சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லாக்டவுன் ஓபன் பண்ணதும் இப்படியா? சென்னையில் துணிக்கடை தந்த அடடே ஆபர்.. குவிந்த கூட்டம்.. சீல்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் துணிக்கடை ஒன்றின் முன் மக்கள் கூட்டம் அலைமோதிய காரணத்தால் அங்கு தற்போது அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் உயர்ந்து வரும் நிலையிலும் கூட லாக்டவுன் தளர்வுகள் அமலுக்கு வந்து இருக்கிறது.தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது. இ பாஸ் மாவட்டங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பிவிட்டது என்று கூறலாம். மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சென்னையில் அனைத்தும் செயல்பாட்டிற்கு வந்து இயல்புநிலை திரும்பி உள்ளது.

சென்னை.. மதுரை, கோவை, திருச்சி, நாகர்கோவில்.. ரயில் ஓடப் போகுது.. ரிசர்வ் பண்றவங்க பண்ணிக்கலாம்! சென்னை.. மதுரை, கோவை, திருச்சி, நாகர்கோவில்.. ரயில் ஓடப் போகுது.. ரிசர்வ் பண்றவங்க பண்ணிக்கலாம்!

சென்னை எப்படி

சென்னை எப்படி

இந்த நிலையில் சென்னையில் துணிக்கடை ஒன்றின் முன் மக்கள் கூட்டம் அலைமோதிய காரணத்தால் அங்கு தற்போது அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தியாகராய நகரில் பல்வேறு துணிக்கடைகள் உள்ளது. அங்குதான் இந்த கடையும் அமைந்துள்ளது. கடை சில வாரங்களுக்கு முன் கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், இன்று இந்த கடை திறக்கப்பட்டது.

அதிரடி ஆபர்

அதிரடி ஆபர்

புதிதாக கடை திறக்கப்பட்ட நிலையில், மக்களை கவரும் வகையில் நிறைய அதிரடி ஆபர்கள் போடப்பட்டது. உதாரணமாக ஒரு பேண்ட் 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஜீன்ஸ் 60 ரூபாய்க்கு விற்கப்பட்டது. டி சர்ட் 8 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பல்வேறு விலைகளில் துணிகள் ஆபரில் விற்கப்பட்டது. அதிலும் 100 ரூபாய்க்கும் குறைவான விலையில் நிறைய துணிகள் விற்கப்பட்டது.

அதிரடி சலுகை

அதிரடி சலுகை

இப்படி அதிரடி சலுகைகள் கொடுத்த காரணத்தால் காலையிலேயே அந்த கடை முன் மக்கள் கூட்டம் குவிந்தது. இவ்வளவு பேர் வருவார்கள் என்று அந்த கடை ஊழியர்கள் கூட எதிர்பார்க்கவில்லை. அங்கு மொத்தமாக மக்கள் கூட்டம் கூடி முண்டி அடிக்க தொடங்கினார்கள். சமூக இடைவெளி இன்றி மக்கள் நெருக்கமாக வரிசையில் நிற்க தொடங்கினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சீல் வைத்தனர்

சீல் வைத்தனர்

இதையடுத்து போலீசாருக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது . இதையடுத்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் அந்த புதிய கடைக்கு சீல் வைத்தனர். விதிமுறைகளை மீறியதாகவும், மக்கள் கூட்டம் கூட வழி செய்ததாகவும் கூறி கடைக்கு சீல் வைத்தனர். அதோடு போலீசார் அங்கிருந்த கூட்டத்தை கலைத்தனர்.

English summary
Chennai: Corporation officials closed a new shop for giving huge offers to people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X