கவனித்தீர்களா.. இவையெல்லாம் கிடைக்கிறதா.. ரேஷன் கடைகளில் நடந்த மாற்றங்கள்?
சென்னை : ரேஷன் கடைகளில் பச்சரிசி தருவது அடியோடு நிறுத்தப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. அதேபோல் ரேஷன் கடைகளுக்கு பொருள் வாங்க சென்றால் எண்ணெய் அல்லது பருப்பு தருவது இல்லை. கேட்டால் ஸ்டாக் இல்லை பணியாளர்கள் கூறுகிறார்கள் இந்த குளறுபடிகளை களைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பல மாதங்களாகவே குண்டரிசி மற்றும் புழுங்கல் அரிசி மட்டுமே தரப்படுகிறது. ஏதோவது ஒரு பொருள் இல்லை என்று சொல்வது அதிகரித்துள்ளது. அனைத்து பொருட்களும் ஒரே நாளில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுகக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதேபோல் ரேஷன் கடைகளுக்கு செல்லும் மக்கள் கால்கடுக்க நின்று பொருள் வாங்க பதிவு செய்ய அருகில் செல்லும் போது, ரேகை ஒத்துபபோகவில்லை. போய்விட்டு பிறகு வாருங்கள் என்று திருப்பி அனுபப்படுவதும் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.

மக்களுக்கு கடினம்
இந்தியாவிலேயே பொதுவிநியோகத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. ஆனால் துரதிஷ்டவசமாக கடந்த ஓரண்டாகவே, அதாவது அதிமுகஆட்சியிலும் சரி, திமுக ஆட்சியிலும் சரி, பொதுவிநியோகத்திட்டத்தின் முறைகேடுகளை தடுப்பதாக கூறி கொண்டுவரப்பட் கைரேகை திட்டம், சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படாததால் மக்களுக்கு அசவுகரித்தை தந்துள்ளதாக புகார் எழுகிறது.

எஸ்எம்எஸ்
படித்தவர்கள், ஓரளவு வாசிக்க தெரிந்தவர்கள் மட்டுமே ரேஷன் கடைகளில் தங்கள் பெயரில் போட்டுள்ள பொருட்களை எஸ்எம்எஸ் இல் அறிய முடியும். மற்றவர்களால் அறிய முடியாது. அவர்கள் பெயரில் உள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்படுகிறதா அல்லது போடப்படுவது இல்லையா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. ஏனெனில் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்க சென்றால், எண்ணெய் அல்லது பருப்பு தரப்படுவது இல்லை என்று குற்றச்சாட்டுகள் உள்ளது.

பச்சரிசி
பெரும்பாலும் துவரப்பருப்பு தரப்படுவதே இல்லையாம். துவரம்பருப்பு கொள்முதலை அரசு குறைத்துவிட்டதா அல்லது நிதி பற்றாக்குறையால் நிறுத்திவிட்டதா என்று தெரியவில்லை என்கிறார்கள் பொதுமக்கள். மக்கள் பொருட்கள் வாங்கப்போனால் ஏதாவது ஒன்று ஸ்டாக் இல்லை என்று பதில் வருகிறது. இந்த பொருட்கள் எப்போது மீண்டும் போடுவார்கள் என்பது குறித்து தகவலும் மக்களுக்கு கிடைப்பது இல்லை. இதேபோல் பச்சரிசியை பொதுமக்களுக்கு விநியோகம் செய்வது அடியோடு நிறுத்தப்பட்டதா அல்லது குறைந்துவிட்டதா என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஏனெனில் எந்த ரேஷன் கடையிலும் குண்டரிசி மட்டுமே தரப்படுகிறதாம். பச்சரியை மீண்டும் அரசு பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது

ஊதியம் இழப்பு
ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துதான் வாங்க வேண்டிய நிலை உள்ளது. காரணம் கைரேகை முறை. இதனால் அன்றைய நாள் ஊதியத்தை ஏழைமக்கள் இழக்கும் நிலை இருக்கிறது. இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் எப்போது ரேஷன்கடைகளில் அரிசி பருப்பு போடுவார்கள் என்று நாமே தான் போய் பார்த்து பார்த்து காத்திருந்து வாங்க வேண்டும். இன்றைய தொழில்நுட்ப வசதிக்கு, இன்றைக்கு இத்தனை மணிக்கு வந்து உங்களுக்கான பொருட்களை வாங்கி கொள்ளுங்கள் என்று மெசேஜ் அனுப்பி வைக்க அரசால் இயலும். அந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தினால் பல ஏழைகளுக்கு பொருட்கள் சரியான நேரத்தில் கிடைக்கும்,.

அரசால் முடியும்
ரேஷன் கடைகளில் கைரேகை ஒத்துப்போகாவிட்டால் பொருள் இல்லை என்று திருப்பி அனுப்புவதாக புகார்கள் உள்ளது. இதற்கான தீர்வுளை வழங்கி அவர்களின் கைரேகைகளை சேர்க்கு ம்நடைமுறைகளையும் அங்கேயே மக்களுக்கு தெரியும்ப டி தெளிவாக பேனர் வைத்தால் சிறப்பாக இருக்கும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, நீக்கம் என்பது பற்றி தெளிவான தகவல்கள் ரேஷன் கடைகளிலேயே மக்களுக்கு கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அரசு நினைத்தால் ரேஷன் பொருட்களை வீட்டிலேயே டெலிவரி செய்ய முடியும். அரசு இதை நடைமுறைப்படுத்தினால் நிச்சயம் பலரது வாழ்த்தை பெரும் என்கிறார்கள் பொதுமக்கள்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications