சென்னை அருகே பிரபல கல்லூரியின் 5வது மாடியில் இருந்து குதித்த மாணவி.. பெற்றோர் கண் முன்னே துயரம்
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரியின் 5வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டார். பெற்றோர் கண் எதிரே இந்த பெரும் சோகமான சம்பவம் நடந்திருக்கிறது. தற்கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார கல்லூரியில் ஏதாவது பிரச்னையா, வீட்டிலோ, நண்பர்கள் வட்டாரத்திலோ ஏதாவது பிரச்னையா என்று விசாரிக்கிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தண்டலம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரியில் அபிதா (19) என்ற மாணவி படித்து வந்தார். இவர் அரியலூர் மாவட்டத்தில் சிமென்ட் தொழிற்சாலையில், மேலாளராக உள்ள தங்ககுமார் (கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ) என்பரின் மகள் ஆவார். தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்த மாணவி கொரோனா காரணமாக ஆன்லைன் மூலம் பாடம் படித்து வந்தார்.
சமீபத்தில் அரசு உத்தரவுபடி 2ம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறக்கப்பட்டது. இதையடுத்து மாணவி அபிதா, கல்லூரிக்கு வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தார். இந்நிலையில் மாணவி அபிதா கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

படிக்க விரும்பவில்லை
மன உளைச்சல் காரணமாக, படிப்பில் ஆர்வம் இல்லாமல் , படிக்க விரும்பவில்லை என பெற்றோரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால் பெற்றோர் அதனை ஏற்காமல் கல்லூரியில் படி என்று சொல்லி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடைய அபிதாவிற்கு படிக்க விருப்பம் இல்லாததை கல்லூரி நிர்வாகம், அபிதாவின் பெற்றோருக்கு சொல்லியிருக்கிறதாம்.

பெற்றோர் வந்தனர்
அதன்பேரில், அபிதாவின் பெற்றோர், நேற்று காலை ஸ்ரீபெரும்புதூர் வந்தனர். மதியம் அவர்கள், கல்லூரி நிர்வாகத்தினரிடம் பேசியிருக்கிறார்கள் அப்போது, " உங்கள் மகள் அபிதா, மன அழுத்தத்தில் இருக்கிறார். நாங்கள் பலமுறை கவுன்சிலிங் கொடுத்தும் சரியாகவில்லை. எனவே நீங்கள் உங்கள் மகளை வீட்டுக்கு அழைத்து செல்லுங்கள். மன அழுத்தம் நீங்கி, அவர் முழுமையாக குணமடைந்த பின்னர், மீண்டும் கல்லூரிக்கு அழைத்து வாருஙகள்" என்று கூறியுள்ளனர். அதற்கு, மாணவியின் பெற்றோரும் சம்மதித்தனர். இதையடுத்து, மகளை ஊருக்கு அழைத்து செல்ல முடிவு செய்தார்கள்.

5வதுமாடியில் இருந்து குதிப்பு
அப்போது அபிதா, பெற்றோரிடம் இங்கேயே இருங்கள். நான் மேலே சென்று அறையில் உள்ள தனது உடமைகளை எடுத்து வருகிறேன்' என கூறிவிட்டு, 5வது மாடிக்கு சென்றார். அங்கு சென்ற மாணவி, மாடியில் இருந்து கிழே குதித்தார். இதை பார்த்த பெற்றோரும், கல்லூரி ஊழியர்களும் பதறியடித்து கொண்டு மாணவியை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

விசாரணை
அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி அபிதா பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். தற்கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார கல்லூரியில் ஏதாவது பிரச்னையா, வீட்டிலோ, நண்பர்கள் வட்டாரத்திலோ ஏதாவது பிரச்னையா என்று விசாரிக்கிறார்கள்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications