கூண்டில் அடைப்பட்ட கிளி எஜமானவர்களுக்கு சேவை செய்கிறது... சிபிஐ ரெய்டு பற்றி ஜோதிமணி எம்பி தாக்கு
சென்னை: ப சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடுகளில் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் ‛‛கூண்டில் அடைக்கப்பட்ட கிளி எஜமானர்களுக்கு சேவை செய்கிறது'' என மத்திய அரசையும், சிபிஐயையும் மறைமுகமாக கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி விமர்சனம் செய்துள்ளார்.
Recommended Video
காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம். இவரது மகன் கார்த்தி சிதம்பரம். இவர் எம்பியாக உள்ளார். இந்நிலையில் இன்று காலையில் ப சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பர் ஆகியோரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு துவக்கினர்.
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதிமந்திரியுமான ப. சிதம்பரத்தின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனை ஏன்
கார்த்தி சிதம்பரம் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் 2010-14 காலக்கட்டத்தில் பஞ்சாபில் மின் திட்டம் ஒன்றில் சீனர்களை பணியமர்த்தும் வகையில் 250க்கும் அதிகமானவர்களுக்கு விசா கிடைக்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் தான் தற்போது சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொள்வதாக கூறப்படுகிறது. முதலில் 7 இடங்களில் சோதனை நடந்ததாக கூறப்பட்ட நிலையில் மொத்தம் 10 பகுதிகளில் சோதனை நடந்தது. இதில் பல இடங்களில் சோதனை நிறைவு பெற்றுள்ளது.

எதுவும் கைப்பற்றவில்லை
ரெய்டு குறித்து ப சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர், ‛‛இன்று காலை சிபிஐ குழு சென்னை மற்றும் டெல்லியில் உள்ள அலுவலக இல்லத்தில் சோதனை மேற்கொண்டது. சோதனை தொடர்பாக காண்பிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையில்(எப்ஐஆர்) குற்றவாளியாக என் பெயர் இடம்பெறவில்லை. சோதனை குழு வீட்டில் இருந்து எதையும் கண்டுபிடிக்கவில்லை. கைப்பற்றவும் இல்லை. இந்த சோதனையின் நேரமானது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் '' என தெரிவித்துள்ளார்.

எஜமானர்களுக்கு சேவை
இதுபற்றி கரூர் காங்கிரஸ் எம்பி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது பதிவில், ‛‛கூண்டில் அடைக்கப்பட்ட கிளி எஜமானர்களுக்கு சேவை செய்கிறது. இவர்கள் விதிகளை பின்பற்ற வேண்டியது இல்லை. இருப்பினும் இது நம்மை தடுத்து நிறுத்தாது'' என ப சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் பெயர்களை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

விமர்சனம் ஏன்?
சிபிஐ, அமலாக்கத்துறையினரை மத்திய அரசு கட்டுப்படுத்தி வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் தான் ஜோதிமணி எம்பி இவ்வாறு பதிவிட்டுள்ளார். இதன்மூலம் மறைமுகமாக சிபிஐயை மத்திய அரசு கட்டுப்படுத்துவதாகவும், மத்திய அரசுக்காக சிபிஐ செயல்படுவதாகவும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications