• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

Chandrayaan 2 landing Live: அறிவியலில் தோல்வி என்பதே இல்லை- இஸ்ரோவில் மோடி உரை

|

சென்னை: நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, ஜூலை 22ம் தேதி ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து செலுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் தனது பணியை முழுமையாக செய்ய முடியாமல் போனது இந்திய மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சந்திரயான்-2ல் மொத்தம் மூன்று முக்கிய கலன்கள் இடம் பெற்றிருந்தன. சந்திரயான் விண்கலத்தின், 'விக்ரம்' தரையிறங்கும் கலன் சுற்றுவட்டக் கலனிலிருந்து கடந்த 2ம் தேதி வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இந்த கலமானது இன்று அதிகாலையில் நிலவின் தரைப்பரப்பில் இறங்கும் முயற்சியை மேற்கொண்டபோது துரதிர்ஷ்டவசமாக நிலவின் தரைப்பரப்பிலிருந்து 2.01 கிலோமீட்டர் உயரத்தில் இருந்தபோது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

லேன்டர் விக்ரமுக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியவில்லை. பெரும் வரலாற்றைக் காண ஆவலாக காத்திருந்த நாட்டு மக்களுக்கு இது பெரும் சோகத்தையும் ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது. அதேசமயம், ஆர்பிட்டர் தொடர்ந்து நல்ல நிலையில் செயல்பட்டு வருவதால் திட்டம் தோல்வி அல்ல என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Newest First Oldest First
8:42 AM, 7 Sep
கண்ணீர் மல்கிய இஸ்ரோ தலைவர் சிவனை கட்டியணைத்து முதுகில் தட்டி கொடுத்தார் மோடி. இஸ்ரோவில் உரையாற்றிவிட்டு மோடி வெளியேறியபோது உணர்ச்சி மிகு தருணம்.
8:32 AM, 7 Sep
மிக விரைவில் ஒரு புதிய விடியலும் பிரகாசமும் இருக்கும். அறிவியலில் தோல்வி என்பதே இல்லை, அறிவியல் என்பது ஆய்வு மற்றும் முயற்சிகள் மட்டுமே - மோடி உரை.
8:16 AM, 7 Sep
இன்று சில தடைகள் ஏற்பட்டுள்ளன, ஆனால் அது நமது உறுதியை பலவீனப்படுத்தாது. இந்த தடைகள் நம்மை பலவீனப்படுத்துவதற்கு பதிலாக நம்மை பலப்படுத்துகிறது - மோடி உரை.
8:16 AM, 7 Sep
விஞ்ஞானிகளே கவலை வேண்டாம், இந்தியா உங்களோடு இருக்கிறது - மோடி பேச்சு
8:11 AM, 7 Sep
பாரத் மாதா கி ஜெய்.. என்ற கோஷத்துடன் இஸ்ரோவிலிருந்து நாட்டு மக்களிடம் மோடி உரை ஆரம்பம்
8:10 AM, 7 Sep
சந்திரயான் 2 திட்டத்தின் நிலை குறித்து மோடி பேச்சு
8:07 AM, 7 Sep
பெங்களூர் இஸ்ரோ மையத்திற்கு மீண்டும் பிரதமர் மோடி வருகை. விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு, நாட்டு மக்களிடம் மோடி உரையாற்ற திட்டம்.
8:03 AM, 7 Sep
இன்னும் சில நிமிடங்களில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை. சந்திரயான் 2 லேண்டருடனான தொடர்பை விஞ்ஞானிகள் இழந்தது பற்றி உரை.
6:12 AM, 7 Sep
இஸ்ரோவின் சந்திரயான்-2 முயற்சிக்கு ராகுல் காந்தி வாழ்த்து. உங்கள் பணி வீணாகாது என்று ராகுல் காந்தி நம்பிக்கை.
6:08 AM, 7 Sep
காலை 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்துகிறார் பிரதமர் நரேந்திர மோடி. சந்திராயன்-2 லேண்டர் உடன் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் உரையாற்றுகிறார்.
2:27 AM, 7 Sep
எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துகள். நாம் இந்த பயணத்தை தொடர்வோம். நான் உங்களுடன் இருக்கிறேன் -மோடி.
2:26 AM, 7 Sep
நாடு உங்களை நினைத்து பெருமை கொள்கிறது.நாம் மீண்டும் முயற்சி செய்வோம் - பிரதமர் மோடி
2:23 AM, 7 Sep
நம்பிக்கையாக இருங்கள் - பிரதமர் மோடி
2:23 AM, 7 Sep
இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி பேசி வருகிறார்
2:21 AM, 7 Sep
தைரியமாக இருங்கள் - இஸ்ரோ அதிகாரிகள் நம்பிக்கை
2:18 AM, 7 Sep
2.1 கிமீ வரை விக்ரம் லேண்டர் சரியாக இறங்கியது. அதன்பின் விக்ரம் லேண்டர் உடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. டேட்டாக்களை சோதனை செய்து வருகிறோம்.தொடர்ந்து ஆலோசனை நடந்து வருகிறது- இஸ்ரோ இயக்குனர் சிவன்.
2:14 AM, 7 Sep
மிக மிக பதற்றமான நிலையில் இஸ்ரோ கண்காணிப்பு மையம்
2:11 AM, 7 Sep
சற்று முன் ஆர்பிட்டரில் இருந்து சிக்னல் கிடைத்திருப்பதாக தகவல்
2:11 AM, 7 Sep
சிக்னல் பிரச்சனை சரியானது: சந்திரயான் 2 உடன் மீண்டும் தொடர்பு
2:07 AM, 7 Sep
இஸ்ரோ மிஷன் சென்டரில் இருந்து பிரதமர் மோடி வெளியேறினார்
2:02 AM, 7 Sep
விக்ரம் லேண்டர் மற்றும் இஸ்ரோ கண்ட்ரோல் அறைக்கு இடையில் தொலைதொடர்பில் சிக்கல்.
2:01 AM, 7 Sep
பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்து வருகிறார்கள்.
1:59 AM, 7 Sep
சந்திரயான் 2 வை நிலவில் தரையிறக்குவதில் தாமதம்
1:53 AM, 7 Sep
நிலவில் இருந்து வெறும் 1 கிமீ தூரத்தில் உள்ளது சந்திராயன் 2. இனி சந்திரயான் 2 மெதுவாக இறங்கும்
1:51 AM, 7 Sep
நிலவில் இருந்து வெறும் 3 கிமீ தூரத்தில் உள்ளது சந்திராயன் 2. நிலவை நெருங்கியது சந்திரயான் 2 லேண்டர்
1:50 AM, 7 Sep
நிலவில் இருந்து வெறும் 7 கிமீ தூரத்தில் உள்ளது சந்திராயன் 2
1:48 AM, 7 Sep
நிலவில் இருந்து 25 கிமீ தூரத்தில் உள்ளது சந்திரயான் 2
1:47 AM, 7 Sep
நிலவை நோக்கி மிக வேகமாக இறங்கி வருகிறது சந்திரயான் 2. 4 எஞ்சின்கள் இயங்குவதால் வேகமாக இறங்கி வருகிறது.
1:47 AM, 7 Sep
நிலவில் இருந்து 120 கிமீ தூரத்தில் உள்ளது சந்திரயான் 2
1:45 AM, 7 Sep
நிலவில் இருந்து 130 கிமீ தூரத்தில் உள்ளது சந்திரயான் 2
READ MORE

Chandrayaan 2 LIVE: Moon landing is scheduled for September 7

English summary
The second de-orbiting maneuver for Chandrayan 2 spacecraft was performed successfully today, beginning at 3:42 am as planned, using the on-board propulsion system. The duration of the maneuver was 9 seconds.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X