சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீ நதி போல ஓடிக்கொண்டிரு.. இந்த பிரபலங்கள் எய்ட்ஸ் பாதித்தவர்களா? ஆனாலும் நம்பிக்கையோட வாழ்றாங்க

Google Oneindia Tamil News

சென்னை: உலகின் மிக மோசமான நோயாக கருதப்படும் எய்ட்ஸ்-ஆல் பாதிக்கப்பட்டு நம்பிக்கையுடன் வாழ்ந்த சர்வதேச பிரபலங்கள் உள்ளனர். அவர்கள் யார் என்பது பற்றி பார்ப்போம்.

முறையான சிகிச்சை, மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நோய்களில் முதன்மையானதாக எய்ட்ஸ் உள்ளது. எச்.ஐ.வி. வைரஸ் தொற்றின் காரணமாக எய்ட்ஸ் நோய் ஏற்படுகிறது.

இப்படிப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்மறை எண்ணங்கள், கவலைகளில் இருந்து விடுபட்டு நேர்மறையான நம்பிக்கையான எண்ணங்களை உருவாக்க ஆண்டுதோறும் டிசம்பர் ஒன்றாம் தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உலக எய்ட்ஸ் தினம்: எய்ட்ஸ், எச்ஐவி பாதிப்பு ஏற்படுத்தும் கிரகங்கள் - ஜோதிட ரீதியான காரணங்கள் உலக எய்ட்ஸ் தினம்: எய்ட்ஸ், எச்ஐவி பாதிப்பு ஏற்படுத்தும் கிரகங்கள் - ஜோதிட ரீதியான காரணங்கள்

 1. ஃப்ரெட்டி மெர்குரி

1. ஃப்ரெட்டி மெர்குரி

பிரிட்டனை சேர்ந்த பிரபல பாடகரும், பாடலாசிரியருமான ஃப்ரெட்டி மெர்குரி, உலக புகழ்பெற்ற இசைக்குழுவான குயினின் முன்னணி பாடகராக திகழ்ந்தவர். இவரது பாடல்களுக்கு ஐரோப்பா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்தனர். மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த இவரது வாழ்வில் பேரிடியாக வந்தது எய்ட்ஸ்.

மறைத்த மெர்குரி

மறைத்த மெர்குரி

ஆனாலும் தான் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து இசை, பாடல் என கவனம் செலுத்தினார். இவருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கசிய தொடங்கியவுடன், ஊடகங்களை அழைத்து அவர் உறுதி செய்தார். அப்போது பேசிய அவர், "என்னையும், என்னை சார்ந்து இருப்பவர்களின் நலன் கருதி இதை நான் ரகசியமாக வைக்க முயன்றேன்.

உணர்ச்சி பேட்டி

உணர்ச்சி பேட்டி

ஆனால், ஊடகங்களின் கடும் அழுத்தத்தின் காரணமாக இதை சொல்கிறேன். எனது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் உண்மையை தெரிந்துகொள்வதற்கான நேரம் வந்துவிட்டது. என்னோடு அனைவரும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். மருத்துவர்கள் இந்த கொடூரமான நோய்க்கு எதிராக போராடுவார்கள் என்று நம்புகிறேன்." என்றார் உணர்ச்சி மிகுதியுடன். இவர் கடந்த 1991 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி அவர் உயிரிழந்தார். அப்போது அவரது வயது வெறும் 45.

2. மேஜிக் ஜான்சன்

2. மேஜிக் ஜான்சன்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல கூடைப்பந்து வீரர் மேஜிக் ஜான்சன். என்பிஏவின் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்பட்ட வீரர் அவர். இரண்டு முறை ஒலிம்பிக் தொடர்களில் அமெரிக்காவுக்காக தங்கப்பதக்கம் வென்றவர். பலரும் எய்ட்ஸ் பாதிப்பை வெளியில் சொல்ல தயங்கிய நிலையில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே தான் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டதை வெளிப்படையாக அறிவித்தார் ஜான்சன். தற்போது 63 வயதான ஜான்சன் தனது குடும்பத்தோடு ஆரோக்கியமாக, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருவது, எய்ட்ஸ், எச்ஐவி விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

3. சார்லி ஷீன்

3. சார்லி ஷீன்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகரும், குடியரசு கட்சியின் பிரமுகருமான சார்லி ஷீனும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்தான். கடந்த 2015 ஆம் ஆண்டு இவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டது உலகிற்கு தெரியவந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்தே இவருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. எய்ட்ஸ் நோய் இருப்பதை மறைத்து தன்னோடு உறவு கொண்டதாக சார்லி மீது அவரது முன்னாள் காதலி 1.2 லட்சம் டாலர்கள் கேட்டு இந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

 4. பில்லி போர்டெர்

4. பில்லி போர்டெர்

அமெரிக்காவில் நடிகர், பாடகர், இயக்குநர், எழுத்தாளர் என பன்முக திறமையை கொண்ட பில்லி போர்டர், கடந்த 2021 ஆம் ஆண்டு தான் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்த தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதுவும் 14 ஆண்டுகளாக எய்ட்ஸ் நோயுடன் தான் வாழ்ந்து வருவதாகவும், தற்போது இதை வெளியே சொன்னதால் மனம் அமைதியாக இருப்பதாகவும் அவர் கூறினார். ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் போஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் எய்ட்ஸ் நோயாளியாக நடித்ததற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு புகழ்பெற்ற எம்மி விருதை வென்றார். இன்றும் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார்.

5. கிரெக் லுகேனிஸ்

5. கிரெக் லுகேனிஸ்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல நீச்சல் வீரரான கிரெக் லுகேனிஸ், ஒலிம்பிக்கில் அந்நாட்டிற்காக 4 தங்கம், ஒரு வெள்ளிப்பதக்கத்தை வென்று அசத்தி இருக்கிறார். இது அல்லாமல் உலக சாம்பியன்ஷிப், அமெரிக்க உள்நாட்டு தொடர் பல பதக்கங்களை வென்றவர். இவர் 2 தங்கம் வென்ற சியோல் ஒலிம்பிக் தொடருக்கு 6 மாதங்கள் முன்பாக தனக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதை கண்டறிந்துள்ளார். இருப்பினும் அந்த தொடரில் இவர் கலந்துகொண்டதால் சக நீச்சல் வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என பலரும் விமர்சித்தனர். தற்போது 62 வயதாகும் கிரெக், தற்போது நீச்சல் பயிற்சியாளராக வாழ்ந்து வருகிறார்

English summary
There are many international celebrities who have lived with hope and suffering from AIDS, which is considered to be the worst disease in the world. Let's see who they are.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X