போகி பண்டிகை: டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் ரூ.1000 அபராதம்.. சென்னை மாநகராட்சி வார்னிங்!
சென்னை: போகி பண்டிகை அன்று சென்னையில் டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுவித்துள்ளது. இந்த ஆண்டுதான் முதன் முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் 3 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். குக்கிராமத்தில் நமது கலாசார நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் என களைகட்டும். பொங்கல் திருநாளின் முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடப்படும்.

போகி பண்டிகை
போகி பண்டிகை 'பழையன கழித்து, புதியன புகவிடும்' என்று காலம்காலமாக சொல்லப்படுகிறது. அதாவது இந்த நாளில் பழையவற்றையும், தேவை இல்லாததையும் தூக்கி எறிவது மக்களின் வழக்கம். சூரிய நாட்காட்டியின் படி தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ரூ.1,000 அபராதம்
பழையவற்றையும், தேவை இல்லாததையும் மக்கள் தீ வைத்து எரிப்பார்கள். டயர், பிளாஸ்டிக் பொருட்களை தீ வைத்து எரிப்பார்கள். இந்த நிலையில் போகி பண்டிகையான நாளை(ஜன.13) சென்னை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக், டயர்கள் போன்ற பொருள்களை எரித்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதிகாரிகளுக்கு உத்தரவு
இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் அனைத்து மண்டலங்களில் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாவும் சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் போகி பண்டிகையின்போது பிளாஸ்டிக், டயர்களை எரிக்க கூடாது என்று மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடுவது வழக்கம்.

சுற்றுச்சூழல் மாசுபாடு
ஆனால் இந்த ஆண்டு எச்சரிக்கையுடன் சேர்த்து அபராதமும் முதன் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாகத்தான் தீபவாளி பண்டிகையின்போது நேரக் கட்டுப்பாடுகளுடன் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை கருத்தில் கொண்டே சென்னை மாநகராட்சி இந்த முறை மிக கடுமையான எச்சரிக்கையை வழங்கி உள்ளது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications