சென்னை மக்களே உஷார்.. போகியால் அதிகாலையிலேயே அதிகரித்த காற்று மாசு.. வாகன ஓட்டிகள் அவதி-எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று போகி பண்டிகை கொண்டாடப்பட்டு வுருகிறது. சென்னையில் அதிகாலையில் இருந்தே பொதுமக்கள் பழைய பொருட்களை தீவைத்து எரித்து வருவதால் கரும்புகை அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் காற்றுமாசு அதிகரித்துள்ளது. காலையிலேயே காற்றின் தரக்குறியீடு என்பது 100யை கடந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படும் நிலையில் ஆஸ்துமா, சுவாச பிரச்சனை உள்ளவர்கள் கவனமாக இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இன்று போகி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ‛தை பிறந்தால் வழிபிறக்கும்' என பெரியவர்கள் கூறும் நிலையில் தை மாதத்தை புதிதாக தொடங்கும் வகையில் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் ஆண்டுதோறும் போகி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
போகி பண்டிகையின்போது வீட்டில் உள்ள தேவையில்லாத மற்றும் பழைய பொருட்களை எரிக்கப்டும். இந்த ஆண்டுக்கான போகி பண்டிகை தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

போகி பண்டிகை கொண்டாட்டம்
போகி பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பழைய பொருட்களை அதிகாலை முதலே தீயிட்டு எரித்து வருகின்றனர். சென்னை முதல் கன்னியாகுமரி வரை அதிகாலை முதல் போகி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னையில் போகி
சென்னையின் பல்வேறு இடங்களிலும் போகி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். சில இடங்களில் போகி பண்டிகையை முன்னிட்டு மேளம் அடித்து பொருட்கள் தீயிட்டு எரிக்கப்படுகிறது. இந்நிலையில் தான் சென்னையில் காற்று மாசு என்பது காலை முதல் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

காற்று மாசு அதிகரிப்பு
அதன்படி காலை முதல் சென்னையில் காற்றின் தரக்குறியீடு 100யை தாண்டி உள்ளது. காலை 6 மணி நிலவரப்படி ஆலந்தூரில் 155, பெருங்குடியில் 113 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகி உள்ளது. இதுதவிர கொடுங்கையூரில் 94, மணலியில் 87, அரும்பாக்கத்தில் 86, வேளச்சேரியில் 84, ராயபுரத்தில் 82 என்ற அளவில் காற்றின் மாசு அடைந்துள்ளது என மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மக்களுக்கு அட்வைஸ்
மேலும் காற்று மாசுவின் அளவு என்பது இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் ஆஸ்துமா, சுவாச பிரச்சனை உள்ளவர்கள் சென்னையில் வெளியே நடமாடாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதோடு சுற்றுச்சூழல் மாசுபாட்டை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக், டயர் உள்ளிட்டவற்றை எரிப்பதை தவிர்க்கும்படி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுரை வழங்கி உள்ளனர்.

வாகன ஓட்டிகள் அவதி
சென்னையில் ஏற்கனவே பனிமூட்டம் நிலவி வருகிறது. இதற்கிடையே தான் இன்று போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. பனிமூட்டம் மற்றும் தீயினால் உருவான புகை ஆகியவற்றால் சென்னையின் சில இடங்களில் காலை முதல் புகைமூட்டம் உருவானது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.












Click it and Unblock the Notifications