சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீவிரமாக பரவும் பறவை காய்ச்சல்.. முட்டை, சிக்கன் சாப்பிடலாமா? மருத்துவர்கள் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: பறவை காய்ச்சல் பரவும் நிலையில் முட்டை, சிக்கன் சாப்பிடலாமா? என்பது குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். . முட்டையை ஆப்பாயில், ஒன்சைடு ஆம்லெட் என அரைவேக்காட்டில் சாப்பிடாமல், நன்கு வேக வைத்து சாப்பிடுவது நல்லது என்றார்கள்

முட்டை, சிக்கன் சாப்பிடுவதால் பறவைக் காய்ச்சல் பரவும் என்பதற்கு சொற்ப அளவிலான ஆதாரங்களே உள்ளன. வைரஸால் பாதிக்கப்பட்ட கோழியாகவே இருந்தாலும் கூட நன்கு சமைத்தால் அதிலுள்ள வைரஸ்கள் இறந்து போகும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தலைக்கேறிய காமம்.. அடங்காத சபலம்.. 5 லட்சம் மொத்தமா போச்சு.. பரிதாப சூபர்வைஸர்.. சென்னை ஷாக்!தலைக்கேறிய காமம்.. அடங்காத சபலம்.. 5 லட்சம் மொத்தமா போச்சு.. பரிதாப சூபர்வைஸர்.. சென்னை ஷாக்!

கேரளா உள்பட 6 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸ்க்கு மத்தியில் பறவை காய்ச்சலும் பரவி வருவதால் நீர்நிலைகள், பண்ணைகள், விலங்குகளின் சரணாலயங்கள் மற்றும் பறவைகள் தொடர்பான சந்தைகளை தீவிரமாகக் கண்காணிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

எச்5என்1 வகை பறவைக் காய்ச்சல்

எச்5என்1 வகை பறவைக் காய்ச்சல்

தற்போது கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், அரியானா மற்றும் குஜராத் மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது. .
இமாச்சலப் பிரதேசத்தின் கங்ரா மாவட்டத்தில் பாங் வனவிலங்குகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் மொத்தமாக உயிரிழந்தன. மொத்தம் 3,409 பறவைகள் உயிரிழந்தன. அவற்றை ஆய்வு செய்ததில் எச்5என்1 வகை பறவைக் காய்ச்சல் காரணமாக இறந்தது தெரியவந்தது.

நன்கு சமைத்து சாப்பிடுங்கள்

நன்கு சமைத்து சாப்பிடுங்கள்

இதனிடையே பறவை காய்ச்சல் பரவும் நிலையில் முட்டை, சிக்கன் சாப்பிடலாமா? என்பது குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். முட்டை, சிக்கன் சாப்பிடுவதால் பறவைக் காய்ச்சல் பரவும் என்பதற்கு சொற்ப அளவிலான ஆதாரங்களே உள்ளன. வைரஸ் பாதிக்கப்பட்ட கோழியாகவே இருந்தாலும் கூட நன்கு சமைத்தால் அதிலுள்ள வைரஸ்கள் இறந்து போகும்.

 ஒன்சைடு ஆம்லெட் வேண்டாம்

ஒன்சைடு ஆம்லெட் வேண்டாம்

சிக்கன், கோழியை நன்கு சூடுபடுத்தும் போது அதன் மீதுள்ள வைரஸ்கள் இறந்துவிடும். அவைகளுக்கு உள்ளே இருக்கும் வைரஸ்கள் கூட இறந்து விடும். எனவே, 70 டிகிரி செல்சியல் சூட்டில் இறைச்சியின் அனைத்து பாகங்களையும் சமைத்து சாப்பிட வேண்டும். முட்டையை ஆப்பாயில், ஒன்சைடு ஆம்லெட் என அரைவேக்காட்டில் சாப்பிடாமல், நன்கு வேக வைத்து சாப்பிடுவது நன்று.

பறவைகளின் மலம்

பறவைகளின் மலம்

முட்டையை வேக வைத்த பிறகு மஞ்சள் கரு திடமாக இருக்க வேண்டும். அது தண்ணீர் போல் உடைந்து ஒழுகினால் அந்த முட்டையை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பறவைகளின் மலம் மற்றும் பிற நீர்த்துளிகள் மூலமாகவே பரவும்.

மனிதர்களுக்கு பரவுமா

மனிதர்களுக்கு பரவுமா

பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்றும் வாய்ப்பு உள்ளது. ஆனால், மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு காய்ச்சல் பரவாது. பறவைக் காய்ச்சல் ஏற்பட்டால் காய்ச்சல், இருமல், சளி, நெஞ்சு வலி, தொண்டை வறண்டு போதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

English summary
Can eggs and chicken be eaten while bird flu is spreading? Doctors have explained. They said it is better to eat eggs well cooked, rather than half-baked, as a one-sided omelette.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X