வரூபத்தை எப்படி எதிர்கொள்ள போகிறது? கூட்டணியில் உள்ள பாஜகவை எப்படி கையாள போகிறது? என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியவரும்" என்றனர்.

    English summary
    BJPs next move and what will Kongu Region DMK do the next கொங்குவை கைப்பற்ற பாஜக அடுத்தடுத்த வியூகங்களை கையில் எடுத்து வருகிறது
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X