Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அட.. இப்படியாகிபோச்சே.. பொங்கல் பரிசில் ரொக்கப் பணம் கிடையாது.. தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை

பொங்கல் பரிசு விநியோகம் செய்யும் போது மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து உடன் உரிய பொருட்களை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பரிசு விநியோகம் செய்வது குறித்து மண்டல பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் அனுப்பிய சுற்றறிக்கையில் இடம்பெற்றிருந்த ரொக்கத்தொகை என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகிய பொங்கலுக்கான பொருட்கள் மற்றும் மளிகை என 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு மட்டுமே வழங்கப்பட உள்ளது.

தமிழர் திருநாளால் தைப் பொங்கல் பண்டிகையை அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 3ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படவுள்ளது. இதனுடன் ரொக்கத் தொகையும் வழங்கப்படவுள்ளது தொடர்பான அறிவிப்பு கூட்டுறவுத்துறை சங்கங்களின் பதிவாளர் அனுப்பியுள்ள கடிதத்தில் இடம் பெற்றுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு அரிசு குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

 2,15,48,060 குடும்ப அட்டை தாரர்கள்

2,15,48,060 குடும்ப அட்டை தாரர்கள்

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் சென்னை மண்டலத்தின் கூடுதல் பதிவாளர், அனைத்து மண்டல இணை பதிவாளர் ஆகியோருக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவது, முன்னேற்பாடுகள் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அதில், பயனாளி ஒருவருக்கு ரூ.505 செலவில் 2,15,48,060 குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1088,17,70,300 செலவில் வழங்க ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

20 பொருட்கள்

20 பொருட்கள்

தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகிய பொங்கலுக்கான பொருட்கள் மற்றும் மளிகை என 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் கரும்பு ஆகிய பொருட்களை நியாயவிலைக்கடைகள் மூலம் விநியோகிக்க, மாவட்ட ஆட்சியர் தலைமையில், சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், மாவட்ட வேளாண்துறை இணை இயக்குனர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

முந்திரி திராட்சை ஏலக்காய்

முந்திரி திராட்சை ஏலக்காய்

இத்தொகுப்பில் உள்ள 20 பொருட்களில் முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு ஆகியவை மட்டும் கூட்டுறவு சங்கங்களின் மூலம் கொள்முதல் செய்து விநியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தகுதியுள்ள குடும்ப அட்டைகளின் பட்டியலை பெற்று பச்சரிசி, சர்க்கரை மற்றும் துணிப்பை ஆகியவற்றை தமிழக நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் இருந்து பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்பு

குறிப்பாக முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றை பிளாஸ்டிக் உறைகளுக்கு பதில், பழுப்பு நிற காகித உறைகளில் மட்டுமே பொட்டலமிட்டு, விநியோகிக்க வேண்டும் என்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டிய நாட்கள் குறித்த விவரம் வெளியிடப்பட்டதும் அன்றில் இருந்து அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் விநியோகிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை

மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை

பொங்கல் பரிசு தொகுப்பை ஒரே தவணையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியே்ாகிக்க வேண்டும் என்றும் எக்காரணத்தை கொண்டும் பொருட்கள் இல்லை என அட்டைதாரர்களை திருப்பியனுப்பக்கூடாது எனவும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கும் நாட்களில் கடைகளை உரிய நேரத்தில் திறக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து உடன் உரிய பொருட்களை வழங்க வேண்டும்.

சிறப்பாக செயல்படுத்த உத்தரவு

சிறப்பாக செயல்படுத்த உத்தரவு

ஆயிரம் குடும்ப அட்டைகள் வரை உள்ள நியாயவிலைக்கடைகளில் இரு பணியாளர்களும், அதற்கு மேல் உள்ள கடைகளில் 3 பணியாளர்களும் பொங்கல் தொகுப்பை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தேவையான பணியாளர்களை நியமிக்க வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் எவ்வித புகாருக்கும் இடமின்றி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 ரொக்கம் நீக்கம்

ரொக்கம் நீக்கம்

பரிசுத் தொகுப்புடன் ரொக்கத்தொகை வழங்கப்படுவதை நாள்தோறும் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த சுற்றறிக்கையால் குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், மண்டல பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் அனுப்பிய சுற்றறிக்கையில் இடம்பெற்றிருந்த ரொக்கத்தொகை என்ற வார்த்தை தற்போது நீக்கப்பட்டுள்ளது.

 ரொக்கப்பணம் எவ்வளவு

ரொக்கப்பணம் எவ்வளவு

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பரிசுத் தொகை 200 ரூபாயில் தொடங்கியது. பின்னர் 1000 ரூபாயாக பரிசுத் தொகை உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு கொரானா தாக்கம் தமிழகத்தில் அதிகமாக இருந்ததை கருத்தில் கொண்டு பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாட 2500 ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது 1000 ரூபாய் வரை பரிசுத் தொகை வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் பொங்கல் பரிசு மட்டுமே வழங்கப்படும் என்று புதிய அரசாணையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+