இரவு நேர லாக்டவுன், முழு லாக்டவுனை ரத்து செய்யுங்கள்... முதல்வருக்கு விக்ரமராஜா மீண்டும் கோரிக்கை
வணிகர்களின் நலன் கருதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பு முதல்வருக்கு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல என்பதை முதல்வர் முக ஸ்டாலின் கருத்தில் கொண்டு தமிழகத்தில் நடைமுறையில் உள்ள இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவற்றை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஞாயிற்றுக் கிழமையும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில் இந்த ஞாயிற்று கிழமையும் முழு ஊரடங்கிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஊரடங்கு அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று வணிகர்கள் சங்க பேரமைப்பின் தலைவர் ஏ.எம் விக்கிரமராஜா, முதல்வர் ஸ்டாலினுக்கு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் இன்று விடுத்துள்ள கோரிக்கையில், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனாவால் வணிகர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இரண்டு தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று பரவலை தடுக்க மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் சுயக்கட்டுப்பாடு மட்டுமே அவசியம் என கருதப்படுகிறது.
தடுப்பூசி நடவடிக்கை, பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றின் அடிப்படையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டுள்ளன.
எனவே கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல என்பதை முதல்வர் முக ஸ்டாலின் கருத்தில் கொண்டு தமிழகத்தில் நடைமுறையில் உள்ள இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவற்றை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று விக்கிரமராஜா, முதல்வருக்கு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் வார இறுதி நாட்களில் அமல்படுத்தப்பட்டிருந்த லாக்டவுன் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஞாயிறு ஊரடங்கை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications