வருகிறது சிங்கார சென்னை 2.0 திட்டம்.. மேம்பாலங்கள், மெட்ரோ நீட்டிப்பு.. சென்னைக்கு ஸ்பெஷல் அறிவிப்பு
சென்னை: 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் சென்னை நகரம் சார்ந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
பட்ஜெட் கூட்ட தொடர் இன்று தொடங்கி செப்.21ம் தேதி வரை நடைபெறுகிறது. நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

3 இடங்களில் மேம்பாலங்கள்
தனது பட்ஜெட் உரையில், சென்னைக்கு முக்கியத்துவம் தந்து சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதோ அதுகுறித்த ஒரு ஹைலைட்ஸ்:
சென்னையில் 3 இடங்களில் ரூ.335 கோடியில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும். சென்னையில் கணேசபுரம் சுரங்கப்பாதை, கொன்னூர் நெடுஞ்சாலை, தெற்கு உஸ்மான் சாலை என மூன்று இடங்களில் ரூ.335 கோடியில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும்.

சிங்காரச் சென்னை
சிங்கார சென்னை 2.0 திட்டம் தொடங்கப்படும். இந்த திட்டத்தின்கீழ், சென்னையில் பொது இடங்களில் சுவரொட்டிகள் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையுடன் இணைந்த பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு ரூ.2,056 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
பொது இடங்களில் சுவரொட்டிகள் இல்லாத நகரமாக சென்னை மாற்றப்படும்.

சென்னை மெட்ரோ ரயில்
2026ம் ஆண்டு டிசம்பருக்குள் சென்னை மெட்ரோ ரயில் 2ம் திட்டம் முடிக்கப்படும். சென்னை விமான நிலையத்தில் இருந்து தாம்பரம் வழியாக கிளம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்கும் பணி விரைவாக தொடங்கப்படும்.

பூந்தமல்லி மெட்ரோ
சென்னை பூந்தமல்லி - கோடம்பாக்கம் இடையே மெட்ரோ சேவையை 2025ல் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரகடத்தில் மருத்துவ சாதனங்கள் பூங்கா & திருவள்ளுரில் மின் வாகன பூங்கா ஏற்படுத்தப்படும். இவ்வாறு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். அதேநேரம், கோவை, மதுரை ஆகிய அடுத்தகட்ட நகரங்களின் வளர்ச்சி குறித்த பார்வையையும் பட்ஜெட்டில் வெளிப்படுத்தினார் நிதித்துறை அமைச்சர்.

கோவை, மதுரை மெட்ரோ
ஆம்.. கோவை மெட்ரோ ரயில் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும், மதுரையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் ஆராயப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சிங்காரச் சென்னை திட்டம் என்றால் என்ன?
1996-2001ல் கருணாநிதி தலைமையில் திமுக அரசு நடைபெற்றபோது, சென்னை மாநகராட்சியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமை ஸ்டாலினுக்கு கிடைத்தது. அப்போது கருணாநிதி அரசின் ஒத்துழைப்புடன் சிங்காரச் சென்னை உருவாக்கும் பணியினை மேற்கொண்டு 10 சிறுமேம்பாலங்கள் கட்டப்பட்டன. பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பூங்காக்கள் சீரமைக்கப்பட்டும் உருவாக்கப்பட்டது. முன்பெல்லாம் சென்னையில், வீடுகள், உற்பத்தி நிறுவனங்கள், பிற சேவை நிறுவனங்களிலிருந்து குப்பைகளை சேகரித்து அகற்றுவதற்கான கட்டமைக்கப்பட்ட மற்றும் அறிவியல் முறை இல்லை. வீட்டுக் கழிவுகள் தெருவில் வீசப்பட்டு, ஒவ்வொரு தெருவிலும் மலை மலையாக குவிந்து காணப்பட்டன. இதனால், அந்த காலகட்டட்த்தில், நகரத்தில் கொசு தொல்லை அதிகமாக இருந்தது. சென்னை என்றாலே நாற்றமும், கொசுவும்தான் மக்களுக்கு நினைவுக்கு வந்தது. மிகவும் அசுத்தமான நகர பட்டியலில் சென்னை இரண்டாம் இடம் வகித்தது. இந்த நிலையில்தான் சிங்கார சென்னை திட்டத்தின் மூலம், இந்த நிலை மாற்றப்பட்டு இப்போதுள்ள சென்னைக்கு அடிக்கோல் நாட்டப்பட்டது. இந்த நிலையில்தான், சிங்காரச் சென்னை 2 திட்டத்தை கையில் எடுப்போம் என பட்ஜெட்டில் அரசு அறிவித்துள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications